1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
  Dismiss Notice
 4. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

ஒரு ஓவியனின் மறு பிறப்பு........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 1, 2010.

 1. Yashikushi

  Yashikushi Moderator IL Hall of Fame

  Messages:
  23,740
  Likes Received:
  8,598
  Trophy Points:
  615
  Gender:
  Female
  என் கலைப் பயணத்தின் ஆனந்தம் இன்று ஆரம்பம்.உங்கள் பார்வைக்காய் என் ஓவியம் இங்கே
  http://www.indusladies.com/forums/d...00629-my-art-zest-after-15-a.html#post1293012

  இதுவரை
  தூரிகை இல்லாத ஓவியன் நான்
  ஓவியம் தொலைத்த காரிகை நான்
  சித்திரம் காணா என் சித்திரப் பிரதிமை
  இதனை நாளாய் ஓய்வாய் உப்பரிகை.
  என்னை வளர்த்த கலை
  என்னுள் வளர்ந்த கலை.
  என்னை அறியாமல் என்னுள் அமர்ந்த கலை
  மறைந்த உறைந்த நிலையில்.......

  எனக்குள் அடங்காது அடர்ந்து
  நுரைத்து வளர்ந்திருந்த கற்பனைகளை
  கரைத்து விட்டு கண்மூடி
  சயனித்திருந்தேன்...காலத்தின் கட்டாயம் ...

  காலம் கரையாது நிற்குமா ..கனிந்தது .
  மக்கிக் கிடந்த என் உணர்வுக்கயிறுகள் அசைந்தன.
  செல்லரித்துப் போன என் திசுக்கள் உயிர்த்தெழுந்தன

  நான் தொலைத்த ஓவியத்தை எனது தூரிகையால் தேடினேன்
  மறுபடியும் விரல்வழியே வண்ணம் பெற்று
  அது மீடிட்ட உருவம்
  இதோ .....உங்கள் முன்னால்.
  கருப்பு வெள்ளையில் வண்ண ஓவியம்
  என் ஊனுக்குள் ஜீவனாய்
  ஜீவசிற்பமாய் ஜனனம்.

  ...............................................

  எழுத்தும் ஓவியமும்
  என் இரு விழி மணிகள்
  வரிகளை விசிறி அடித்து
  என் எழுத்து வேட்கை
  வித்தாய் மண்ணில்.


  இன்று
  மாண்டு போன கலை
  மீண்டும் ஜனிப்பு
  மரணிப்புக்கு முன்னால்
  கிடைத்திருக்கும் மறுபிறப்பு.
  என் ஓவிய வேட்கை
  விழுதாய் மண்ணில்.


  வானம் பார்கிறேன்
  பூமியின் மறுபக்கம் செல்ல
  பயணம் போகிறேன்,...
  உங்களின் கைகொள்ளா
  வாழ்த்துதல் சேகரிப்போடு......
   
  Last edited: Jul 1, 2010
  2 people like this.
  Loading...

 2. laddubala

  laddubala Gold IL'ite

  Messages:
  4,035
  Likes Received:
  80
  Trophy Points:
  128
  Gender:
  Female
  Saroj akka,

  Kalaimela ungalakukku irukom thagathai enni enni viyakiren. Ethanai azhagaana varthaigal......Un padamum arumai. Apadaiye trace panna madiri irundadu. i m speechless.

  Wow..... absolute beauty...astonishing..ravishing....sollite pola iruku...Unga rendu kangal(kaviyum, kaivanamum)aiyum.:)

  Thanks a bunch akka:thumbsup
   
 3. veni_mohan75

  veni_mohan75 Platinum IL'ite

  Messages:
  11,264
  Likes Received:
  115
  Trophy Points:
  283
  Gender:
  Female
  அன்புள்ள ரோஜா,

  உன்னுள்ளே வளர்ந்த கலையை
  உன்னுள்ளே உனை வளர்த்த கலையை
  நீ கண்டு கொள்ளாததும் ஏனோ???
  உன் கலை காண கண் கோடி வேண்டும்...
  கண்டு மகிழ உன் கலையும் கோடி வேண்டும்
  சித்திரமே, என் முத்தினமே...
  தூரிகை கொண்டு நீ வரைந்த காரிகையை
  கண்ட பொழுதினில், மலர் செண்டாய் வளைய
  வரும் என் வார்த்தைகள், மலர் கண்டு
  மயங்கும் வண்டாய் மதி மயங்கிப் போயின
  பெரு நிதியம் வேண்டாம் எனக்கு...
  பொன்னோடு, பொருளும் ஒரு பொருட்டல்ல எனக்கு
  கண்டு மகிழ உன் கை வண்ணமும், சொல் வண்ணமும்
  என்னக்கு இருக்கையிலே.... இன்னுமா இருக்க வேண்டும்
  இந்த கலை திரை மறைவில் .... இன்று வந்த இந்த வெளிச்சம்
  என்றும் நிலைத்திருக்கட்டும்.

