1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒவ்ஒரு கணவனின் பின்புலம் Behind Every Nagging Wife

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Apr 25, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    12,749
    Likes Received:
    13,492
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ஒவ்ஒரு
    கணவனின் பின்புலம்

    Behind every nagging wife there is a husband who failed to do his job when it was ought to have been done.

    இன்று ராசிபலனில் என் ராசிக்கு என்ன பலன் என்று தெரியாமல்தான் ரங்கநாதன் வீட்டு கதவைத்
    தட்டினேன். அவன் இல்லாததால் அவனுடய மனைவி கதவைத் திறந்து 'வாங்கோ' என்றபோது அவர் குரலில் என் ராசிக்கு பலன் சங்கடம் என்று தெரிந்துபோனது.

    "எங்கே மாமா இல்லையா" என்றேன். அவன் என் சமவயதினன் என்றாலும் அவன் மனைவியிடம் அவனை மாமா என்று சொல்வதும், அவர் மனைவியை மாமி என்று அழைப்பதும், அவர்கள் என்னை மாமா என்று அழைத்து பேசுவதும் ஒரு சம்பிரதாயமாகிப் போனது.

    நானும் ரங்கநாதனும் ஒரே ஆபிஸில் ஒன்றாக வேலை செய்து சில மாத இடைவெளியில் ஓய்வு பெற்றவர்கள். அனேகமாக காலை, மாலை இரு வேளைகளிலும் சந்தித்து பேசுவது வழக்கம். இந்த சந்திப்பு சில சமயங்களில் என் வீட்டில் இருக்கும். சில சமயங்களில் அவன் வீட்டில் இருக்கும்.

    ஒரே தெருவில் முதல் வீடு என்னுடயது. அவனுடயது கடைசி வீடு. இடையே இருபது வீடுகள். அவ்வளவே.
    எங்கே மாமா என்ற கேள்விக்கு மாமி உடனே பதில் சொல்லவில்லை. வழக்கமாய் அவன் உட்காரும் சேருக்கு எதிரில் எனக்கு ஒரு சேரைப் போட்டு அன்றைய செய்தித்தாள்களை ஸ்டூலில் போட்டுவிட்டு வாசல் கதவு அருகே நின்றுகொண்டு மாமி "என்னவோ தெரியல்ல. காலங்காலத்தால எங்கேயோ போயாச்சு. என்னவோ தல போகும் காரியம் இருக்காப் போல" என்றார்.
    "என்ன மாமிக்கு இன்று மூடு சரியா இல்லை போல' என்றேன் ஏதாவது பேசவேண்டுமே என்று. "மாமா உங்கள கூடப் பிறந்த பிறப்பாக நினைத்து சொல்கிறேன்" என்று மாமி மிக வருத்தத்துடன் ஆரம்பித்தார்.

