1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வாழ்வின் கவிதை

Discussion in 'Stories in Regional Languages' started by GowriJ, Feb 11, 2014.

  1. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
  2. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Hi Gowri,

    Very nice story and you have good writing skills....... please do not stop,,,,, waiting for the next episode.

    Banu
     
  3. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வாழ்வின் கவிதை - 5

    அடுத்த நாள் காலை வழக்கம் போல் லேட்'ஆக எழுந்த மித்ரா அவளது மொபைல்'ஐ பார்க்கவே இல்லை. மதியம் ரம்யாவை அழைப்பதற்காக எடுத்த பொழுது தான் அதை முன்தினம் ஸைலென்ட் மோட்'இல் போட்டது ஞாபகம் வந்தது அவளுக்கு. அதில் ஒரு புதிய எண்ணில் இருந்து இரண்டு முறை அழைப்பு வந்திருந்தது மேலும் ரம்யா, ரகு விடம் இருந்தும் அழைப்பு வந்திருந்தது. ரகுவிடம் இருந்து 10 மெஸேஜஸ் வேறு வந்திருந்தது.

    ' போச்சு, இவர்கள் இரண்டு பேர்கிட்ட இருந்தும் நல்லா வாங்கி கட்ட போகிறேன்' என்று எண்ணிக்கொண்டே ரம்யாவை அழைத்தாள். Phone எடுத்தவுடனே ரம்யா திட்ட ஆரம்பித்து விட்டாள், 'ஏன் டி உனக்குலாம் எதுக்கு phone? நீ phone எடுக்காததற்கும் மெஸேஜ் ரிப்லை பண்ணதாதற்கும் ரகு என் உயிர வாங்குறான். ஃபர்ஸ்ட் அவன்கிட்ட பேசிவிட்டு சாப்பிட வா' என்று கூறிவிட்டு மித்ராவின் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.

    மித்ரா, 'ஆஹா இவ செம கடுப்புல இருக்க போலயே. அடுத்து ரகு. அவன் வேற கோவமா இருந்த பேச மாட்டானே. என்ன பண்றது!! சரி கால் பண்ணுவோம்' என்று அவனுக்கு அழைத்தாள். ரகு, 'ம் சொல்லு' என்று மட்டுமே கூறினான். அதில் இருந்தே அவன் கோவமாக இருக்கான் என்பதை அறிந்த கொண்ட மித்ரா, 'ஸாரீ ரகு. நேற்று இரவு மொபைல் ஸைலென்ட்*ல்யா போட்டேன். அதன் பின் மறந்தே போய் vitten' என்று கூறினாள். 'சரி நீ போய் சாப்பிடு நாம் மாலை பேசி கொள்வோம்' என்று கூறிவிட்டு அவனும் phone ஐ வைத்து விட்டான்.

    இது தான் ரகு. அவனுக்கு கோவம் வந்தால் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுவான். இவன் இப்படி பேசினாலே மித்ராவிற்கு கஷ்டமாக இருக்கும். அதன் பின் அன்நாளின் வேலைகளை முடித்து விட்டு ரம்யாவும் மித்ராவும் தங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடன் மறக்காமல் ரகுவிற்கு மெஸேஜ் அனுப்பினால் மித்ரா தாங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்துவிட்டதாக. அதற்கு அவன்,' தயாராக இரு. நான் வேளச்சேரி தான் வந்து கொண்டிருக்கிறேன். உன் விடுதி முன்பு இன்னும் 10 நிமிடங்களில் வந்து விடுவேன்' என்று பதில் அனுப்பினான். ரம்யா விடம் சொல்லிவிட்டு மித்ராவும் கிளம்பினாள்.

    சரியாக 10 நிமிடங்களில் வந்த ரகுவை பார்தத உடன் மித்ரா மீண்டும் ஸாரீ என்று கூறினாள். ரகு, 'ஏன் madam நைட் மொபைல் ஸைலென்ட்'ல போட்டது சரி. ஆனால் தினமும் காலை எனக்கு ஆஃபீஸ் சேர்ந்த வுடன் அனுப்பும் மெஸேஜ் கூட மறந்து விட்டதா? விடுதியில் இருக்கீங்க எதுவும் ப்ராப்*லெமாகா இருக்குமோ வென்று யோசிக்க தோணுது. சரி அதை விடு. உனக்கு என்ன ஆச்சு? என்ன யோசித்து கொண்டிருக்கிறாய்?' என்று கேள்வியில் முடித்தான்.