  மேலும் பல சித்திரங்களை உங்கள் கை வழி காண ஆவலாய் வழி மீது விழி வைத்த மைவிழியாள் நான் ....
   
 4. shreyashreyas

  shreyashreyas Gold IL'ite

  Messages:
  4,914
  Likes Received:
  156
  Trophy Points:
  160
  Gender:
  Female
  saroj.... the poem is fantastic and also your creation..... just felt like a devakanya dancing with all the abhinayam in front of me... so beautiful....
   
 5. Sudha Kailas

  Sudha Kailas IL Hall of Fame

  Messages:
  12,871
  Likes Received:
  1,985
  Trophy Points:
  455
  Gender:
  Female
  Arumayo arumai unadhu varigal.
   
 6. gsaikripa

  gsaikripa Gold IL'ite

  Messages:
  4,933
  Likes Received:
  177
  Trophy Points:
  170
  Gender:
  Female
  iniya thozhi sarojukku,
  kavithaiyum, ooviyamum arumai .
   
 7. Vaishnavie

  Vaishnavie Gold IL'ite

  Messages:
  2,914
  Likes Received:
  62
  Trophy Points:
  130
  Gender:
  Female
  Super poem... Fantastic art...
  My best wishes to draw n write more...:-D
   
  Last edited: Jul 1, 2010
 8. Yashikushi

  Yashikushi Moderator IL Hall of Fame

  Messages:
  23,740
  Likes Received:
  8,598
  Trophy Points:
  615
  Gender:
  Female
  முதல் பின்னூட்டம் கொடுத்து என் கலைப் பயணத்தைத் தொடங்கி வைத்த என் தோழியே.நன்றிகள் பல.என் கைவண்ணத்தில் உங்கள் எண்ணம் பதிந்தது கண்டு நானும் அகம் மகிழ்தேன்.இந்த ஊக்குவிப்பு எப்போதும் எனக்குத் தேவை உங்கள் அனைவரிடம் இருந்தும்.
  நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்
  நம்பிக்கையால் வாழ்ந்தால் அட! யார் வாழ்க்கை வாடும்.....Bow.
   
 9. Yashikushi

  Yashikushi Moderator IL Hall of Fame

  Messages:
  23,740
  Likes Received:
  8,598
  Trophy Points:
  615
  Gender:
  Female
  ஓவியத்தின் நாடி பிடித்து நான் நடந்த காலம் வேறு
  ஓவியத்தை நாடாமல் குடும்ப காவியத்தில் என தொலைத்திட்டேன் அது வேறு.
  பூம்புனலாய் பொங்கி வரும் என் ஓவிய தாகம் இனிமேலும் அடக்க முடியாமல் இன்று காற்றாட்டு வெள்ளமாய் கரை புரண்டு ஓடுகிறது.தடை தாண்டி வருவதற்கு என் தோழியே நீயும் தோணியாய் துணையாய் நின்றாய்.மறப்பேனா நான்.:bowdown
  ஆழிப் பேரலையாய் தூரிகை வாயிலாய் என் கற்பனை பீனிக்ஸ் பறவையாய் உயிர்தெழுந்து இன்று ஆலவட்டம் செய்துள்ளது .
  இது தொடரும்.இனி தடங்கல் வந்தாலும் தடம் பார்த்து தடை தாண்டி ஓடும் இந்த திரை மறைவுப் பறவை...வெளி அரங்கமாய்....
  மைவிழியாள் உங்கள் நம்பிக்கை காற்றைச் சுவாசித்த படி
  உங்கள் புத்துணர்ச்சி புதையலுடன் புறப்படுகிறேன் என் தேடலின் திசையை நோக்கி .
  பை நிறைய உங்கள் புதிய வார்ப்புகளுடன் வார்த்தைகளுடன்,:)
   
  1 person likes this.
 10. Yashikushi

  Yashikushi Moderator IL Hall of Fame

  Messages:
  23,740
  Likes Received:
  8,598
  Trophy Points:
  615
  Gender:
  Female

  என் கலைவண்ணம் கண்டு நீங்கள் உள்ளம் பூரித்து தேவகன்னிகை என்று விமர்சித்தது என்னை புல்லரிக்கச் செய்து விட்டது.வார்த்தைகள் வரவில்லை.
  உங்கள் பின்னூட்டம் என் இனி வரும் வண்ணங்களின் தேரோட்டம்
  நன்றி
   

Share This Page