1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் கல்யாணம்

Discussion in 'Stories in Regional Languages' started by sriradh, Apr 21, 2010.

  1. sriradh

    sriradh New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    நம் கதையின் கதாநாயகி, மீனா, இந்த காலத்து, தங்களை தாங்களே புரட்ச்சி பெண்கள் னு சொல்லிக்கிற கூட்டத்தை சேர்ந்தவள். ஆம், ஒரு சாப்ட்வேர் நிறுவனித்தில் நல்ல சம்பளத்திற்காக பணி புரியும் இந்த காலத்து தாரகை. தன் காலில் எப்பொழுதும் தன்னால் நிற்கமுடியும் ங்கற தன்னம்பிக்கை கொண்டவள்.

    தங்களுடைய பெண் இந்த வயசுலேயே நல்ல சம்பாதித்து தைரியமாய் இருப்பதை கண்டு மகிழ்ந்தாலும், காதல் கத்தரிக்காய் னு எதாவுது செஞ்சு தங்களை சங்கடதுகுள்ளகுவாளோனு பயம் அவளின் பெற்றோருக்கு ஒரு மூலையில் என்றும் உண்டு.

    ஒரு நாள், மூவரும் இரவு உணவு உண்ணும் நேரம் பார்த்து, மீனாவின் அன்னை , " என்னங்க, செய்தி தெரியுமா, நம்ம பரமசிவம் பொண்ணு இன்டர்நெட் ல யார்கூடவோ பேசி, பழகி லவ் பண்றாளாம். கல்யாணம் செஞ்சி வெயுங்க னு இப்போ அப்பா அம்மா கிட்ட ஒத்த கால்ல நிக்கிறாளாம். இவள பொண்ண பெத்ததுக்கு, பாவம், இப்போ கஷ்டபடறாங்க அவங்க". இது மீனாவுக்கு மறைமுகமாக "அப்படி எதுவும் பண்ணிடாதடீ னு " அவங்க அம்மா சொன்னது. அதை மிகச் சரியாக புரிந்து கொண்டவள், "என்னம்மா தப்பு அப்படி பண்ணினா? வாழ்கை முழுவதும் நாம யார் கூட வாழனும் னு நாம முடிவு பண்றது எந்த விதத்துல தப்பு?. அவ பால்காரனயோ , பேப்பர் காரனையோ love பண்ணி வீட்டை விட்டு ஓடி போகலையே... அப்பா அம்மா விடம் சொல்லி, கல்யாண ஏற்பாடு தானே பண்ண சொல்ற... " என்று பதில் கூறினாள்.

    அம்மாவும் பொண்ணும், தங்களின் எண்ணத்தை கூறிவிட்டோம் என்று நினைத்தாலும், அடுத்தவரின் எண்ணத்தை அறிந்த வருத்தத்தை உடனே முகத்தில் காட்டிவிட்டனர். தனக்கு பார்த்து பார்த்து செய்த அம்மாவை கஷ்டப்படுத்தி தான் இன்புறுவதை மீனா என்றும் விரும்பவில்லை. ஆனால் காதல் கல்யாணத்தில் எந்த தவறும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை. அதே போல், தன் ஒரே மகள் யாரயாவுது காதலிக்கிறாள் என்று தெரிந்து, அவள் மனம் நோகும்படி அதனை எதிர்த்து தன் பெயரை ஊராரிடம் காப்பாற்ற வேண்டும் என்று அவளின் அம்மாவும் விரும்பவில்லை. ஆனால் ஊரை நினைத்தால் ஒப்புகொள்ளவும் மனம் இல்லை.

    சில மாதங்களுக்கு பிறகு...

    "Hiii மீனா, எப்படி இருக்க?, காபி டே போகலாமா?" என்று தொலைபேசியில் கார்த்திக் கேட்டான். கார்த்திக் ஒரு software company இல் நல்ல பதவியில் இருப்பவன். இவர்கள் இருவரும் கபாலீஸ்வரர் கோயிலில் தான் முதல் முதலில் சந்தித்தனர்.

