1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்--- குயில்!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 28, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,606
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
    கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
    அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?.....பாரதியார்



    குக் ...குக் .குக்க்குகூ...
    அந்தரங்கமாய் வந்த அதிகாலை அழைப்பு
    சித்தரங்கமாய் என் கண் விழிப்பு.

    குரல்களின் குத்தகைக்காரி:இசைகளின் ராணி
    என் கருங்குயில் தோழி.
    அந்தி சந்தி மத்தியான நேரங்களில்
    நான் கேட்கும் ராகங்களில் மயக்குவது
    உன் மாயக்குரலோ.
    புத்தியை சித்தமாக்கும் உன் வித்தார விளையாட்டிலே
    எனை பத்திரமாய் பக்குவப் படுத்தினேன்.

    தினமும் கேட்பதுதான்
    அதிகாலை-பூபாளம் மதியம்-ஹம்சத்வனி பின்னிரவு-நீலாம்பரி
    ஆனால் இன்று
    இன்னும் இனிமையாய் அதிகமாய். .....
    காலைத் தென்றலோடு கலந்து குழைந்து வர
    அந்த ஒற்றைக் குரலில் மற்றக் குரல்கள் மறைய,
    எசப் பாட்டு இசை போட்டு பாட
    இனி ஒருவர் பிறக்கத்தான் வேண்டும்
    அவளுக்குத் தெரியாது
    பின்பற்றும் மனிதக்குரல்கள் அவளது இரவல் என்று !!!!!

    தோப்பு துறவுகளில் கொஞ்சும் குயில்
    விதிவிலக்காய்
    என் தெருவின் ஆலமரக் கிளைகளில்!
    தூரத்தில் ரசித்த அழகியை இன்று
    நேரத்தில் நேரிடையாய் பார்த்தால்.....
    நொடியில்
    கையில் தேநீர் கோப்பையுடன் மொட்டைமாடியில்!

    குயிலுக்கு இயற்கையிலேயே கூச்சம் அதிகம் என்பதால்
    ஒதுங்கினேன் ...
    கருக்குயிலியோடு பேச மனம் விட்டு
    என் நடையை விட்டு
    கொஞ்சம் தூரம் விட்டு.
    இசைவரும் திசையில் நான்
    குரல் வரும் திக்கில் அவள்!!!!!!!
    காகத்தின் தம்பி:கரியோன்:குயிலோன்

    கண்டவுடன் கண்டு கொண்டேன்
    அசை பிசகாமல் இசை கொடுத்தது அவள் இல்லை என்று
    கருந் தவிட்டு மேனியுடன் கரிய நிற முதுகு
    நுனிவளை அலகு:இடையில் ரத்தச்சிவப்பாய் விழிகள்
    சிவந்த உள்வாய் தெரிய
    எக்கி எம்பி கூவிக்கொண்டிருந்தது.
    கண்டு கொண்டேன் கண்டவுடன்
    அது "அவள்" இல்லை "அவன்" என்று
    பாடுங்குயில் அவன் தான் என்று.!!!!

    பாட்டெடுக்கும் பாவலர்க்கும்
    காடுமலை சுற்றி திரிந்து குயில் பாட்டுதந்த பாரதிக்கும்
    தெரியுமா இந்த சேதி ??????

    பெண்ணுக்கு பெருமையாய் பெரிதாய் பேசப்படும்
    நான் தேடிய குயில் அழகி எங்கே..
    இலைகளுக்கிடையில் சலசலப்பு:கொஞ்சம் மரமரப்பு
    அவனை விட உப்பலாய்
    உடல் எல்லாம் வெண் புள்ளி சட்டைகளாய்
    உம்மென்று அமர்ந்திருந்தார் அம்மையார்.

    மேல் கிளையில்
    குக் ...குக் .குக்க்குகூ...
    உள்ளூரத் தேங்கிய தன் தாபத்தை
    தன் குரலில் கொட்டிய ஆண் குயில்.

    கீழ் கிளையில்
    கிக்கீச் ...க்கி கீச் கிக் ச்....
    அவனது குரலை அலட்சியமாய்
    கொஞ்சம் திமிராய் பெண்குயில்.
    இருக்காதா பின்னே!!!!!

    சுத்தமாய் படுவதும் இல்லை:கொஞ்சமாய் பறப்பதுவும் இல்லை
    பத்தியமாய் பக்கத்தில் கிடைக்கும் உணவோடு
    பத்திரமாய் தன் நினைவோடு.
    தாய்மைக்கென்ற தவிப்புகள ஏதும் இல்லை
    இரைதேடி கரைவந்து குஞ்சு வளர்ப்பும் இல்லை
    பசியாற்றி பறக்கச் சொல்லும் பொறுப்பும் இல்லை
    முட்டை இடுவதோடு சரி
    அதுவும்
    காகத்தின் கூட்டில் இரவலாய்
    அது இல்லாத நேரத்தில் பரவலாய்
    கேட்டால்.
    குரல் கொடுத்த மேலோன்
    கூடுகட்டும் வித்தையை எங்கள்
    சிந்தைக்குள் வைக்க மறந்தான் என
    சோக கீதம்....

