1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் அன்னைக்கு....

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 13, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அன்பிற்கு அகரமாய்
    அன்பிலே சிகரமாய்
    அன்பாய் அரவணைத்து
    இன்னல்கள் களைந்து
    ஈரைந்து மாதங்கள்
    உயிருக்குள் சுமந்து
    ஊர் மெச்ச வளர்த்து
    ஊனுருக என் உயிர்
    வளர்த்த அன்னைக்கு....
    உதிரத்தின் ஒவ்வொரு
    துளியிலும் உன் அன்பு
    ஊற்றாய் பெருகுகிறது
    தாயே.... உன்னை
    கவனமாய் காலமெல்லாம்
    காத்திடும், கண் குளிரக்
    கண்டிடும் வாய்ப்பு
    இல்லாமல் போனமைக்கு
    இழந்த நொடி முதல்
    இன்றும் என் விழியில் நீர்
    இனி வரமுடியமா
    என் வழியில் நீர்....
     
    Loading...

  2. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Sanmithran,

    Arumaiyaana kavithai... "Amma" enbadhey oru mandira soll dhan...

    "Mudhiyor Illathil" than thaaikku idam thedum "mirugangal" idhai unaruvadhillai... Thaaiyai pottrum silaruku avargaludan nedungaalam vazhum praaptham kidaippadillai...

    Hope u r not fall on both of the above...

    Amma endra solle amudhan, avargalai suttum endha vaarthaiyume azhagu dhan.. ungal vaarthaigal sogam porthiyadhaaga irundhalum azhagiya kavithai...

    Expecting the next poem with more happiness...:)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அம்மா........
    சொல்லும் போதே உயிருக்குள் உதிரம் ஊற்றெடுக்கிறது.அன்பு ஆறாய் பெருக்கெடுக்கிறது .இல்லாமல் போனாலும் அள்ள அள்ள குறையாத அவள் அன்பு உங்களோடு என்றென்றும் ....உங்களுக்குள் விட்டுச் சென்ற அவளது சுவடுகள் உங்கள் பிள்ளைக்கு உங்கள் மூலமாய்.....இன்னொரு அன்னை .....
    மூன்று நாட்களாய் .......மூன்று முத்தான வைர வரிகள் ..மூவரிடம் இருந்து
    வேணி,மிதிலா அம்மா ..மித்திரன் .......என் விழிகளில் நீர்.....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அரவணைத்த அன்னையை ,
    வளர்ந்த பின் உடன் வைத்து அணைக்க சந்தர்பங்கள்,
    அமையாவிட்டாலும், என்ன காரணங்கள் சொல்லி சமாதானம் சொன்னாலும்,
    குற்ற உணர்ச்சி தண்டித்து கொண்டே இருக்கும், மனசாட்சி உள்ளவர்களை, உள்ளவரை.

    இதுவும் இழப்பு தானே?
     
    Last edited: Jun 13, 2010
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அன்னை என்ற வார்த்தையை கேட்டாலே.......நம் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் எழுவது இயற்க்கை...

    அந்த அன்னையின் மனதில் ஓடும் எண்ணத்தினை உடனே படித்து அவளுக்கு விரும்பியதை அருகில் இருந்து செய்திட..ஆசை தான்...என்ன செய்ய...பெண்ணென பிறந்ததில் அந்த பாக்கியம் அற்று தவிக்கிறோம் ....

    அழகான வரிகள் மித்திரன்...அன்னையை பற்றி பேசும் எந்த ஒரு வரியும் அழகுதான் ..அர்த்தமுள்ளதுதான்..
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அருமையான கவிதை தோழியே!
    உன் ஒவ்வரு வரியும் மனதை நிரப்புகிறது.
    இருக்கும் பொது ஒரு பொருளின் அருமை தெரியாது,
    நிழலின் அருமை வெயிலில் என்பது போல்.
    அருமையான அம்மா என்ற உயிரை இழந்த பின் அதன் வலிமை ஆணித்தனமாக உணரப்படுகிறது.
    நானும் ஓர் ,அன்னையை தொலைத்த அன்னைதான் .
    உமது கவிதை மனதை கணக்கசெய்கிறது .
    இது போல் நிறைய கவிதை தர வாழ்த்துக்கள் !
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சன்மித்திரன்,

    அன்னைக்கு உங்கள் கவிதை அதி அற்புதம். அன்புக்கு உரியவர்களின் இழப்பு என்று வேதனை தான். வேதனை உங்கள் கவிதையில் இழையோடினாலும், உங்கள் கவி வரிகள் படிக்க அழகாய், அருமையாய் உள்ளது தோழி. மேலும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்....
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Very beautifully written, felt every emotional after reading your lines....
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Anbana annaikku aaththamarththamana ungal kavidhai padiththu kangal kalangiyadhu!

    Arumai sanmithran:thumbsup
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    பாரதி,

    மாயங்கள் பல செய்யும் இந்த அன்னை எனும் மந்திரச் சொல். வலி தீர்க்கும் மருந்து, வற்றாத அன்பின் ஊற்று... என சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய அன்னையின் அன்பிலே நீண்ட நாள் வாழும் ப்ராப்தம் எனக்கு இல்லை.

    காணக் கிடைக்காத ரத்தினமாய் என் அன்னை, பற்றிய கவிதை படித்து உங்கள் கருத்தை பரிமாறிய உங்கள் நட்புக்கு நன்றி
     

Share This Page