    அன்று:

    கார்த்திக்: "ஹாய் மீனா, நான் கார்த்திக். glad to meet u. போன வாரம் நீங்க மனோஜ்-மைதிலி கல்யாணத்துல பாடின பாட்டு ரொம்ப நல்லா இருந்தது. you have a very sweet voice and good carnatic sense. அப்போ தான் உங்க பேரு மீனா னு சொன்னாங்க. Its a pleasant surprise that we met here. நல்ல கலை நயம் இருகிறவங்கள என்னால பாராட்டாம இருக்க முடியாது... அது தான் உங்க கிட்ட வந்து சொல்லிட்டேன். Dont mistake me.. "
    மீனா: "oh thats fine. Thank you." என்று கூறி சிறு புன்னகையை பரிசளித்தாள்.
    கார்த்திக்: "Just now something striked me. கேட்டா தப்பா எடுத்துக்கமாடீங்களே "
    குழப்பத்துடன் மீனா: சொல்லுங்க..
    கார்த்திக்: எங்க Rotaract club ல charity க்காக , ஒரு show நடத்துறோம். variety entertainment, mimicry, music, dance எல்லாமே இருக்கு. நீங்க அதுல karoke பாடின, ரொம்ப நல்ல இருக்கும் னு தோணுது. if u dont mind, can u also join in this celebration for a noble cause.
    மீனா: ஐயோ, நான் அவ்ளோ பெரிய சிங்கர் எல்லாம் இல்லீங்க... சும்மா, கொஞ்சம் பாட்டு கத்துகுடேன்.. அத பாடிகிற்றுகேன்.. அவ்ளோ தான். show பண்ற அளவெல்லாம் பாட தெரியாதுங்க...
    கார்த்திக்: உங்களால கண்டிப்பா முடியும். if u r interested, சொல்லுங்க.. நான் ஏற்பாடு பண்றேன்.

    show மிக அருமையாக நடந்து ஏகப்பட்ட வசூலை கண்டது.

    மீனா விற்கு, தன் குரல் வளம் மீது பெரும் நம்பிக்கை வந்தது. இதற்க்கு முழு காரணம் கார்த்திக் என்பதை அவள் என்றும் மறக்கவில்லை. கார்த்திக்கின் பிறருக்கு உதவும் பண்பு, சகஜமாக பழகும் சுபாவம், spontaneous thinking, இவை அனைத்தும் அவன் மீது பெரும் மதிப்பு வர செய்தது. நட்பு, மதிப்பு அனைத்தும் மெல்ல மெல்ல அவளை அறியாமல் காதலாய் மாறியது.

    கார்த்திக்கிற்கும் மீனாவை மிகவும் பிடிக்கும். ஆண்கள் தான் முதலில் propose செய்ய வேண்டும் என்பது எழுதாத காதலின் விதி முறை. ஆனால், அது எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை, முடிவெடுப்பது என்னவோ பெண்கள் தான். அதாவுது, நான் இப்போ தயார், நீ propose செய்தால் ஒப்புக்கொள்ள என்று, மறைமுகமாக வெளிபடுதிவிடுவர். அவ்வாறே நடந்தது நம் கதையிலும்.

    இவ்வாறு காதலிக்க துவங்கி, இன்று காபி டே வில் சந்தித்தனர் மீனாவும் கார்த்திக்கும்.

    கல்யாண பேச்சை துவங்கினான் கார்த்திக். "எங்க வீட்ல காதல் னு சொன்னாலே பெரும் பிரச்சனை ஆய்டும். எப்படி அம்மா அப்பா வை கஷ்டபடுத்தாம, சமாளிக்க போறேன்னு தெரியல!.." என்று வருத்தத்துடன் சொன்னாள் மீனா. "எங்க அம்மா அப்பா ரொம்ப cool... ஆள choose பன்றதுக்கு முன்னமே, permission வாங்கிட்டேன்.." என்று பெருமையாக கூறினான் கார்த்திக். திடீரென்று மீனாவின் முகம் பிரகாசமடைந்தது... "ஒரு நல்ல யோசனை.. நாம ரெண்டு பெரும் ஒரே caste ங்கறதால, இத arranged marriage மாதிரி ஆகிட்டா என்ன??! " என்று உற்சாகத்துடன் கேட்டாள் மீனா. "என்ன ஒளற ??" என்றான் கார்த்திக்.

