1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எள்ளல் தவிர்ப்போம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 18, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பிறர் தோற்றத்தை, குரலை,
    நடை, உடை, பாவனையை,
    பேச்சை மற்றும் எழுத்தை,
    அன்றி ஏதேனும் ஒன்றை,

    எள்ளுவது நம்மில் பலருக்கும்,
    மிகவும் இயல்பான ஒன்று தான்.
    அதனால் அவர் மனம் பாதிக்கும்,
    எனவும் நன்றாய் அறிந்தே தான்,

    துயர்படச் சொல்வார் சில மாந்தர்.
    அவர் மாந்தரில் சேர்த்தியில்லை தான்.
    பிறரைத் துவளச் செய்யும் இவர்,
    துன்பம் தொலைவில் இல்லை தான்.

    பிறரை எள்ளி நாம் மகிழ்ந்தால்,
    அது கீழ்த்தரமான ஒன்றே தான்.
    நம்மை பிறரும் கேலி செய்தால்,
    நம் தவறும் புரியும் அன்றே தான்.

    நாம் தவிர்க்க வேண்டிய செயல்களிலே,
    பிறர் தவிக்கச் சொல்வதும் ஒன்றாகும்.
    இதைத் தவிர்த்திடாது நடந்தாலே,
    பிறரிடம் நல்லுறவும் உண்டாகும்.
    -ஸ்ரீ
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எள்ளுதல் பாவம்
    எள்ளி நகையாடுதல் கேவலம்
    உங்கள் கவிதையை பார்த்தாவது எள்ளுவோர் எண்ணட்டும் எள்ளல் எள்ளுவோரையும் எள்ளும் என்று
    அருமையான கவிதை ஸ்ரீ
     
  3. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எள்ளல்னா என்று புரியலை, கவிதையை படித்து அறிந்தேன். மற்றவரை கிண்டல் செய்வது நம்மள்க்கு மகிழ்ச்சி தரும். நண்பரை பாதிக்காத வரை எள்ளல் செய்யலாம் இல்லையா?
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டம் மிக அருமை ராமன். நன்றி. -ஸ்ரீ
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வேண்டுமென்றே மற்றவரை நோகச் செய்வது தான் தவறு நிம்மி. தவறாக எடுத்துக் கொள்ளாத வரையில் கிண்டல் தவறில்லை. -ஸ்ரீ
     
  6. sana009

    sana009 New IL'ite

    Messages:
    53
    Likes Received:
    0
    Trophy Points:
    8
    Gender:
    Female
    எள்ளலுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை மிறினால் அல்லல் தான்.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எதையும் கண்டு எள்ளாமை வேண்டும்
    இந்தக் கருத்தை அழகுற சொல்லி விட்டீர்கள் ஸ்ரீ.
    நன்றி
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சரியாகச் சொன்னீர்கள் சனா. பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி சரோஜ். -ஸ்ரீ
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கவிதையில் நீங்கள் சொன்ன கருத்து அருமை ஸ்ரீ. :thumbsup:thumbsup

    (ஆனால் இந்த வரிகளில் மட்டும் ஏனோ எனக்கு உடன்பாடு இல்லை.அப்படி சொல்வது இந்த கவிதைக்கு எதிர்மறையாய் இருக்கிறது. நாம் எதோ சாபம் கொடுப்பது போல இருக்கிறது.அதை மட்டும் கொஞ்சம் மாற்றம் செய்திருக்கலாம் நீங்கள்.தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஸ்ரீ!)
     

Share This Page