1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உள்ளே, வெளியே!!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Oct 25, 2013.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female


    எண் சாண் உடலுக்குச் சிரசே பிரதானம்!
    உண்மைதான் நம் மூளையைக் காப்பதால்!

    சிரசைக் காக்கக் கவசம் தேவையாயினும்,
    சிரசினுள் உள்ளதால் யோசித்தலும் நலம்!

    வேகமாகச் செல்லும் பேருந்து ஒன்று; அதி
    வேகமாக அதைக் கடக்க முயலும் ஒருவன்!

    அவன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது
    அவன் கடக்க நினைத்த பேருந்து மோதிவிட,

    வாகனம் பறக்க, அவன் வீதியிலே வீழ்ந்திட,
    வேகமாய்ப் பேருந்து அவன் மீது ஏறிவிட,

    ஒரு நொடியைச் சேமிக்க நினைத்த அவன்,
    மறு நொடியில் இரண்டு துண்டாக வீதியில்!

    தலை மட்டும் சேதமின்றிக் கிடக்க, அந்தத்
    தலையால் யாருக்கும் பயன் இல்லையே!

    இன்னுயிர் காக்கக் கவசம் மட்டுமேயன்றி,
    முன் யோசனை மிகவும் தேவை அல்லவா?

    ideasmiley
     
    Loading...

Share This Page