1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எனக்கு இதுதான் வேண்டும்

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Dec 24, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வேணியின்
    என்னதான் வேண்டும் உனக்கு????
    கவிதையையும் அதற்கு நண்பர் நட்சின் பதிலும் படித்து
    நான் கொஞ்சம் மயங்கி,தயங்கி , பின் தெளிந்து பதில் எழுத
    அதைப் படித்த என் சரி பாதி கண் கலங்கி
    "கொஞ்சம் நான் முன்னே சொன்னது போல்,
    கொஞ்சம் நான் இப்போது சொல்வது போல்,
    கொஞ்சம் நான் இனிமேல் சொன்னால் தேவலை போல் இருக்கிறது.
    என்னை நானே படிப்பது போல் இருக்கிறது".....
    இந்தா பிடி என் சபாஷை எனச் சொல்ல...
    அந்த களிப்போடு உங்கள் முன் பதிவிடுகிறேன் இந்த நீண்ட என் பதிவை!
    ***********************************************************
    ***********************************************************
    ***********************************************************

    எனக்கு இதுதான் வேண்டும்


    என்ன கேட்பேன் நான் உன்னையே எனக்கு தந்த பின்.
    என்னைத் தந்தாலும் உன் அன்பிற்குப் பின்தானே நான்
    என்னை முன் தாங்கிய உன் அன்பு தசமத்தில்
    பின்தங்கிய பூஜ்யம் தானே நான்,ராஜ்யத்தின் ராஜாவாய் இருந்தாலும்.

    உன்னதமாய் என் உள்ளத்திலே உன் அன்பு -அதிலே
    உன்மத்தம் கொண்ட உன் பக்தன் உன் பித்தன் நான்
    உன் நிமித்தம் உருமாறி ஊண்-உறக்கம் திசை மாறி
    ஊனமுற்று
    உன் முற்றம் வந்து நிற்கின்றேன் உதைத்திட்ட பந்து போலே.
    உந்தித் தள்ளாமல் உன் இருகை ஏந்தினாய் என் உயிரானவளே
    இருக்கை கொடுத்தும் உன்னை இருட்டிலே விட்டேனே இந்த குடியானவனே????

    உன்னைப் பார்த்து உணர்ந்தேன் :உள்ளிருந்து உயிர் உலாவினேன்.
    உணர்ந்தும் ஊமையாய் ...உலாவியும் உணர்வற்ற உறுத்தலாய்
    உன்னைப் பார்த்து உலர்ந்தேன் :உனதுயிராய் உன்னுள்ளே உறைந்தேன்
    உலர்ந்தும் ஈரமாய்...... உறைந்தும் உதிரியாய்
    உன்னைப் பார்த்து உதிரம் உட்புகுந்தேன்:உடலெழுத்து வாசகம் உச்சரித்தேன்
    உட்புகுந்தும் உயிரற்ற உமியாய்...உச்சரித்தும் உயிர் இல்லா மெய்யாய்
    உதாசீனப் படுத்தினேன் உன்னை உன் அன்பை
    எப்படி நீ பொறுத்துக் கொண்டாய் என்னை என் அன்பே ????


    அனுசரணையாய் என் அணுவின் சாரமாய் உனது அணைப்பு
    அனுசரணமாய் என் அண்ட சராசரமாய் உனது அருகாமை
    அனுசரியாய் என் அன்பின் சாரியையாய் உனது அகச்சுனை
    அனுக்கிரகம் அனைத்தும் அனுதினமும் தந்தாய் .....
    எந்தாய் நீ என் தாய்!!!!
    அனைத்தும் எனதாக்க வாதிட்டு நின்றாய் அன்பே நீ எனக்காக
    என்ன தான் செய்திட்டேன் நான் உனக்காக????


    இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டு
    இன்னும் என்ன தான் வேண்டும் என கேட்கிறது என்னை வார்த்த கிள்ளை
    இருந்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு இன்னது தான் வேண்டுமெனச்
    சொல்லத் தெரியாமல் தவிக்கிறது இந்த வளர்ந்த பிள்ளை.


    இத்தனையும் தந்தாய்.இல்லாதவையும் தந்திட்டாய்
    இருந்ததெல்லாம் இழந்திட்டாய் எல்லாவற்றையும் இழந்திட்டாய்
    இலகுவாய் உன் சுயம் இழந்து என்னுள் சுயம்புவாய் எழுந்திட்டாய்
    இரவலாய் உன் இன்பம் கலைத்து பரவலாய் என்னுள் பரவிட்டாய்
    இலவசமாய் உன் துன்பம் தொலைத்து
    இலக்கினமாய் என்னுள் இருந்துவிட்டாய்

    இவ்வளவு நீ தந்தும், இருந்தும் நான் இரும்பாய்,
    இருதலையாய், தறுதலையாய், தவறுதலாய்,தவறி விட்டேன்
    கண்கள் பனிக்க
    நீ தந்திட்ட அன்பை கணிக்க.

