1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னுயிர் சேர்ந்த தமிழ் !!

Discussion in 'Regional Poetry' started by pgraman, Nov 9, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நாவது மேலே நறுந்தமிழ் கற்றிட
    போவது கீழே பிறமொழி, இவ்விடம்
    வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
    தாழ்விதை யென்றுமண் டா

    சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
    நோவது நின்னுயிர் நிந்தித்து போக
    விடுவது உந்தன் உயிரொன்றே யன்றி
    உடும்பென பைந்தமிழ்பற் றிடு


    அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
    வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
    எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
    சித்திரமாய் நிற்குந் தமிழ்

    அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
    என்போல் பலரதை ஏத்திடு மொன்றது
    வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
    என்னுயிர் சேர்ந்த தமிழ்
     
    1 person likes this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தலைமுறைத் தாண்டிய மொழியை அழிக்க முடியாது என்பது உண்மை தான் ராம்!
    தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றைப் போல தமிழும் நிலைத்து நிற்கட்டும் என்றும்! :thumbsup
     
    1 person likes this.
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தமிழால் தமிழுக்கே பெருமை சேர்த்த நின் கவிகள் வாழட்டும் பல்லாண்டுகள்
    மனதை ஆட்கொள்ளும் வரிகள்!
     
    1 person likes this.
  4. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    ராம் ,
    உன் தமிழ் பற்று கவிதையும் அதற்கான கோனார் விளக்க உரையும் [ தனி விடுகையில் ]
    மிக்க நன்று. குறிப்பாக 2 வது கண்ணியில் உடும்பென தமிழ் பற்று என்பது.
    வாழ்க தமிழ் ! வளர்க நற் தமிழர்!
     
    1 person likes this.
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Raam.. .superbpa.. ungalukku tamizh mela irukkara prtu.. idha naan englishla type panradhu thappu thaan... but its okie..padichadum reply kodukka thoniththu.. thamizhla yezhudhanumna transliterala type panni varanum.. intha arumayaana varigala padichcha thum avalo poruma yenakku illa... thamizh thaai namma amma thana onnum thappa yeduthukka maattaa...
     
    2 people like this.
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Raman, Romba arumaiya irukku..meendum vandhu suvaiththu,ezhudhuven pinnoottam.:)

    sriniketan
     
    1 person likes this.
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ram sir,

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.....
    தமிழ் தனை போற்றிட்ட தங்கள் கவி வாழ்க....
    வாழ்க தமிழ்! வளர்க தங்கள் கவி பணி!
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக்க நன்றி ப்ரியா.........:thumbsup:-)
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    மிக்க நன்றிகள் யாம்ஸ்..........:thumbsup:-)
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக்க நன்றிகள் அக்கா........:thumbsup:-)
     

Share This Page