1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்---நாரை!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 13, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
    கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
    அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?.....பாரதியார்

    நாரை
    பழவேற்காட்டு சாலையோரம், கடல் நீர் கால் தழுவும் கழிமுகம்
    குட்டிக் குட்டி மணல் திட்டுகள்.
    திரண்ட நீர்ப்பரப்பு ஏரியின் வாய்க்கால் வழி ஓரம்
    வெள்ளை கேன்வாஸில் வெளிர் சிவப்பு ஓவியம்.
    வெண்ணிற உடலும் செந்நிறக் கால்களும்…
    தமிழகத்தின் எப்ரல் மாத விருந்தாளிகள்
    அழகிலும் அறிவிலும் சிறந்த செங்கால் நாரை​
    நாராய் நாராய் வலசை போகும் செங்கால் நாராய்
    வாராய் வாராய் என் அருகாமை வாராய்
    சத்திமுத்தப் புலவரின் தூது சென்ற புள்ளினமே
    கண்டம் விட்டு கண்டம் தாண்டி புலம்பெயரும் புதிரே
    உன் விண்பாதை சமுத்திரப் பாதை கணித்து உயிரியலாளர்கள்
    உண்டாக்கினர் உலக பறவைப் பாதை வரைபடமே….அட !


    மஞ்சள் நிற அலகுகள்: சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள்
    ஆரஞ்சு நிறத் மெழுகுத் தலை:பாலெனத் தோன்றும் வெள்ளை
    உடல்.
    மார்பிலே ஒரு கருப்புப் பட்டை: மயில் கழுத்தென இறக்கைகளில்
    கருப்புக் கோடுகள்,
    சன்னமாக ஒரு ரோஜாவின் வண்ணம் நுனி வால் சிறகுகளின்
    கன்னம்.
    பூ நாரையே கொள்ளை கொள்ளும் அழகு தேவதையே…அடடே!


    வட்ட வடிவ மேடை:நடுவில் ஒரு பள்ளம்.
    பள்ளம் நிறைக்கும் குச்சிகள் :குச்சிகளை மறைக்கும் இலை தழை
    பூநாரையும் அதன் பூப்பந்து குஞ்சுகளும் சுகமாய்
    இந்த சொர்க்கபுரி வீட்டினுள்.


    பளு தாங்காமல் கீழே விழும் குச்சுகளுக்கும்
    நடக்குது பழுது பார்க்கும் வேலை.
    குட்டிகளுக்கு காவல் குடைபோல் நிழலாய் விரித்த ஒரு சிறகு.
    கூட்டினைப் பழுது பார்க்க குச்சியோடு வருவது மறு சிறகு.
    பொறுப்பு மாறி
    காவல் பணி செய்த இணை இப்போது பழுது பார்க்கிறது.
    குச்சியோடு வந்த துணை கூடு காக்கிறது
    வேலை முடிந்து இரண்டும் இப்போ அலகு கொண்டு
    மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தக் காட்சி
    அழகு சாட்சி அவைகளின் காதல் அரசாட்சி.
    அடடடே !!!!!!

    பசியில் வாயைப் பிளந்து “கவான் கவான்” என்கின்ற குஞ்சுகள்
    தொண்டை, கழுத்து வாய் பூராவும் மீனாய் பெற்றவர் அங்கே
    ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்க
    சில கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் சிந்த
    குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்ச “அதோ பார் அங்கே ஒன்று”,
    என பெரிய பறவை கூட்டில் கிடக்கும் மீனைக் காட்ட.
    மறுதலிக்கும் பிஞ்சு
    மனம் உருகி மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்க…
    ஐந்தறிவே என்று நாம் எண்ணும் பறவைகளுக்கும்தான்
    எத்தனை அறிவு!!!!!
    அடடடடே!!!!!!


    சோலையான வாழிடங்கள் வாடைகைக்குப் போய் விட
    கண்மாய்கள் கட்டிடங்களாய், ஏரிகள் ஏல அவலத்தில்
    சிற்றுயிர்கள் சீரழித்து புள்ளினங்கள் புதைக்கப்பட
    கண்மாய் பறவைகளுக்கு கண்துஞ்ச இடம் இல்லை.
    சிநேகமாய் வருகின்ற கூட்டம் சிறகொடிந்து போனதுவே
    இளைப்பாற வருகின்ற நீர்ப்பறவை காணாமல் போகுதுவே.