    அவனை ஆச்சிரிய்மாக பார்த்தால் மித்ரா. 'உனக்கு எப்பிடி தெரியும்?' என்று வினவினாள். 'உன்னை பற்றி எனக்கு தெரியும். நீ என்ன விஷயம் என்று முதலில் சொல்' என்று கேட்டான். மித்து அவனிடம் ப்ரசன்னாவிற்கு நம்பர் அனுப்பியத்தையும் atharku அவனிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்றும். அதனால் தான் அவன் தவறாக ennivittano என்று யோசித்து கொண்டிருப்பதாக கூறினாள்.

    அதற்கு ரகு, 'இதுக்கா இவ்ளோ யோசிக்குற? அவன் உன்னை தவறாக எண்ணி இருந்தால் உன்னை அழைக்க மாட்டான். அவனிடம் பேசும் சந்தர்ப்பம் உனக்கு அமைய போவதில்லை. தவறாக எண்ணவில்லை என்றால் நிச்சயம் அவன் உன்னை அழைப்பான். அதனால் அதை பற்றி யோசிக்காதே' என்று கூறிவிட்டு மற்ற பொது விஷயங்களை பேசி அவளை இயல்பாக்கினான்.

    பின் அவளை விடுதியில் விட்டு விட்டு தன் இருப்பிடம் சென்றான். மித்ராவிற்கு மீண்டும் அந்த புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்பொழுது தான் அவளுக்கு நேற்றும் இதே எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது ஞாபகம் வந்தது. யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே அழைப்பை ஏற்றாள்.

    மித்ரா, 'hello யாரு பேசுறது?' என்று வினவியவுடன் 'நான் பிரசன்னா பேசுறேன். எப்படி இருக்கிறாய் மித்ரா?' என்று பதில் கிடைத்தது. மித்ராவால் நம்ப முடியவில்லை. 'ஹே நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்பிடி இருக்கிறாய்?' என்று கேட்டாள். ப்ரசன்னா, 'நான் நல்லா இருக்கேன். ஸாரீ நான் ரொம்ப நாட்களாக mail செக் பண்ணவே இல்ல. அதனால் தான் உன் மெஸேஜ் பார்க்கவில்லை இத்தனை நாள். நேற்று தான் பார்த்தேன். உனக்கு அழைத்தேன். ஆனால் நீ எடுக்க வில்லை' என்று தான் இத்தனை நாள் அழைக்காததற்கு விளக்கம் அளித்தான். மித்ரா, 'நான் மொபைல் ஸைலென்ட் modeil போட்டிருந்தேன் அதனால் கவனிக்கவில்லை' என்று கூறினாள்.

    இப்படியே இருவரும் 1 மணி நேரத்திற்கு மேலாக பேசினர். என்ன பேசினார்கள் என்று கேட்டால் இருவருக்கும் தெரியாது. ப்ரசன்னா விற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது மித்ரா விடம் பேசியது. ஏன் என்று அவனுக்கு புரியவில்லை!!!
     
    3 people like this.
  4. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
  5. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வாழ்வின் கவிதை - 6

    இப்படியே நாட்கள் சென்றது. ப்ரசன்னா மித்ரா நட்பு வளர்ந்து கொண்டிருந்தது. இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் மித்ராவிற்கு ப்ரசன்னாவை தனியாக சந்திக்க விருப்பம் இல்லை. அதனால் அவனை அவளது விடுதி தோழிகளுடன் பீச் செல்லும் போது வர சொன்னாள். அதுவே ப்ரசன்னாவிற்கு போதுமாக இருந்தது. இனம் புரியாத சந்தோஷம் மற்றும் குறுகுறுப்புடன் இருந்தான். கணேஷ், 'என்ன ப்ரசன்னா உன் முகத்தில் ஒரு 1000 வாட்ஸ் பல்ப் எரியுது. என்ன விஷயம்? அது மட்டும் இல்லாமல் Sunday evening என்னை விட்டுவிட்டு எங்கேயோ கிளம்பி கொண்டிருக்கிறாய்?' என்று வினவினான்.

