1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காற்று வாங்கப் போனேன் , கவிதை வாங்கி வந்தேன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Mar 31, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இனிய வாசகர்களே, இந்தக் கவிதையை www.youtube.com/watch?v=vk_WIHqlItE என்றப் பாடலின் பல்லவியின் மெட்டில் படித்துப் பார்த்துக் கருத்துப் பதியுங்களேன் ! மிக்க நன்றி !


    காதல் நம்மைத் தழுவும் போதும் ,
    காற்று மெல்ல வருடும் போதும் ,
    பாடல் இதயம் முழுதும் வியாபிக்கும் !


    முயன்று வேலை செய்யும் போதும் ,
    துயில விழிகள் மூடும் போதும்
    பயிலும் பாடல் மனதைத் தாலாட்டும் !


    சோர்வு நம்மைத் தாக்கும் போதும்
    தீர்வு தேடிக் குழம்பும் போதும்
    ஈர்க்கும் இசைத் தெளிவைத் தந்துவிடும் !


    இராகக் குயிலின் இசையைக் கேட்டால்
    சோகம் மறைந்து சுகங்கள் கூடும் ,
    தேகம் நெகிழ்ச்சிக் கடலில் தள்ளாடும் !


    பாசம் விழியில் பொங்கும் போதும்,
    நேசம் நெஞ்சில் வழியும் போதும் ,
    இசையை எந்தன் செவிகள் சுவாசிக்கும் !


    வான மங்கை மேனி எங்கும்
    நாண வண்ணம் பூசும் நேரம்,
    எண்ணம் கவிதை எழுதத்தான் தூண்டும் !


    சோலைப் பூக்கள் விரியும் மாலை ,
    காலை நடை பயிலும் வேளை ,
    ஓலையொன்றில் கவிதைப் பா பூக்கும் !


    எந்த எண்ணம் தோன்றும் போதும்
    சந்த வடிவில் எழுதிப் பார்த்தால்
    அந்த நிமிடம் கவிதைப் பிறந்துவிடும் !!!


    Regards,

    Pavithra
     
    jskls, periamma and kaniths like this.
    Loading...

  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Paadi pathen sagikala! En kuralai sonen! :D Kavithai mikka nandru!
    Neenga soliteenga! :p Thanks for sharing!
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @periamma , என்ன பெரியம்மா நம்ம @kaniths என்னடான்னா சகிக்கலைன்னு கமெண்ட் போட்டுட்டாங்க ! நீங்க வெறும் லைக் போட்டுட்டு விட்டுட்டீங்க, @jskls தோழி லக்ஷ்மியோ அது கூட பண்ற மாதிரி இல்லன்னு மௌனமாயிட்டாங்க. கவிதை அவ்வளோ மொக்கையாவா இருக்கு ?!! LOL :tonguewink: :laughing:
     
    jskls and kaniths like this.
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Acho I miss animated smilies!! Rotfl ponga! Ha ha :tearsofjoy::tearsofjoy:
     
    PavithraS likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நான் இன்னைக்கு கொஞ்சம் பிஸி மா .காலையில ஒரு அறுபதாம் கல்யாணம் போயிட்டு வந்தேன் .சாயங்காலம் மாதாந்திர மளிகை வாங்க போயிட்டேன். இப்ப வருது பாருங்க உங்க கவிதைக்கு பதில்
     
    kaniths likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காதலுக்கு ஒரு பாட்டு
    தூங்குவதற்கு ஒரு பாட்டு
    சோகம் மறைய ஒரு பாட்டு
    தெளிவுக்கு ஒரு பாட்டு
    பாசத்துக்கு ஒரு பாட்டு
    நேசத்துக்கு ஒரு பாட்டு
    இது போதாது என்று
    சிவந்த வானம் கண்டு ஒரு பாட்டு
    பூக்கள் விரியும் போது ஒரு பாட்டு
    'நடை பயிலும் போதும் ஒரு பாட்டு
    அம்மம்மா இசையின் வலிமை மிக பெரியது .
    இவை அனைத்தும் நம் பவித்ரா கவிதையில் தெரிகிறது .சந்தம் அமைத்து பாடுவதில் பவித்ராவுக்கு நிகர் பவித்ராவே
     
  7. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Pavithra, கவிதை அருவி மாதிரி கொட்டி விட்டீர்கள். கவிதை மனதை தாலாட்டுகிறது. உங்கள் மனதில் கவிதை ஊற்று இருக்கும் என நினைக்கிறேன். அருமை
     
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா சபாஷ் மா, பவித்ராவின் பாட்டுக்கு எதிர் பாட்டு. லவ் லி
     
    kaniths likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Very nice Pavithra. As I always say, it is our privilege to enjoy your writing. Thanks for writing such wonderful piece and sharing with us.
    Tamil Sangathil Paadadha Kavidhai -
    Idhai Sandathil Maradha Nadayudan
    kavi sangathil yaar Thandadhu ?

    Music is intertwined in our lives. Music is breath for many of us. Blessed we are to live in this era of wonderful music with so many legendary musicians / songwriters / singers.
    கண்ணில் வரும் ஒரு துளியும்
    கரைந்து போகும் இசை மகளின் தாலாட்டில்
    நெஞ்சில் இருக்கும் வலியும்
    மறைந்து போகும் இசை மகளின் வருடலில் ...
     
    kaniths, periamma and PavithraS like this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @periamma Whistle whistle super asaththureenga .... Arasiyal, pothunalan, theviravaadham, theiveegam ithuvum serthukkonga
     
    kaniths and PavithraS like this.

Share This Page