    கவனித்து விட்டேன், கனிந்து விட்டேன்
    கங்கு இல்லா உன் அன்பின் மறைவை
    கசங்காது என்னைக் கசக்காது கவர்ந்திட்ட உன் நிதானித்த உறவை.

    உன்னை நான் அறிய நீ வளர்த்த கேள்வித் தீயில்
    முதல் முறையாய்
    என்னையே நான் தெரிந்தேன்/தெளிந்தேன்
    இப்போது இருப்பது என்னவென்று
    எனக்குள் நான் அறிந்தேன்/அரிந்தேன்
    அப்போது இழந்தவை எவையென்று
    என்னையே எனக்கு இலக்கம் காட்டினாய்
    இல்லாமல் போன எனைவென்று
    எனக்குள் நின்று எனை நிறைத்தாய்
    எப்போதுமே நீயே என்துணை என்று

    தீட்சதை பெற்றேன் உன் தீங்கனி அன்பாலே
    தாட்சண்யம் பெற்றேன் உன் தீஞ்சுவை அன்பாலே
    .....
     
    Last edited: Dec 24, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன்னை விட்டு தூரம் இருந்தேன்
    உனக்குள்ளே பாரம் ஆனேன்
    தூரமும் பாரமும் சோரம் ஆனது இப்போது
    உன்னாலே உன் அன்பாலே.

    இதுவரையிலும் இருந்திட்டேன் சருகாய் இனிமேலும் இருப்பேனோ செருக்காய்.
    இத்தனை நாள் இருந்து விட்டேன் அசட்டையாய் இனிமேலும் இருப்பேனோ சிரட்டையாய்.


    பருந்தாய் நானும் விழைகிறேன் அன்பே உன் ரணம் பட்ட மனதிற்கு மருந்தென்றே.
    விருந்தாய் என்னையே தந்திட்டேன் பழுதில்லா விருதாய் விழுதாய் உனக்கென்றே.
    வீழ்ந்தாலும் உன்னோடு வாழ்ந்திருப்பேன் நீ வீழாமல் என் உயிர் கொண்டு பார்த்திருப்பேன்.
    தளர்ந்தாலும் உன் தோளோடு சாய்ந்திருப்பேன் நீ தாளாமல் உன் வேராய் தாங்கி நிற்பேன்.
    தூங்கினாலும் உன் கண்மணியோடு கலந்திருப்பேன் நீ துவளாமல் உன் தூணாய் ஓங்கி நிற்பேன்.

    செழிப்பாய் நீ ...நான் பொறுப்பாய் களம் காட்டிடும் காலம் கடந்த அன்பினாலே
    மன்னிப்பாய் இந்த மனம் திரும்பிய/திருந்திய மடவனை
    மறுப்பாய் ஏதும் சொல்லாய், மனை ஏற்பாய் உன் மணாளனை
    மறுத்தாலும் காத்திருப்பேன்.... மறு பிறப்பொன்று நான் எடுப்பேன்
    நான் உனக்கு
    மறுத்திட்ட என் மன(ண)வறையின் வைகறை காட்ட.


    உன் திண்டாட தினங்களை நான் களைந்து உன்னை
    நான் கொண்டாட வேண்டும்
    இழந்தவைகளுக்கு இழப்பீடு :கடந்தவைகளுக்கு காப்பீடு:நகர்ந்தவைகளுக்கு நஷ்டஈடு
    நான் தந்தாக வேண்டும்.
    உன்னுள்ளே நான் இருந்தது போல்
    என்னுள்ளே நீ இருந்தாக வேண்டும்
    இதுதான் எனக்கு வேண்டும்


    அறிந்திட்டேன் அன்பே என்னில் ஒரு வேள்வி
    அழைக்கின்றேன் அன்பே உன்னில் நான் கொழுவி
    அறிந்திடுவோம் அன்பை அன்பே நம்மில் நாம் தழுவி
    அமைத்திடுவோம் அன்பே அன்பின் யாகசாலை ...ஒரு பாடசாலை!!!!!

    அவசரமாய் கேட்கின்றேன் என் அன்பே
    அவசியமா? அட்சரமாய் இனியும் உன்னில் ஒரு கேள்வி????