    ப்ரசன்னா, 'மித்ராவ பார்க்க போகிறேன் டா'. என்று பதில் அளித்தவனிடம் கணேஷ் , 'மீட் பண்ற அளவுக்கு போயிருச்சா. கலக்கு டா. ஆல் த பெஸ்ட்' என்று அவனை கலாய்த்தான். ப்ரசன்னா, 'உன் கற்பனைய கொஞ்சம் நிறுத்து. வேண்டும் என்றால் நீயும் என்னுடன் வா' என்று அழைத்தான். கணேஷ், 'நான் எதுக்கு டா நந்தி மாதிரி உங்க இரண்டு பேருக்கும் நடுவில். நீ போய்விட்டு வா' என்றான். ப்ரசன்னா, 'நீ அடங்கவே மாட்டியா டா. மித்ரா அவளது friends உடன் பீச்க்கு செல்கிறாள். என்னையும் வர சொன்னாள் அவ்வளவு தான். நீ வருகிறாயா இல்லயா? ஏற்கனவே டைம் ஆயிருச்சு' என்று கேட்டான். கணேஷ்'உம் சரி என்று அவனுடன் சென்றான்.

    பீச்சை அடைந்தவுடன் ப்ரசன்னா மித்ராவிற்கு அழைத்து எங்கு வர வேண்டும் என்று கேட்டு சென்றான் கணேஷுடன். இவர்கள் சென்ற பொழுது மித்ராவின் மற்ற தோழிகள் சென்று விட்டிருந்தனர். ரம்யா மட்டும் அவளுடன் இருந்தாள். கணேஷை பார்த்த மித்ரா, ப்ரசன்னாவிடம், 'ஹே இது கணேஷ் தான?' என்று கேட்டாள். அவன் ஆம் என்றவுடன். கணேஷஇடம் 'எப்பிடி இருக்கிறாய் கணேஷ்? என்ன பண்ணிட்டிருக்க? நீயும் பிரசன்னா கூட தான் தங்கி இருக்கிறாயா?' என்று கேள்வியாக அடுக்கினாள். கணேஷ்,' நான் நன்றாக இருக்கிறேன். நான் பிரசன்னா வேலை பார்க்கும் அஃபிஶில் தான் வேலை செய்கிறேன். அப்புறம் ஆம் அவனுடன் தான் தங்கி இருக்கிறேன்' என்று அவளது அனைத்தும் கேள்விகளுக்கும் பதில் அளித்தான்.

    பின்பு அவர்களுக்கு ரம்யாவை அறிமுகம் செய்து வைத்தாள் மித்ரா. நால்வரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். மித்ரா, ப்ரசன்னாவிடம் பேசிய அளவு கணேஷஇடம் பேசவில்லை. இதை ரம்யா கவனித்து கொண்டிருந்தாள். அவள் ப்ரசன்னாவின் அசைவுகளையும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். அவனும் மித்ராவிடம் பேசுவதை தான் விரும்பினான். ஆனால் அதை பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம் என்று ரம்யாவும் இவர்களது பேச்சில் கலந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து பெண்கள் இருவரையும் அவர்களது விடுதியில் விட்டுவிட்டு தங்களது இருப்பிடம் நோக்கி சென்றனர் பிரசன்னாவும் கணேஷும்.

    செல்லும் வழி எங்கும் ப்ரசன்னா ஏதோ ஒரு யோசனையில் இருந்தான். சிறிது நேரம் பொறுத்து பார்த்த கணேஷ், 'என்ன பிரசன்னா என்ன ஆச்சு? ஏன் அமைதியா இருக்க? எதுவோ யோசித்து கொண்டிருக்க மாதிரி இருக்கு?' என்று வினவினான். அதற்கு ப்ரசன்னா, 'என்னனு தெரியல டா. எனக்கு ஆரம்பித்தில் இருந்தே மித்து கிட்ட பேசுறதுல ஒரு சந்தோஷம் இருக்கிறது. இன்று அவளை சந்தித்த பிறஹோ அவளை விட்டு பிரிய மனமே இல்லை. ஏன் என்று தான் புரிய மாட்டேன் என்கிறது' என்று தன் குழப்பத்தை கணேஉஷஇடம் கொட்டினான். கணேஷ், 'இது நீ நன்றாக யோசிக்க வேண்டிய விஷயம் டா. கொஞ்ச நாள் பேசுவதிலோ ஒரு தடவை பார்ப்பதிலோ முடிவு செய்து விட கூடாது. இன்னும் சிறிது நாட்கள் பொருத்திரு' என்று ஒரு நல்ல நண்பனாக அவனுக்கு பதில் கூறினான். ப்ரசன்னாவிற்கும் அவன் சொல்வது சரி என்றே பட்டது.