    "இவரைக் கல்யாணம் பண்ணிண்டு 49 வருஷம் ஆச்சு. அன்று முதல் இன்று வரை ஓய்ச்சல் ஒழிவு இல்லாமல், இவரோடு ஊர் ஊராக பொட்டி கட்டிண்டு, இவர் ஆடிய ஆட்டத்துக்கெல்லாம் ஆடிண்டு ரொம்ப கஷ்டம். சம்பாத்யத்தில் ஒண்ணும் குறைவு இல்லை. ரெண்டு குழந்தை
    களுக்கு கல்யாணம் பண்ணியாச்சு. பெருமாள் புண்ணியத்தில் அவாளும் நன்னா இருக்கா. நிழலுக்கு கூரையாய் ஒரு வீடு ஆச்சு. ஆனால் இவர் பொறுப்பாக முன் இருந்து ஒரு காரியம் சமர்த்தாய் செய்தாரா என்று கேட்டால் இல்லைன்னுதான் சொல்லணும்.
    "ஆபிஸ் போக டிரெஸ் எடுத்து வைத்து கையில் கட்டி கொடுத்து பேனா எங்கே? கார் சாவி
    எங்கே ? அது இது என்று ஆர்ப்பாட்டம் பண்ணி கிளம்பினால் இரவு எட்டு மணிக்குத்தான் வீடே ஞாபகம் வரும்.
    மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாய், நகை, நட்டு பாத்திரம், பண்டம்னு சேர்த்து இரண்டு கல்யாணங்கள் பண்ணபோதும் இவருக்கு எந்த கவலையும் இல்லாமல் ஆபிசை கட்டிண்டு அழுவது மட்டுமே தெரியும். ஞாயிற்றுக்கிழமை என்றால் ஜமா சேர்த்துக் கொண்டு சினிமா, மேட்ச்சுன்னு பொழுத போக்கினார்.
    சரி. இப்போ ரிடயர் ஆயாச்சே. இனிமே கொஞ்சம் சாகவாசமா இருக்கலாம்னா இப்போ அதைவிட மோசம். முன்ன எல்லாம் ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் சிசுருஷ்சை பண்ணா போதும். இப்போ நாள் முழுதும் இவரை கவனிக்கவே சரியாகப் போறது" என்று நிறுத்தினார் மாமி.
    "அடடே அப்படி என்ன வேணுமாம்
    மாமாவுக்கு? என்று கேட்டு வைத்தேன், மனதுக்குள் இவன் சீக்கிரம் வந்தால் தேவலை என்று நினைத்துக் கொண்டு.
    "மாமா, ஊர் உலகத்தில் எல்லோரும்தான் ரிடையர் ஆகிறா. இவர் மாதிரி படுத்தறவா யாரும் இருக்க மாட்டா. கார்த்தால ஐந்து மணிக்கே எழுந்து தானே காபி போடறேன்னு தடார் புடார்ன்னு பாத்திரங்களை உருட்டி வண்டி காபி பொடியை போட்டு படு ஸ்ட்ராங்கா காபிய போட்டு இதற்கு எட்டு பாத்திரம் ஆகும். சாப்பிட்டுவிட்டு வாக்கிங் போறேன்னு கிளம்புவது. இதற்குன்னு முட்டி தெரிய ஒரு நிஜார். அதற்கு மேல பனியன் மாதிரி ஒரு ஷர்ட். கழுத்துல பால்காரன் மாதிரி ஒரு மப்ளர்.
    காலுல வெள்ளையின்னு சத்தியம் பண்ணாக்கூட நம்ப முடியாதபடி அழுக்கா ஒரு கான்வாஸ் பூட்ஸ். இப்படி இவர் இருட்டில் வாக்கிங் போய்விட்டு திரும்புவதற்குள் இவரை எதாவது நாய் பிடுங்காம ஜாக்கிரதையாய் வரணுமேன்னு கவலை பிடுங்கும்.
    அடுத்தது பேப்பர் கல்யாணம். எல்லார் மாதிரி ஒரு பேப்பர் போதாதா. இங்லீஷில் இரண்டு, தமிழில் இரண்டு. பெரிய அம்பானி தட்டு கெட்டுப் போன மாதிரி எகனாமிக் டைம்ஸ் வேறு. எல்லாராத்துலயுமா இவ்வளவு பேப்பர் வாங்குவா .அவா எல்லாம் பிழைக்கத் தெரிஞ்சவா. (இது என்னை சொல்லவில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்). இத்தனையும் மேய்வதற்குள் இரண்டாம் டோஸ் காபி. பேப்பர் படிக்க உட்காரும்போது ஒரு நாள் கூட கண்ணாடிய எடுத்துண்டு உட்காருவதில்லை. நான்தான் கொண்டுபோய் சமர்ப்பிக்கணும். எதோ ஐஏஎஸ் பரிட்சைக்கு படிப்பது போல் மூணு கலரில் பேனா, ஸ்கேல் எல்லாம் வைத்து அடிக்கோடு போடுவது, இதற்கு நடுவே கீஸர் போடு, துணிய எடுத்துவைன்னு அதிகாரம் பண்ணி குளித்து விட்டு வந்து பூஜை பண்ணரேன்னு அது ஒரு கூத்து.