    மீன்களில் விஷம் தடவி
    பறவைகளை வேட்டையாடும் மனித மிருகங்கள்.
    கண்ணிவேட்டை கனவான்களே கண்ணியமா உங்கள் செயல்
    தஞ்சம் வருவோரை தத்தெடுத்து தாங்கும்
    தரம் நம் குணமல்லோ?
    இயற்கையின் எழிலில் இறைவனைக் காணும்
    வரம் நமதல்லோ?
    சிந்தித்து தணித்திடு உன்
    சிற்றறிவு வேட்கையை.
    காரைக் காடுகளில்
    கானம் பாடிவரும் நாரைக் கூட்டங்கள்
    உன் நண்பர்களாகட்டும்
    இயற்கை இன்பத்தில் அவற்றோடு கூட்டாக
    நீயும் பாடிடு
    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்



    [​IMG]
     
    Loading...

  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Very nice Saroj........enjoyed every line of it !!
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இன்னும் சொல்வதற்கு நிறைய செய்திகள் உண்டு.

    பறவைகள் உலகில் உள்ள இந்தப் புலம்பெயரும் வழக்கம்(Migration) அறிவியலுக்கு விளங்காத பெரும் புதிராகவே இருக்கின்றது. சிட்டுக்குருவி அளவு உள்ள புள்ளினத்திலிருந்து, வல்லூறு, நாரை போன்ற பல இனப் பறவைகள் இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் வலசை போகின்றன. ஒரு பறவை இனம் எந்த நாட்டில், எந்த இடத்தில் கூடுகட்டுகின்றதோ அந்த இடத்தைச் சேர்ந்தது.

    குளிர்காலத்தில் தரை பனியால் மூடப்படும் போது இவை வெப்ப நாடுகளுக்கு வலசை போகின்றன. அக்டோபரில் இந்தியா வந்து சேரும் இவை, மார்ச் ஏப்ரல் மாதங்களில் திரும்பிப் போகின்றன. அங்கே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து விட்டு, மறுபடியும் அக்டோபரில் பயணத்தை ஆரம்பிக்கின்றன. எப்படி ஒவ்வொரு ஆண்டும் அதே இடத்திற்கு வலசை போன்றன, எப்படி வழி கண்டு பிடிக்கின்றன என்ற கேள்விகளுக்கு இன்னும் பதிலில்லை. இயற்கையின் பெரிய புதிர் இது.

    நம்மூரில் குளிர்காலம் தொடங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற பல ஆயிரம் கி.மீ-களுக்கு அப்பாலிருக்கும் நாடுகளிலிருந்து இப்பறவைகள் இந்தியாவிற்கு ஆகாய மார்க்கமாக வருகின்றன. இனச்சேர்க்கை முடிந்து, முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரித்து, அவை வளர்ந்து பெரிதாகி அவையும் பறப்பதற்குத் தயாராகும் தருணம் வரை இவை இங்கேயே தங்கியிருக்கின்றன. பின்னால், வெயில் காலம் தொடங்கும் மார்ச்சு-ஏப்ரல் மாதங்களில், ஒவ்வொரு பறவைக் குடும்பங்களாக, தத்தமது குஞ்சுகளோடு தமது நாட்டிற்குச் சென்று விடுகின்றன. மீண்டும் அடுத்த குளிர்காலம் தொடங்கும் போது திரும்புகின்றன. இந்த cycle, பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    புள்ளினம் புலம் பெயர்வதின் மர்மம் தொடர்கின்றது.