    விடுதிக்கு வந்த பிறகு மித்ரா எப்பவும் போல் இருந்ததால், ரம்யா பீச்சில் நடந்தததை பற்றி ஒன்றும் கேட்கவில்லை. பின்பு வழக்கம் போல் மித்து ரகுவிடம் அன்றய நிகழ்வுகளை தொலைபேசி மூலம் பகிர்ந்து கொண்டாள். இன்று மித்ரா மிகவும் சந்தோஷமாக இருப்பது புரிந்தது ரகுவிற்கு. இதற்கு காரணம் அவள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்த அவளது தோழனாக இருக்கும் என்று நினைத்தான். அதனால் வேறு எதுவும் கேளாமல் வேறு கதைகள் பேசிவிட்டு வைத்தான். அங்கு தன்னை நினைத்து ஒரு ஜீவன் குழப்பத்தில் இருப்பதை அறியாமல் மித்து நன்றாக உறங்கினாள்.

    ப்ரசன்னாவிற்கு தூக்கமே வரவில்லை. இது வெறும் infactuation ஆ அல்லது காதலா என்பதில் அவனுக்கு பெரிய குழப்பம் இருந்தது. அதனால் இதை பற்றி இப்பொழுது யோசிக்க வேண்டாம் என்று முடிவு செய்து தூங்க முயன்றான்.

    ப்ரசன்னாவிற்கு இருப்பது காதலா? மித்ராவிற்கும் இது போல் எண்ணம் ப்ரசன்னாவிடம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
     
    1 person likes this.
  6. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் வாழ்வின் கவிதை - 7

    இப்படியே நாட்கள் எந்த ஒரு வித்தாயசமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பொழுது, ரகு ஒரு நாள் மித்ராவிடம், ஸ்டார் கிரிக்கெட் ஶோவிற்கு தன்னிடம் ஃப்ரீ டிக்கெட்ஸ் இருப்பதாகவும் ஆஃபீஸ் friends மற்றும் காலேஜ் friends அனைவருடனும் செல்லவிருப்பதாகவும் மித்ராவையும் அழைத்தான். ரம்யாவும் தன் ஊருக்கு சென்றிருப்பதால் மித்ராவும் சரி என்றால். இதை ப்ரசன்னாவிடம் அன்று பேசும் பொழுது சொன்னாள். அதற்கு ப்ரசன்னா, 'ஏன் நான்லாம் வர கூடாதா?' என்று கேட்டான். மித்ரா, 'அப்படி இல்லை பா. ஆனால் டிக்கெட் என்னிடம் இல்லயே' என்று கூறினாள். ப்ரசன்னா,' ஹே நான் சும்மா தான் கேட்டேன். நீ உன் friends உடன் என்ஜாய் செய்துவிட்டு வா' என்றான்.

    இருந்தாலும் மித்துவிற்கு அவன் அப்படி கேட்டபிறகு அவனை விட்டு செல்ல மனம் இல்லை. தயங்கி தயங்கி ரகுவிற்கு அழைத்தாள். 'என்ன டா மித்து? என்ன விஷயம்? நீயா கூப்பிட மாடியே?' என்று வினவிய ரகுவிடம், 'ரகு ஒன்று கேட்டால் தப்பாக நினைக்க மாட்டியே?' என்றால். 'உன்னிடம் எத்தனை தடவை சொல்றது? என்னிடம் நீ என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் கேட்கலாம் என்று. என்ன கேளு?' என்றான் ரகு ஒரு சிறு கண்டிப்புடன். மித்ரா,' நாளை நடக்கும் அந்த கிரிக்கெட் ஷோவ்விற்கு உன்னிடம் எக்ஸ்*ட்ரா டிக்கெட் இருக்கிறதா? என்று கேட்டாள்.


    'யார கூப்பிடானும்? டிகெட் எல்லாம் இருக்கு நிறைய'? என்றான். 'ஏன் ஸ்கூல்*மேட் ப்ரசன்னாவை தான். அவனும் வரலாமானு கேட்டான். அவனுக்கு தான்' என்று மென்று விழுங்கினாள். ரகு,'அவ்வளவு தானே இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம். வர சொல். நோ ப்ராப்லம். அப்போ நீ chepaukkam ஸ்டடியத்திற்கு நேராக வந்து விடு ப்ரசன்னாவுடன். என்னால் உன்னை கூப்பிட வர இயலாது. நாம ஸ்டடியாமில் மீட் பண்ணலாம்' என்றான். இதை கேட்ட மித்ரா அதிர்ந்தாள். ப்ரசன்னாவுடன் தன்னால் எப்பிடி தனியாக செல்ல முடியும். இந்த ரகுவிற்கு என்ன ஆகிவிட்டது என்று நினைத்து கொண்டே,' என்ன விளையாடுகிறாயா ரகு? நான் எப்பிடி அவனுடன் தனியாக வர முடியும்' என்று பொரிந்தாள்.


