1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் திருநாள்

Discussion in 'Regional Poetry' started by Gaiya3, Feb 23, 2017.

  1. Gaiya3

    Gaiya3 Gold IL'ite

    Messages:
    179
    Likes Received:
    206
    Trophy Points:
    100
    Gender:
    Female
    அவன்

    உனக்கு அனைத்துமானேன்
    உன்னை நித்தம் அணைக்க
    உன் எதிர்பார்ப்பை தணிக்க
    வழியின்றி தவிக்கிறேன்
    நீ எண்ணில் உண்டு
    உள்ளதால் தான் உள்ளம்
    அமைதி கொண்டிருக்கிறது
    உன்னில் நானிமிருக்கிறேன்
    நானிருப்பதால் தானோ நீயும்
    தவிக்கிறாய் எனைப்போன்றே
    காதலர் தினம் இன்று
    காதல் மட்டுமே உடன் கொண்டு
    கட்டுண்டு கிடக்கிறோம் வாழ்கிறோம்
    வாழ்வு தொடர காதல் வாழ
    நம் நெஞ்சமும் இணைந்தே
    நினைந்தே வாழ்ந்திடுவோம்
    வாழ்த்த மட்டுமே முடிகிறது
    வசந்தம் வீசும் நினைவுகளினூடே

    அவள்

    உன்னை கண்ட நேரம்
    மனதில் வலி நீங்கி
    இன்பம் மலர்ந்த நேரம்
    உன் குரலை கேட்ட நொடி
    மெல்லிய சங்கீதம்
    இதயத்தில் ரீங்காரமாய்
    ஒலிக்குதடா

    காரணமின்றியே நேசித்தேன்
    காதலித்தபின் ஆயிரம் காரணங்கள்
    வரிசையிட்டு நின்றன
    செல்லமாக கோபிக்க காரணம்
    ஆயிரம் இருந்தும் என்
    காதலுக்கு உயிரளித்த
    உன் மேல் கோபம்
    கொள்ள கூட தெரியவில்லை !
    புன்னகையை காதல் மொழியாய்
    வெளியிடுகிறேன்

    காதலுக்கு ஒரு நாளா
    காதலர்க்கு ஒரு நாளா
    காதலிக்க ஒரு நாளா
    காதலிக்கு ஒரு நாளா
    இந்த வாழ்க்கை போதுமோ
    என் காதலை உறைக்க
    உன்னை காதலிக்க
    நேரம் போதவில்லை
    உனக்காக காத்திருக்க
    நேரம் போவதில்லை
     
    Loading...

Share This Page