    காகத்தோடு காகமாய் தவறுதலாய் குயில்.
    வளர்ந்த பின்...........
    குக்குக் .குக்க்குகூ.......கிக்கீச் ...க்கி கீச் கிக் ச்
    காகம் உணர்ந்தது
    பொன் குஞ்சென்று தான் நினைத்த
    தன் குஞ்சு குயில் குஞ்சென்று
    குயிலும் பறந்தது
    தன் குஞ்சென தனை வளர்த்த
    தாயின் நெஞ்சம் மறந்து.
    மரத்தில் மட்டுமல்ல-இந்த
    தரணியிலும் உண்டு இதுபோன்ற
    தரமான தாய் உள்ளங்கள்.
    மறுத்துப்போன சேய் நெஞ்சங்கள்.

    ஆகாசமாய் அசமந்தாய் பெண்குயில்
    தன் குரலுக்கு பின் குரல்
    பின்னால் வராதது கண்டு
    நேசத்தால் சோகமாய் ஆண் குயில் .
    அவ்விடம் விட்டு வேறொரு மரம் நோக்கி
    கிளை விட்டு மீண்டும் கிளை தாவி
    குக் ...குக் .குக்க்குகூ...ஆண் குயிலின் ஆலாபனை.

    எண்ணம் சிதைய
    மனம் பதைக்க...
    மேற்கொண்டு ரசிக்கமுடியாமல்
    கீழ் இறங்கினேன்.

    சொல்லவா முடியும் ?!
    புல்புல் பறவையும் சில சிட்டுக்குருவியும்
    உன்னைவிட இனிமையாய் இசை கொடுக்கும் என்று
    சோம்பல் அடைந்திருக்கும் குரல் இன்னும் சோகம் ஆகாதா?
    கரும்பலகை முகம் இன்னம் கருத்துச் சிறுக்காதா???

    கருங்குயிலே கலங்காதே!
    கார்வண்ணக் கண்ணனின் குழலோசை
    உன் இன்குரலின் பின்தானே.

    கேட்கவா முடியும்????
    வண்ணம் கொடுக்க கூப்பாடு கொடுத்தான் இறைவன்
    எண்ணம் இல்லாமல்
    அன்னமாய் இறுதியில் இருளில் சென்றது நீதானே என்று
    கோபம்கொண்ட தலைவன் தடவினான்
    இருளின் கருப்பை உன்மேல்
    இல்லையெனில்
    முதலில் வந்த மயிலின் நிறம் உனக்குத்தான்
    இதை உன்னிடம்
    சொல்லத்தான் முடியுமா என்னால்தான்.


    இன்றும்
    குக்குக் .குக்க்குகூ......
    சிங்காரமாய் குரலின் கீதம்--ஆனால்
    லயிக்கவில்லை என் மனம்
    ஏனென்ற காரணம் தெரியவில்லை
    அவள் அவனான காரணமோ?
    குயிலைப் பற்றிய என்
    கற்பனைக் கூடு கலைந்ததோ? புரியவில்லை

    இந்நேரம் உங்களுக்கும் புரிந்திருக்கும்:வந்திருக்கும்
    திரைப் பட வரிகளும்
    சிற்றிலக்கிய வகைகளும்.
    இப்போது சொல்லுங்கள்
    கருமை குயில் குயிலின் குரல்
    குரலின் இசை இசையின் இனிமை
    இனிமையின் சுரம் சுரத்தின் ராகம்
    கல்யாணியா...காம்போதியா
    பிலஹரியா..கரகரப்ரியாவா


    [​IMG]

    [​IMG]


    குயிலின் கானத்தையும் என் கவியின் நீளத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாய் படித்ததற்கு நன்றி.Bow.Bow.Bow.
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    rombbbbbbbbbbbbbbbbbaaaaaaaaaaaaa nalla irukku saroj.....

    unmayave pala thagavalga neengal solli than therinthathu....

    inimel kuyiln kkanam kekkum pothu ungal kavithai gyabagam varuvathu thavirkka mudiyatha ondru....

    miga nanru thozhi...
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்!
    குயில் பாட்டு கேட்க ஓடோடி வந்தேன் அந்த குயில் பாட்டை இங்கு பாடிய ஒரு குயிலின் வரிகளில் மெய் மறந்து நின்றேன்!
    என்னே உன் வரிகள் ? என்னே உன் வார்த்தைகள்?
    அந்தே குயிலே காதுகளில் இனிய கீதம் பாடுவதை உணர்ந்தேன்!
    இதோ அந்த குயில் பாட்டுக்கு இனிமை சேர்த்த உங்கள் கவிபாட்டுக்கு என் பரிசாய்![​IMG][​IMG]
     