    ரகுவிற்கு ஆச்சிரியம். மித்ரா எப்பொழுதாவது தான் அவனிடம் கோவத்தை காட்டுவாள். ஆனால் இந்த சாதாரண விஷயத்திற்கு ஏன் இவ்வளவு tension ஆகிறாள் என்று. ' ஹே கூல் கூல். எதுக்கு இந்த tension? அவர் உன் ஃப்ரென்ட் தான? அதனால் அவருடன் வா. ஒன்றும் தவறில்லை. எனக்கு வேறு வேலை இருக்கிறது. சரியா?' என்று ஒரு கேள்வியுடன் முடித்தான் ரகு. மித்ராவும் சரி என்று கூறினாள் அரை மனதாக.

    அடுத்த நாள் காலை ப்ரசன்னாவிற்கு அழைத்தாள். ' என்ன மித்து? சீக்கிரமே கால் செய்திருக்கிறாய்? நீ இன்று அந்த கிரிக்கெட் ஷோவ் செல்வதாக சொன்னாய் அல்லவா? கிளம்பவில்லையா?' என்று கேட்ட ப்ரசன்னாவிடம், 'அது அப்டேர்னூன் தான். ஹே டிகெட்ஸ் இருக்கு. நீயும் வருகிறாயா?' என்றால். ப்ரசன்னாவிற்கு இதை கேட்டவுடன் துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது. அன்று பீச்சில் சந்தித்த பிறகு அவன் மித்ராவை பார்க்கவில்லை. இன்று அந்த வாய்ப்பு கிடைத்தவுடன் அவன் உள்ளம் துள்ளியது. இருந்தாலும் அதை காண்பிக்காது,' நான் சும்மா தான் பா கேட்டேன். நீ சென்று வா' என்றான்.


    மித்ரா, 'ஏன் உனக்கு வேறு ஏதும் வேலை இருக்கிறதா?' என்று கேட்டாள். அதற்கு இல்லை என்று பதில் அளித்தவனிடம், 'அப்புறம் என்ன? நீயும் வா' என்றால். ப்ரசன்னா, 'சரி நான் chepaukkam எப்பிடி வருவது?' என்று வினவினான். மித்ரா, 'எப்படி வருவது என்றால்? எனக்கு புரியவில்லை' என்றால். ப்ரசன்னா, 'எனக்கு வழி தெரியாது. அது தான் எப்படி வரணும் என்று கேட்டேன்' என்றான். இதை கேட்ட மித்து, 'சுத்தம். என்னையே நீ தான் அழைத்து செல்ல வேண்டும். நீ என்னடாவென்றால் எப்பிடி போக வேண்டும் என்று என்னையே கேட்கிறாய்' என்றால்.

    இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை ப்ரசன்னா. இன்று என்ன நமக்கு நாள் மிகவும் நன்றாக இருக்கிறது போலவே என்று நினைத்து கொண்டே, 'உன் friends யாரும் இல்லையா?' என்று கேட்டான் சந்தோஷத்தால் துள்ளிய தன் மனத்தை மறைத்து கொண்டு. மித்ரா அதற்கு, 'இல்லை பா. என் ஃப்ரென்ட் ரகுவிற்கு வேறு வேலை இருக்கிறதாம் அதனால் உன்னுடன் வர சொல்லிவிட்டான்' என்றான். ஐ ஜாலீ என்று குதி ஆட்டம் போட்டது ப்ரசன்னாவின் மனது. அதை காண்பிக்காது, ' சரி நான் என் friends கிட்ட கேட்குறேன். நீ சென்று ரெடீஆக இரு' என்று கூறி வைத்தான்.

    சிறிது நேரம் கழித்து மித்ராவை அழைத்தவன், 'நாம் MRTC ட்ரைநில் போய்விடலாம். நான் வந்து உன்னை விடுதியில் அழைத்து செல்கிறேன்' என்றான். மித்ரா சரி என்றால். ப்ரசன்னா ஒன்றை மட்டும் சொல்லவில்லை. அதாவது அவன் மித்ராவை அவனது பைக்கில் அழைத்து கொண்டு station செல்ல போவதை. அவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. மித்து அவனுடன் பைக்கில் வருவாளா என்று. பயந்து கொண்டே சென்றான். மித்ரா ப்ரசன்னாவிடம் கோவம் கொள்வாளா?
     
    2 people like this.
  7. GowriJ

    GowriJ Bronze IL'ite

    Messages:
    24
    Likes Received:
    25
    Trophy Points:
    33
    Gender:
    Female

Share This Page