1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாணம் அன்றும் இன்றும்..... ஒரு கண்பார்வை

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 18, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    கல்யாணம் அன்றும் இன்றும்..... ஒரு கண்பார்வை
    ---------------------------------------------------------------------------

    ஒரு 25 வருடங்களுக்கு முன்பு, கல்யாணம் என்றாலே அது மூன்று நாட்கள் விசேஷமாக இருக்கும் ... வீடே கலை கட்டும். வீடு சிறியதோ, பெரியதோ அது பொருட்டல்ல.... ஒரு புறம் மருதாணி அமர்க்களம், மற்றொருபுறம் அப்பளம் இடுதல், கை முறுக்கு சுத்துதல் என்று வீடே விழா கோலமாய் காடசி அளிக்கும்!!!

    அதோடு இல்லை! சத்திரத்தில் கோலம் போடுதல், மாவிலை கட்டுதல் என்று அதன் அழகே அழகு... ஜானவாசம் ( மாப்பிள்ளை அழைப்பு ) அன்று காலையே பெண் வீட்டினர் சத்திரத்தில் ஆஜர் ஆவர்... உள்ளே நுழைந்தவுடன் ஒரு பில்ட்டர் காபி( துணியில் வடிப்பர்) கிடைக்கும் பாருங்கள் அதன் சுவையோ சுவை....

    நிச்சயதார்தம் முன்பு கோயிலுக்கு சென்று வரும் பொழுது ஜானவாச காரில் ஊர்வலம்... சிறிய பசங்கள் யாவும் அதில் ஏறிக்கொள்வர்.. ஊர்வலம் மிக மெதுவாக, காரின் முன்புறம் மேல தாளம், பெட்ரோமாக்ஸ் விளக்கு என்றும் ஆண்கள் முன் செல்வர். பின்புறம் பெண்களின் பட்டாளம் அழகாய் பட்டு புடவை, பாவாடை, தாவணி என்று கையில் சீர் வரிசைகள் ஏந்தி வருவர்.... பிறகு சத்திரம் வந்து அடைவர். நிச்சயதார்த்தம் முடியும்... பின்பு வெற்றிலை பாக்கு போடும் வேலை ஆரம்பிக்கும் .. ஒரு புறம் ஆண்கள் சீட்டு விளையாட்டில் மும்முரம்.. பெண்கள், வெற்றிலை பாக்கு போடுவதில் ஆர்வம், பழைய கதைகள் பேசி, பாட்டு பாடியும் மகிழ்வர்...

    அன்று இரவோ ஒரே அரங்கில், அனைவரும் ஒரு ஜமக்காளத்தை விரித்து விடிய விடிய கதைகள் பேசி பின்பு ஒரு மணிநேரம் தூங்கி முடிவதற்குள், மேள சப்தம் கேட்க ஆரம்பிக்கும், காபி மனமும் மூக்கை துளைக்கும்... அன்று முழுவதும் கொண்டாட்டம்தான் சிறுவருக்கும் பெரியவர்களுக்கும்...

    இன்றைய காலகட்டத்தில்... எல்லாமே நம் கையை விட்டு போய் விட்டது... எல்லாவற்றிற்கும் ஆட்கள் நம் கையால் செய்யும் வேலைகள் மிகவும் கம்மி.... சத்திரத்தில் பந்தகால் நடுவதிலிருந்து கட்டு சாதம் கட்டும் வரை எல்லாம் கான்ட்ரட் தான். வாசலில் கோலம் போடவேண்டியது இல்லை, வெற்றிலை பாக்கு கவர் போட வேண்டாம்... இது எல்லாம் பரவில்லை வரும் விருந்தினருக்கு ஹோட்டல் அல்லது விடுதியில் அறை பதிவு. கல்யாணத்திற்கு செல்வது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதுபோல் ஆகிவிட்டது...