    Last edited: May 28, 2010
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அன்புள்ள அக்கா
    குயிலே உங்கள் கவியை கண்டு திகைத்து விடும்
    என்னை பற்றி என்னை எழுத சொன்னாலே நான் இவ்வளவு
    எழுதி இருக்க மாட்டேனே என்று வெட்கி குனிந்திருக்கும்

    ஏய் ! குயிலே நீ கவலை படாதே
    நீ கருப்பாக இருந்தாலும்
    கலையாக தான் இருக்கிறாய்
    உன்னை ரசிக்க நாங்கள் உள்ளோம்
    உன்னை கவி பாட எங்கள் அக்கா உள்ளார்கள்
    பாடியும் விட்டார்கள்
    உன் இனிய குரலால்
    அக்காவின் வரிகளுக்கு இசை அமைத்து கொடுத்தால்
    உனக்கும் பெருமை
    உன்னை கவி பாடிய எங்கள் அக்காவிற்கும்
    சந்தோசம் பிறக்கும்
    சென்று விடு அவர்கள் வீடு தேடி
    தந்து விடு உன் இசைதனை
    படைதிடுவார்கள் அழகிய பாட்டினை

    அருமையான கவிதை தந்த அக்காவிற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள் நன்றிகள்.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ் கவிதை மிகவும் நன்று.

    ஒரு குயிலைப் பற்றிய கவிதயா? இல்லை,
    நிறைய குயில்களைப் பற்றிய கவிதையா?
    என ஒரு ஐயம் வந்த ஐயனார் ஆகிவிட்டேன்.
    அதை சொல்லும்பொழுதும் ஒரு பயம் - அனுப்பு என்னிடம்,
    ஐம்புலனையும் சரி செய்து விடுகிறேன் என்று நீங்கள் எங்கோ,
    விட்ட அறைகூவல் ஞாபகம் வந்து விட்டது....ரொம்ப நீளம் தான்,
    பார்டரில் இந்தியக் குயிலின் பாட்டு பாகிஸ்தானுக்கு கேட்பது போல்,
    உங்கள் குயில் கவிதையின் நீளம் பாகிஸ்தான் பார்டரை தாண்டிவிட்டதோ? :):hide:
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    வாவ்....... அழகான குயில் பாட்டு யஷ்.......
    கவிதையில் இருக்கும் இனிமையில் நீநீநீளம் தெரியவில்லை.....
    படமும் அருமை.
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Saroj, pinni udhariteenga !!
    Kuyil paattu mattum thaan kettu irukken........
    Indha azhagu kavithiyum adhu pola miga mannikkavum mikka azhagaga irukku !!
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,606
    Trophy Points:
    615
    Gender:
    Female

    இனிமேல் குயிலின் கானத்தில் எனைக் காணப் போவது .ஆஹா......ஆகாயத்தில் நான் பறக்கிறேன் ஆயாசமாய்
    நன்று நன்று என்று சொல்லி என்னை என் குயிலோடு வந்து ரசித்து முதல் பின்னூட்டம் கொடுத்து எங்கள் சங்கீதக் கச்சேரிக்கு முன்னோட்டம் கொடுத்த தோழிக்கு நன்றி Bow.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,606
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் காதுகளுக்கு இனிமையை என்று சொல்லி உன் கண்களுக்கு விருந்தான என் வரிகளில் உன்னை மறந்து நீ கொடுத்த பூச்செண்டில் எனை நான் மறந்தேன் .
    மீண்டு வந்து தான் எழுத வேண்டும்
    மீண்டும் என் கவி வரிகளை
    நன்றி,, உன் பாசமான பாராட்டுகளுக்கும் Simply சிம்லி பின்னூட்டத்திற்கும் :cheers
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,606
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீ கொடுத்த நீளமான பின்னூட்டத்தைக் கண்டு
    வெட்கப் பட்டு அந்த குயிலே என்னிடம் சொன்னது
    "இப்படியா என் மானத்தை வாங்குவது என்று....
    சொல்லி இருந்தால் நான்தான் இதை எழுதிக் கொடுத்தேன் என்று சொல்லி இருப்பேனே????"
    நானும் சொன்னேன் "வேண்டுமானால் இரண்டாம் பாகத்தை நீயே எழுதிகொடு ....போட்டு விடுகிறேன் உன் பெயரிலேயே"

    பாசத்துடன் குயிலை என் வீட்டிற்கு அனுப்பும் பாசக்கார பயலே
    நன்றி.
    வந்தவுடன் சொல்கிறேன் :தருகிறேன் அவன் தந்த பாட்டை!!!!
     

Share This Page