1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிமலர்கள்

Discussion in 'Regional Poetry' started by kavibhanu, Oct 19, 2011.

  1. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    அன்பு தோழமைகளுக்கு,

    சில சமயங்களில் என்னுள் தோன்றிய சில கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..




    எதிரில் நீ வருகிறாய்
    என் மனதை விட்டு
    காட்சிப்பிழை ...

    **************

    பிரபஞ்ச பெருவெளி
    சிறிதுதான் உன்
    நினைவுகளை விட ...

    **************

    வேரூன்ற தேடி திரிகையில்
    நழுவுகிறேன்
    மண்புழுக்கூட்டம்...
     
    3 people like this.
  2. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அருமை பானு !
    //எதிரில் நீ வருகிறாய்
    என் மனதை விட்டு
    காட்சிப்பிழை ...//
    காட்சி பிழைக்கு அருமையான விளக்கம் !
    அவன் மனதை விட்டு வந்தாளா ? என்று நினைக்கும் போதே அடுத்த வரி சிலிர்ப்பு !

    அவன் நினைவு பெருவெளியை விட இந்த பிரபஞ்ச வெளி சிறிது தான் !

    கவிதையை விளக்குமாறு கேட்க கூடாதுதான் ஆனால் எனது சிற்றறிவுக்கு இதன் அர்த்தம் புலப்படவில்லை பானு !
    //வேரூன்ற தேடி திரிகையில்
    நழுவுகிறேன்
    மண்புழுக்கூட்டம்.//
    விளக்கம் கிடைக்குமா ?

    கண்டிப்பாக மேலும் பதிவிடுங்கள் தோழி !
     
    1 person likes this.
  3. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    ப்ரியா, வாழ்த்துக்கு நன்றி ..

    ப்ரபஞ்ச பெருவெளி சிறிது தான் என் மனதில் இருக்கும் நினைவுகளை விட... இது இரண்டாவது கவிதைக்கான விளக்கம்..

    நானே என்னை மரமாக பாவித்து என் வேர்களை மண்ணில் வேரூன்ற தேடி அலைகிறேன்.. ஆனால் மண்புழுகூட்டம் சிதைந்து விடுமே என்று என் வேர் பிடிமானத்தை நழுவ விடுவதாக எழுதியிருக்கிறேன் தோழி..
    ஹைக்கூ வில் என் முயற்சி இது ..

    அடுத்த முறை எல்லாருக்கும் புரியும் படி எழுதுகிறேன்..
     
    2 people like this.
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமையான ஹைகூக்கள் கவிபானு..............நன்றிகள்....மேலும் பதியுங்கள்.......
     
  5. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    மண்புழு கூட்டம் மண் இறுக்கத்தை சிதைப்பதினால்தான்
    வேர் உள் செல்ல ஏதுவாகிறது !
    அதனால் பிடிமானத்தை நழுவ விட வேண்டாம் விருட்சமே !

    ஹேய் என்னப்பா ......நீங்க எழுதறது அழகு !
    என்னோட சிற்றறிவுக்காக உங்க கவிதைய எளிமை படுத்த வேண்டாம் !
    அந்த அழகு குறைஞ்சுடும் !
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பானு!
    நறுக்குத் தெறித்தால் போல் சுருக் வரிகள்.
    மிக அழகு
    இன்னும் எழுத வாழ்த்துக்கள்
     
  7. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    நன்றி ராம்... மேலும் கண்டிப்பாய் என் கவிதைகளை இங்கு பதிகிறேன்..
     
  8. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female

    ப்ரியா,

    நன்றிகள்ப்பா உங்களுக்கு, எனக்கு கிடைத்த இந்த பிடிமானத்தை நழுவவிடமாட்டேன், நிச்சயமாக... என் பாணியிலேயெ கொடுக்க முயற்சி செய்கிறேன் தோழி...
     
  9. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    நன்றி தோழி.. உங்கள் வாழ்த்துக்களுக்கு.. தொடர்ந்து பதிவு செய்கிறேன் .. உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து..
     
  10. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    நீயில்லாமல்




    இருளை ஓளியால்
    மறைக்கும் மெழுகுவர்த்தி
    போல் நீயில்லாத
    நாட்களை
    உன் நினைவுகளால்
    மறைக்கிறேன்


    நேரம் கூட
    கணக்கிறது
    நீயில்லாத
    நாட்களில்


    ரயில் நிலையத்தில்
    நீ எதிரில் வரும் போது
    வரும் கண்ணீர்
    நீயறிய கூடாதென
    கண்களால் விழுங்குகிறேன்...
     

Share This Page