    வட​கி​ழக்கு பரு​வ​மழை துவங்​கும் காலங்​க​ளில் பற​வை​கள் தங்​க​ளின் இன​வி​ருத்​திக்​காக சைபீ​ரியா,​​ ​ ஆஸ்​தி​ரே​லியா,​​ தெற்​கா​சிய நாடு​க​ளான,​​ சிங்​கப்​பூர்,​​ மலே​சியா,​​ இந்​தோ​னே​சியா,​​ ​ ​ சிலோன் மற்​றும் ஐரோப்​பிய நாடு​க​ளான ஜெர்​மனி,​​ ரஷ்யா உள்​பட பல்​வேறு நாடு​க​ளைச் சேர்ந்த பற​வை​க​ளான மஞ்​சள் மூக்கு நாரை,​​ நத்தை கொத்தி நாரை,​​ ​ செங்​கால் நாரை,​​ வெள்ளை நாரை,​​ கரு​நீல அரி​வாள் மூக்​கன்,​​ வெள்ளை அறி​வாள் மூக்​கன் நாரை,​​ கரு​நீல அரி​வாள் மூக்​கன் நாரை,​​ கருப்பு அறி​வால் மூக்​கன் நாரை,​​ பெரிய பூ நாரை,​​ சிறிய பூ நாரை,​​சாம்​பல் நாரை,​​ செந்​நாரை,​​கொருட்டு நாரை,​​ பச்சை நாரை,​​ உள்​பட பல்​வேறு வகை​க​ளைச் சேர்ந்த ​பற​வை​கள் பல நாடு​க​ளில் இருந்து செப்​டம்​பர்,​​ அக்​டோ​பர் மாதங்​க​ளில் பருவ மழை துவங்​கும் காலங்​க​ளில் வந்து இன​வெ​ருத்தி பெருக்​கத்​திற்​கா​க​வும்,​​ உண​வுக்​கா​க​வும் ​ இந்​தி​யா​வுக்கு வரு​கின்​றன.​

    நாரையின் வகைகள்:
    1.செங்கால் நாரை(Painted Storks)
    (அ)சங்குவலை நாரை
    2.கரண்டி மூக்கு நாரை(Spoon-billed Storks)
    3.பூநாரை
    (அ)வர்ணஜாலம்(அ) கிளிமூக்கு நாரை(Flamingo)
    4.சாம்பல் நாரை(அ)நாராயணப் பட்சி(அ)நதியன்(Grey Heron)
    மஞ்சள் மூக்கன் நாரை, கருப்பு அரி​வாள் நாரை,பச்சை நாரை,
    அகன்றவாய் நாரை(அ) நத்தை குத்தி நாரை(Open Bill),
    வெள்ளை அறிவால் மூக்கன் நாரை(White Ibis),கரு​நீல அரி​வாள் மூக்​கன் நாரை.....



    என் நீண்ட வரிகளின் ஆழம் சென்று படித்து கொடுத்த முதல் பின்னூட்டதற்காய் நன்றி .:bowdown
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    aiyo... super info saroj.....:thumbsup
    Saroj.....enakku venundrappa dictionary kudukkaatheenga.....:rant:rant:rant
    கழிமுகம்
    வலசை
    கண்மாய்கள்
    ithukkellam meaning sollunga.....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கழிமுகம்-Delta( A low triangular area of alluvial deposits where a river divides before entering a larger body of water)
    வலசை-migration
    கண்மாய்கள்..lake,pond....மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது

    கதை கேட்கும் ஆவலில் நீயும் கேட்டு விட்டாய் அப்புறம் இவளோ தானேனு என்னைக் கேக்க கூடாது.

    ஆயிரத்திஐநூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணதிற்கருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு வலசை போகும் செங்கால் நாரை ஜதை(pair) ஒன்றைக் கவனித்திருக்கின்றார். சத்திமுத்தப் புலவர் எழுதியதாகக் கூறப்படும் கவிதை இந்த நாரையை வர்ணித்து, மனைவியிடம் தூது போகும் படி கேட்டுக் கொள்கின்றது.



    நாராய்...நாராய்...செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்தவாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே!!!!
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Information gal pramtham...
    lady encyclopedia va neenga???:biglaugh

    just kidding...
    very nice description...
     
    Last edited: Jul 15, 2010
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wow Saroj.. Verum Naaraiya paarthutu irunthom neenga evlo rasichu solli ennaiyum rasikka vechiteenga..:thumbsup
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    saroj.......:thumbsup

    super super.....naarayai pathi ivlo azhaga info koduthu irukkeenga....
    neraya therinchukitten naarayai pathi unga kavithayin vaayilaaga...

    very nice....aduthu entha paravai ena aavalaaga ullathu...:)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் மூன்று நாட்கள் அமர்ந்து இந்த வரிகளை எழுதினேன்.களைப்பாய் இருந்தது.உன் பின்னூட்டம் படித்ததும் களைப்பு பறந்து மனம் லேசாகி போனது.புத்துணர்வு பொங்குகிறது
    கேட்கிறதா என் பாடும் குரல்
    "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"
    நன்றி என் தங்கையே.:)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வரி படித்து விழி விரித்து ரசித்து
    லயித்து கொடுத்த முத்தான பதிலுக்கு நன்றி தோழியே
     

Share This Page