    இப்படிக்கு
    உன் மனம் கவர்ந்த நல்ல கண(கள்)வன்.
     
    Last edited: Dec 24, 2010
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உதாசீனப் படுத்தினேன் உன்னை உன் அன்பை
    எப்படி நீ பொறுத்துக் கொண்டாய் என்னை என் அன்பே ????


    என்னுள்ளே வேர் விட்டவன், நீ, என் உணர்வுக்குள் வேர்த்திட்டவன் நீ, உன் அன்பிலே எனை கோர்திட்டவன் நீ, என் இருப்பு நீ, என் உறுப்பு நீ, இதில் உன்னை எங்கே நான் பொறுக்க / வெறுக்க...

    அனைத்தும் எனதாக்க வாதிட்டு நின்றாய் அன்பே நீ எனக்காக
    என்ன தான் செய்திட்டேன் நான் உனக்காக????


    என்னிலே எனை உயிர்வித்து, உணர்வுகள் தனை உயிர்பித்தவன் நீ, உன் மீது பித்தானவள் நான், வேறு எதுவும் செய்யவும் வேண்டுமா நீ ???

    இருந்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு இன்னது தான் வேண்டுமெனச்
    சொல்லத் தெரியாமல் தவிக்கிறது இந்த வளர்ந்த பிள்ளை.


    பிள்ளையாய் உன்னை நினைத்திட்ட கிள்ளை, என் வரி கண்டால், உன் விழி கலங்கும் எனத் தெரிந்தும், வரி போட்ட என்னை நானே நொந்து போகிறேன். என் உணர்வுக்குள் நானே வெந்து போகிறேன்... மன்னிப்பாயா???

    கண்கள் பனிக்க நீ தந்திட்ட அன்பை கணிக்க.
    கவனித்து விட்டேன், கனிந்து விட்டேன்
    கங்கு இல்லா உன் அன்பின் மறைவை
    கசங்காது என்னைக் கசக்காது கவர்ந்திட்ட உன் நிதானித்த உறவை.


    எனை நீ அறிவாய், உன்னை நான் அறிவேன், உள்ளூறும் என்பது, உன் அன்பென்பதை நீ அறிவாய்... என் அன்பே...

    உன்னை நான் அறிய நீ வளர்த்த கேள்வித் தீயில்
    முதல் முறையாய்
    எனக்குள் நின்று எனை நிறைத்தாய்
    எப்போதுமே நீயே என்துணை என்று


    என் கேள்வி எனும் வேள்வியில் உன்னை நான் எரிக்க, அதில் எரிந்தது நானே தானே... ஆதங்கம் கொண்டு நான் கேட்ட கேள்வியின் வேள்வியில் வெளி வந்ததே.. என் தங்கம்....

    உன்னை விட்டு தூரம் இருந்தேன், உனக்குள்ளே பாரம் ஆனேன், தூரமும் பாரமும் சோரம் ஆனது இப்போது உன்னாலே உன் அன்பாலே.

    உன்னாலே உன்னாலே... என் உயிர் இருப்பதும் உன்னாலே, நீதானே நீதானே என் உயிராய் இருப்பவன் நீதானே.... பாரமும், தூரமும் போகட்டும் தூரம். இனி நமக்கிடையே என்ன பாரம்...

    தூங்கினாலும் உன் கண்மணியோடு கலந்திருப்பேன் நீ துவளாமல் உன் தூணாய் ஓங்கி நிற்பேன்.

    என் அனைத்துமாய் நீ இருக்க, நான் உன் உயிரில் இருக்க, வேறான இரு உயிர் இன்று ஒரு உயிராய்... வேரானது.

    மறு பிறப்பொன்று நான் எடுப்பேன்
    நான் உனக்கு
    மறுத்திட்ட என் மன(ண)வறையின் வைகறை காட்ட.


    வைகறையில் வந்த என் மன வானின் மதியே, என் அன்பின் நிறைமதியே... உன்னுள்ளே உறையும் இந்த மதியே...


    உன்னுள்ளே நான் இருந்தது போல்
    என்னுள்ளே நீ இருந்தாக வேண்டும்
    இதுதான் எனக்கு வேண்டும்


    வேண்டும் வேண்டும் உந்தன் உறவு... இரவே இல்லாத இந்த உறவு... நான் இருக்கும் வரை... நான் இறக்கும் வரை... நான் இறந்தாலும் இறக்காத பந்தமாய், என் சொந்தமாய்.... என் சொர்க்கமாய்....