    இதற்கு முன்னர் பாழும் நெற்றி பற்றி கவலைப்படாமல் கண்டதை சாப்பிட்டு அலைந்தது மறந்து போய் சந்தி பண்ண ஒரு நாழி. ஒன்பது மணி வரை பூஜை. அப்போது மிக்ஸி போடாதே. ஸ்லோகத்தை மனசுல சொல்லு. போன் வந்தா மெதுவா பேசு. அப்படி இப்படின்னு ஏக கெடுபிடி.
    அடுத்தது ஓட்ஸ் கலாட்டா. ரிடையர் ஆனா ஓட்ஸ் சாப்பிடணும்னு கட்டாயமா என்ன?
    பூஜை முடிஞ்ச கையோடு ஓட்ஸ். அப்புறம் டிபன். உடனே டி.வி ல நியூஸ். மோடி கூட அவ்வளவு நியூஸ் தெரியணும்னு இருக்க மாட்டார். சிரியா, லிபியா இங்கெல்லாம் என்ன நடக்கிறதுன்னு தெரிஞ்சிண்டே ஆகணும். ஆன்லைனில் ஒரு கியாஸ் புக் பண்ணத் தெரியாது. காவேரி பிரச்சினைக்கு என்ன செய்யணும்னு எங்கிட்ட ஆரம்பிப்பார். கேட்டுக்கலைன்னா கோபம் வந்துடும்.
    இது முடியவும் யாராவது ஒருத்தர் வெட்டிப் பேச்சு பேச வருவார். (இது நிச்சயம் நான்தான்) அதுக்கு அப்புறம் தூக்கம். நான் என் காரியங்க்களை முடிச்சு இவரை எழுப்பி சாதம் போட்டு, துணி தோய்த்து, வேலைக்காரியுடன் ஓடியாடி முடிக்கும் வரை இவர் படிக்கிறேன்னு எதோ பேர் பண்ணிட்டு காபி போடலயான்னு குரல் கொடுப்பார். காபியோட பிஸ்கட் கண்டிப்பாக வேண்டும். சில நாள் எண்ணெய் வைத்து பண்ண காலம் எல்லாம் அம்மா காலத்தோடு போச்சுன்னு ஒரு பஞ்ச் கொடுப்பது. சாயந்திரம் யார் கிடைப்பார்கள் என்று காத்து இருந்து பேசிவிட்டு வீட்டுக்கு வந்த உடன் டிவி நியூஸ். ராத்திரி சாப்பிட்டு விட்டு சத்தமாய் மியூசிக் பிளேயரில் கதாகாலட்சேபம் கேட்டுண்டே தூக்கம். இதுல அமாவாசை, மாச தர்ப்பணம், திவசம் வந்தா இரட்டை அமர்க்களம்."
    மாமியின் பேச்சு தொடர்ந்து இருக்கும். ரங்கநாதன் உள்ளே நுழைந்தான்.

    "அடடே! இங்க இருக்கயா நீ. நான் உனக்காக உன் வீட்டில் காத்து கொண்டிருந்தேன். மாமியோடு பேசிக் கொண்டு இருந்ததில் டைம் ஆனது தெரியல" என்றான்.
    மாமி என்ன பேசி இருப்பாள்னு எனக்கு தெரியும். ஏனென்றால் எனக்கும் ரங்கநாதனுக்கும் ஒரே நட்சத்திரம். ஒரே ராசி!
     
    maalti and kaluputti like this.
    Loading...

  2. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,282
    Likes Received:
    707
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Romba seri, becoz I have one at home,:laughing::grinning::grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  3. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    314
    Likes Received:
    517
    Trophy Points:
    180
    Gender:
    Female
    Ha ha ha. Very very hilarious @Thyagarajan Anna. Liked it very much
     
    Thyagarajan likes this.

Share This Page