    "நீ கவலையை விடு.. நான் பாத்துக்கறேன்.. சரி, எனக்கு இது சம்மந்தமா ஏகப்பட்ட வேலை இருக்கு... நா கெளம்பறேன் " என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

    தனக்கு தோழன் போல் பழகும் தன் மாமாவிடம் சென்று, " மாமா, என் friend ஒருத்திக்கும் மாபிள்ளை பாக்றாங்க... அவளுக்கு இந்த பய்யன் ரொம்ப பிடிசுதாம்.. ஆனா மேட்ச் ஆகலையாம்.. நீங்க வேணாலும் பாருங்க னு குடுத்தா... நான் போய் அம்மா கிட்ட குடுத்தா, தப்பா எடுத்துக்குவாங்க.. நீங்க போய் குடுக்கறீங்களா... " என்று மிக பவ்யமாக கூறினாள். ஜாதகம் பொருந்துதா இல்லையானு முன்னமே இன்டர்நெட் ல பார்த்து வெச்சிட்டா. பொருந்தலைன, மாத்தி எழுதவும் தயாராக இருந்தாள். நல்ல வேளை, நன்றாகவே பொருந்தியது...

    அவளின் பெற்றோருக்கும் கார்த்திக் கை மிகவும் பிடித்து விட்டது..
    கார்த்திக் வீட்லயும் பேசி, கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. மீனா வின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடந்தது.

    கல்யாண நாளும் வந்தது.

    பெண்ணின் வீட்டார் எல்லாம் பேசிகொண்டிருந்தனர். "பரவாயில்லையே, உன் பொண்ணு, நீ கிழிச்ச கோட்ட தாண்டாம, நீ சொன்ன பய்யனையே கல்யாணம் பண்ணிகிரா.. ராசாத்தி. " என்று புகழ்ந்தனர்... மீனாவுக்கு மட்டும் தான் தெரியும், இது love cum arranged marriage nu.... மனதிற்குள் புன்னகைத்தாள். மீனாவின் அம்மாவும், மனதிற்குள் புன்னகைத்தாள். ஏனென்றால் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும், இது arranged cum love marriage னு.

    அன்று இரவு சாப்பிடும்போது நடந்த உரையாடலின் பிறகு, மீனாவின் பெற்றோர்கள், அவளுக்கு தெரியாமல் தீவிரமாக மாபிள்ளை தேடி, கார்த்திக் ஐ தேர்ந்தெடுத்தார்கள். மீனாவின் taste நன்கு தெரிந்தவர்கள், அவளின் பெற்றோர்களாக தானே இருக்க முடியும். கார்த்திக்கிற்கும் மீனா வை பிடித்துவிட்டது. பிறகு தான் இந்த கோயில் சந்திப்பு நடந்தது. "பெற்றோர் பார்க்கும் மாபிள்ளையும், love பண்ற மாதிரி தான் இருபாங்கப்பா" என்று மகிழ்ச்சியுடன் பெற்றோரை விட்டுகுடுக்காமல் சொன்னாள் உண்மையை அறியாத மீனா.
     
    3 people like this.
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    romba azhaga irundhadhu unga narration!!!!:cheers
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    wow, i liked the last punch in the story.....
     
  4. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi,

    Kathai nalla irunthathu.

    Vazhthukkal
     
  5. sriradh

    sriradh New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Yamini, Shreya and Kala,

    Thank you so much.. your comments are so encouraging that I wanna post lot of stories...
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    superb story and superb twist..... keep writing more!
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice story yaar
     
  8. divz

    divz New IL'ite

    Messages:
    29
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    wow!! super story ya:)
     
  9. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Nice story. Last punch is super.
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Amarkkalama irundhadhu avanga planum mudivum..:)

    sriniketan
     

Share This Page