1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் ஆசை மச்சான்...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Dec 30, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உச்சரிக்கும் போதெல்லாம்
    உள்ளுக்குள் சிலிர்க்கும் உன்
    பேரை, மந்திரமாய் உச்சாடனம்
    செய்ய ஆசைதான்...


    எச்சரிக்கும் உந்துதலாய், எனை
    எட்டிப் போக வைக்கும் என் மன
    உணர்வுகளை, வெட்டிப் போட
    ஆசைதான்..


    என்னில் நானே எரிந்து போவதை
    விட்டு, உன்னில் நானே கரைந்து
    போக ஆசைதான்...


    உன்னிலே நான் கரைந்து போனாலும்
    உன் உயிரோடு நான் உறைந்து போக
    ஆசைதான்


    ஒரு நொடியும் உன்னை பிரியாது
    உன்னோடு நான் கொடியாய் பின்னிக்
    கொள்ள ஆசைதான்...


    உன்னை முழுதும் கொள்ள ஆசை
    உன்னில் எனை நான் கொல்ல ஆசை
    அச்சோ உன் மேல் கொள்ளை ஆசை


    ஆதி முதல் அந்தம் வரை சந்தம் கொண்டு
    நான் பாட அத்தனையும் ஆசைதானே
    என் ஆச மச்சான்...


    என் மேல உசிர வெச்சானே.. வெச்சானே
    என் நெஞ்சோட அவன் நெனப்ப தெச்சானே... தெச்சானே
    என்னிலே, நீயும் ஒன்னான மச்சானே... மச்சானே...
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மச்சான்னு கூப்பிட்டு என் மனச தச்சவளே

    மந்திரமாய் ஒன் பேரை உச்சாடனம் செய்யும் போது
    எந்திரமாய் என் உதடு ரெண்டும்
    தந்திரமாய் உன்னோடு ஒட்டிக் கொள்ளுதே
    என்னைக் கொல்லுதே !!!

    எச்சரிப்பு இருந்தும் கூட ஒன் உச்சரிப்பு
    என்னைக் கத்தரிச்சு
    உணர்வு மொத்தமமும் உச்சிக்கு போச்சு!!!

    நா எரிஞ்சே தான் போனாலும் -ஒன்
    கண்ணு மையா உன்னோட கரைஞ்சே தான் போகணுமே
    நா கரைஞ்சே தான் போனாலும் -ஒன்
    உதிரத்தில் பனியா தான் ஓரஞ்சே போகணுமே!!

    நொடிஎல்லாம் உன்னோடு கொடியா சுத்தி-ஒன்
    நெஞ்சுக்குள்ள படர்ந்திடுமே இந்த பட்டாம் பூச்சு
    மனசெல்லாம் மனசெல்லாம் உன்னை அள்ள
    இந்த பாழும் மனசுக்கு இந்த கொள்ளை ஆசை

    ஆதியும் அந்தமும் எனக்கு நீதானே
    அடிக்கரும்பு நுனிஅரும்பு நீ தானே
    என் செம்பவழ சித்திரமே என் சந்தம் நீ தானே
    ஒன் மேல என் உசிர நான் வச்சேனே!!!!

    ஒண்ணா இருப்போமே ஒறவா இருப்போமே
    உசிரா நாம இருந்து ஒலகத்த ருசிப்போமே!!!!

    அம்சவேணி :)
    யம்மாடி :spin
    ரொம்ப நாளைக்கு அப்புறம் நாட்டுப் பாடல்.
    சும்மா ராட்டினம் கட்டி சுத்துது.
    ஜோர்.ஜோர்.ஜோர்.
     
    Last edited: Dec 30, 2010
  3. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Unga chinna chinna aasaigal azhagu varigal.
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    நாட்டுப்புர கவிதை நல்லா இருக்கு வேணி
     
  5. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இந்த மாதிரி மச்சான் மாமா கவிதை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    சூப்பர் காதல்
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உனது ஆசை மச்சானுக்காய் நீ ஆசை ஆசையாய் கூறிய அனைத்து வரிகளும்
    நன்று. நல்ல கவிதை வேணி அக்கா.:)
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Veni,machan mela ivvalavu aasaya...solli theethuteenga....

    romba nalla varigal...
     
  8. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    என் ஆசை மச்சான்
    என்னை உருக வைச்சான்
    அவனுள் என்னை கரைய வைச்சான்
    வேணியை அழகா கவிதை எழுத வைச்சான் !:clap:clap
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அவரு தெக்க நீங்க போட்டுட்டீங்க நல்லா கவிதையில் எம்ப்ராய்டரி வேணி.

    ஆச மச்சான், உனக்கு போட்டுத் தரேன் தோச மச்சான்,
    என் பேச்ச கேக்கலேன்னா பூச மச்சான், கூடவே இரு பேச மச்சான்னு,
    சொல்லி அவர வேலைக்கு போக விடாம பண்ணிடாதீங்க...
     

Share This Page