    நாங்கள், போன வருடம் பெங்களூர் சென்றோம் எங்கள் நெருங்கிய உறவினர் திருமணத்திற்கு... எங்களுக்கு ஹோட்டல் அறை புக் செய்திருந்தனர்... நாங்கள் சத்திரத்திற்கு செல்ல முடியவில்லை ஏனெனில், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வேறொரு ஹோடேலில் .. சரி என்று நாங்கள் வரவேற்பிற்கு செல்லலாம் என்று மாலை 6 மணிக்கு சென்றால் அன்கு ஒருவரையும் காணோம்.. அப்பொழுதுதான் மேடையை அலங்கரித்து வந்தனர்... பின்பு 7 மணி அளவில் மாப்பிள்ளை அப்பா, அம்மா வந்து இறங்கினர். அப்பாடா என்றிருந்தது.... பிறகு 7.30 மணிக்கு மாப்பிள்ளை பிரவேசம்....

    இரவு திரும்பி நாங்கள் எங்கள் அறைக்கு சென்றுவிட்டோம் . மறுநாள் முஹுர்த்தம். முடிந்ததும் உடனே
    புரப்பட்டாயிற்று..முடிந்தது...

    அன்று இருந்த மகிழ்ச்சி, ஆரவாரம் எதுவும் இல்லை.. ஆனால் செலவிற்கு ஒன்றும் பஞ்சம் இல்லை... என்னை பொறுத்த வரையில் மன திருப்தி இல்லை என்றுதான் சொல்லுவேன்..

    இந்த தலைமுறையினர் அன்றைய கல்யாண நிகழ்ச்சிகளை சந்தோஷங்களை இழந்துவிட்டனர்...மீண்டும் அந்த நிலை வருமோ??? சந்தேகம் தான்...!!!!

    மைதிலி ராம்ஜி
     
    periamma, Rajijb, vaidehi71 and 3 others like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: கல்யாணம் அன்றும் இன்றும்..... ஒரு கண்பார்வ&#3016

    மைதிலி , , அந்த கால கல்யாண நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.. கல்யாணம் நடைபெறும் வீட்டில் சொந்த பந்தங்கள் ஒரு 15 நாட்களுக்கு முன்னே ஆஜர் ஆகி விடுவார்கள். வரும் நபர்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகளை இழுத்து போட்டு செய்வார்கள் . இந்த கால கல்யாணத்தில் சீர் வரிசைகள் எல்லாம் ஆர்டர் கொடுத்து பண்ணுகிறார்கள் . 25 வருடங்களுக்கு முன் சீர் முறுக்கு ஆகட்டும் , அதிரசமாகட்டும். வீட்டிலேயே அரிசியை களைந்து நிழலோடு உணர்த்தி, வீட்டிலேயே மாவை இடித்து காலையில் ஆரம்பித்து மாலை வரை 3 நாட்களுக்கு வேலை நடக்கும். வீடே களையாக இருக்கும். இன்னும் சொல்ல போனால் என் அக்காவின் திருமண nichayathartham த்திற்கு என் அம்மாவே வீட்டில் பால்கோவா செய்ததை மறக்க முடியாது. ஏனெனில் எங்கள் வீட்டில் முதல் திருமண நிச்சயதார்தம் . காலையில் 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை செய்தார்கள் ... செய்தார்கள் ... ஒருவழியாக 6 மணிக்கு மணக்க மணக்க பால்கோவா ரெடி. மாப்பிள்ளை வீட்டில் அந்த பால்கோவாவை புகழ்ந்ததை மறக்க முடியாது. இந்த காலத்தில் யார் இப்படி செய்கிறார்கள்.
    அந்த கால கல்யாணம் போல் இந்த கால கல்யாணம் கண்டிப்பாக இருக்காது. இந்த கால generation பழைய கால மகிழ்ச்சிகளை எல்லாம் மிஸ் பண்ணி விட்டார்கள்.

    இன்னொன்று.... மருதாணி இலையை திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன் வாங்கி வந்து , கல் உரளில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து, பின் லெமன் பிழிந்து நான் தான் முதலில் , நீ தான் முதலில் என வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 2 கைகளிலும் இட்டுக் கொண்டு அமர்க்களமாக இருக்கும். பின் கைகளை அசைக்காமல் பத்திரமாக பார்த்துக் கொண்டு அடுத்த நாள் காலையில் யாருக்கு நன்றாக சிவப்பாக பிடித்து இருக்கறது என்று ஒவ்வொருவரும் பேசி மகிழ்வதை இந்த காலத்தில் பார்க்க முடியுமா.. அந்த கால கல்யாணம் போல் வராது..
     