    நான் கேட்கிறேன் ஓர் வரம்...
    அதை நீ தருவாய் இக்கணம்
    என் உயிர் பிரியும் நிலையில்
    உன் திருமுகம், இருக்க வேண்டும்
    என்னருகே... நான் கடைசி வரை
    கண்டதும் நீயாக வேண்டும்....
    நான் கடைசியாய் கண்டதும்
    நீயாக வேண்டும்....


    இந்த வரம் தருவாயா??? வரம் தர நீ வருவாயா???? என் உயிரே....
     
    Last edited: Dec 25, 2010
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சரோஜ் உங்கள் கவிதைக்கு ஒரு வரியில் என் பாராட்டு.
    இப்படி குணம் கொண்ட கணவரை அடைந்தவர்கள் அனைவரும் புண்ணியவதிகள் தான்
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சரோஜ்...நான் கூட தெரியாம நீங்க கவிதை பக்கத்துக்கு வந்து கதை எழுதிட்டீங்களோ ன்னு நினைச்சுட்டேன்...:spin ஒரு பதிவோட நீளத்தை தாண்டி நான் படிச்சு தெளியுரதுக்கே, ஒரு மணி நேரம் ஆகும்... இதுல ரெண்டு பதிவு... ம்கும்...
    கொழுவி ன்னா என்ன?:hide:

    உங்கள் கவிதையை இருமுறை படித்தேன்...முதல் முறை அதில் விரவி தெரிந்த தமிழை ரசித்தேன்...மறுமுறை நீங்கள் சொல்ல வந்த கருத்தை ஏற்றேன்.உன், உன்னை,உனது, உன்னில், உன்னுடைய, உனக்குள், உனக்காக என்பதை ஒட்டியே இப்படி சிறப்பாய் எழுத முடியும் என்பது எனக்கு இன்று வரை தெரியாது.
    உன் திண்டாட தினங்களை நான் களைந்து உன்னை
    நான் கொண்டாட வேண்டும்
    இழந்தவைகளுக்கு இழப்பீடு :கடந்தவைகளுக்கு காப்பீடு:நகர்ந்தவைகளுக்கு நஷ்டஈடு
    நான் தந்தாக வேண்டும்.
    உன்னுள்ளே நான் இருந்தது போல்
    என்னுள்ளே நீ இருந்தாக வேண்டும்
    இதுதான் எனக்கு வேண்டும்
    ஒவ்வொரு வரியும் நான் வியந்து படித்தவை தான்...ஆனால் இந்த பத்தி என்னை மிகவும் கவர்ந்தது.
     
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Saroj,enna ipdilam ezhudhi thallitteenga...romba arumayana varigal....nachchunu irundhahdu...
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ் - என்னத்தை ஒரு கணவனின் என்னத்தை,
    மிக அழகாக எடுத்துரைத்து விட்டீர்கள்.

    எண்ணம் அழகா? கவி அழகா? தமிழ் அழகா?

    இம்மூன்றில் எது அழகு?

    மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ்,
    இவை மூன்றையும் - எண்ணம், கவி, தமிழ் அழகிற்கு,
    ஒருசேர வென்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    நீங்கள் பதிவு என்று சொன்னாலே போதாதா?
    நாங்கள் தான் புரிந்து கொள்வோமே - அது நீண்டு தான் இருக்குமென்று.... :)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அட கடவுளே...இன்னுமா நீங்க வரல?:rotfl
     
    Last edited: Dec 25, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பயபுள்ள.... நானே அவ வரதுகுள்ளே... இங்கே போட்டுடலாம்-ன்னு வந்தேன்... அதுக்கு முன்னே நீ வந்துட்டியா போட்டுக் குடுக்க.... ராஸ்கல் :rant:rant:rant

    மிச்சம் எதை நீ சரியா செய்றியோ இல்லையே... இதை கரெக்டா செய்யறே... :bonk

    மகராசி... நல்லா இரு.... :)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ...அப்படினா சரோஜ் எதையும் நீட்டி முழக்கித்தான் சொல்லுவாங்கன்னு சொல்ல வரீங்களா? :hide: இல்லை அவங்களுக்கு சின்னதா எழுத தெரியவே தெரியாதுன்னு சொல்றீங்களா?:spin
    ஏன் எப்பவும் பாவம் ஒரு வம்பு தும்புக்கும் போகாத சரோஜையே கிண்டல் பண்றீங்க நட்ஸ்?:idea கேக்குறதுக்கு ஆளு இல்லன்னு நெனச்சீங்களா? :rantவேணி அருவாள தூக்கிட்டு வருவாங்க...பி கேர்ஃபுள்.. :)
     

Share This Page