    Adamsribs, periamma and Rajijb like this.
  3. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Re: கல்யாணம் அன்றும் இன்றும்..... ஒரு கண்பார்வ&#

    உமா... அஹா...உண்மையிலேயே நீங்கள் என்னை கல்யாண வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்..... மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.... இனி அந்த நிகழ்வுகளை பார்க்க முடியுமா தெரியவில்லை...

    எனக்கு அந்த ஜானவாசம ( மாப்பிள்ளை அழைப்பு ) மிகவும் பிடிக்கும்... கடவுளின் கிருபையால் என் மகன் கல்யாணத்தில் அதை நடத்த வேண்டும் என்பது என் ஆசை...

    நன்றி நன்றி.. மேலும் எழுதுங்கள்....

    அன்புடன்
    மைதிலி ராம்ஜி
     
    Rajijb and uma1966 like this.
  4. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: கல்யாணம் அன்றும் இன்றும்..... ஒரு கண்பார்வ&#

    தங்கள் பதிவை படித்தவுடன் என் 28 வருடங்களுக்கு முன் நடந்த திருமண நாளுக்கு என் மனம் சென்று விட்டது. அந்த காலத்தில் ஜானவாசம் அன்று பந்தக் கால் வைபவம் நடக்கும் பொழுது தான் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் ஆவலாக பார்த்துக் கொள்வர்.

    பெண் பார்க்கும் படலத்தின் பொழுது அவ்வளவாக ஒருவரை ஒருவர் வெட்கத்தில் ஒரு வினாடிகள் பார்த்து விட்டு பெரியோர்கள் சரி என்று சொன்னால் மாப்பிள்ளை பிடித்து உள்ளது என்று பெண் சொல்லி விடுவாள். அப்புறம் 4 மாத இடைவெளியில் திருமணம் நடைபெறும். ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ளும் சான்ஸ் மிக கம்மி. ஜானவாசம் நடைபெறும் பொழுது பெண்ணும் மாப்பிள்ளையும் ஜானவாச காரில் அப்பொழுது தான் பக்கத்தில் அமர்வர். இருவருக்கும் செம டென்ஷன் இருக்கும். கல்யாணத்தின் பொழுது கேட்கவே வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணையும், மாப்பிள்ளையும் கிண்டலும் கேலியும் செய்து மண்டபமே அதிரும் வகையில் சிரிப்பொலி கேட்கும். கல்யாணத்தின் பொழுது இருவரும் டென்ஷன் உடன் இருப்பார் . அப்புறம் கல்யாணம் முடிந்தவுடன் நலங்கு சம்பிரதாயம். முன் பின் ஒருவரை ஒருவர பேசி பழகாததால் இருவரும் வேர்க்க விருவிருக்க பாடல் , தேங்காய் உருட்டல் என உற்சாகமாக இருக்கும். அந்த காலத்தில் போன் வசதி அவ்வளவாக இல்லை என்பதால் பேசி கொள்ளும் வாய்ப்பு கம்மி


    இந்த காலத்தில் பெண் பிடித்து உள்ளது என்று பெண் பார்க்கும் படலத்தில் சொன்ன உண்டனேயே மாப்பிள்ளை பெண்ணிற்கு முதல் வேலையாக செல் போன் வாங்கி கொடுத்து மணிக்கணக்கில் பேச்சை ஆரம்பித்து விடுகிறார்கள். அப்புறம் பீச் , ,சினிமா பார்க் என்று சென்று விடுகிறார்கள். ஆகையால் கல்யாணத்தின் பொழுது ஒரு excitement பெண்ணிற்கும் , மாப்பிளைக்கும் கண்டிப்பாக இருக்காது.

    அந்த கால கல்யாணம் போல் வருமா.... நம் தலைமுறைகள் அனைத்தும் மிஸ் பண்ணி விட்டார்கள்
     
    periamma, Rajijb and vaidehi71 like this.
  5. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    hi ma unmai than ana enga veetla ellam nadanthuthu ore kolagalam than :) ninga sona olur silathu miss aachu than ana samaya irunthuthu :) enaku veedu kala kalanu irukanum appa amma kuda pesanum enga akka marriage rendume kala kalanu odichi :) ellam appa amma than senjanga miss those moments 10 days than aathu akka marriage mudinji ana bore adikithu ipo :(
     
    vaidehi71 likes this.

Share This Page