1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணர்வாயா அன்பே -29!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Feb 13, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சொன்னது போலவே அவந்தி அவள் கணவனுடன் வந்து விருந்துக்கு அழைத்தாள்.

    "அண்ணா...அருவியை நீங்கள் மணப்பது குறித்து முடிவெடுத்தது முதலில் எங்கள் வீட்டில் தான்.அதனால் முதல் விருந்து எங்களுடையது.சரியா?"

    "ஹா..ஹா...சரி மா... எனக்கும் உறவென்று சொல்லிக்கொள்ள செழியனும் நீயும் தானே இருக்கிறீர்கள்? அதனால் கண்டிப்பாக வருகிறேன்."

    ஞாயிறு காலையில் இருந்தே அருவிக்கு படபடப்பாய் இருந்தது.நிரஞ்சன் கூட கேட்டுவிட்டான்..."என்ன அருவி, செழியனும் அவந்தியும் நமக்கு நெருங்கியவர்கள்.அவர்கள் வீட்டுக்கு போவதற்கா உனக்கு இவ்வளவு படபடப்பு?"

    "இல்லை..அது வந்து...என்னவோ தெரியவில்லை.காலையில் இருந்தே அப்படித்தான்."

    ஆனால் அவளின் பயத்தை அவன் வேறு விதமாக எடுத்துக்கொண்டான்.'என்ன தான் இப்போது நன்றாக பழகினாலும், ஒரு காலத்தில் செழியன் தன்னை பெண் கேட்டு வந்தவன் தானே என்று அவனோடு இயல்பாக பழக தயங்குகிறாளோ?'

    பதினோரு மணியளவில் விருந்துக்கு சென்றனர். அங்கே இன்ப அதிர்ச்சியாய் மதுராவும் திரையனும் வந்திருந்தனர். மதுவுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வருத்தம் தான், செழியனுக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று. ஆனால் அன்றைய விருந்தில், நிரஞ்சனின் கம்பீரமும் அருவியின் அமைதியும் தந்த பொருத்ததில் அவளுக்குமே பூர்ண திருப்தி ஏற்பட்டுவிட்டது.
    அதோடு மதுவைப் பொறுத்தவரை அருவி ஆண்பிள்ளையின் ரோஷம் கொண்டு பிறந்தவள்... திரையனைப் போல அவள் அமைதி கிடையாது...அவளின் ஆர்ப்பாட்டத்துக்கு செழியனை விட நிரஞ்சனே பொருத்தம் என்று தெரிந்துக்கொண்டாள்.

    "அருவி, உன் அண்ணியை விருந்துக்கு எத்தனை நாளாய் கூப்பிடுகிறேன் தெரியுமா? என் அத்தானை விட்டு நான் வரவே மாட்டேன்னு மூன்று மாதங்கள் கழித்து இன்றைக்கு தான் நேரம் கிடைத்திருக்கிறது அம்மணிக்கு... ஹ்ம்ம்.." பெரிதாய் இழுத்து மூச்சு விட்டாள் அவந்தி.

    "நீயே சொல்லு அருவி...விருந்து என்றால் கணவருடன் தானே வர முடியும்? ஏன் என்னை இத்தனை சொல்கிறாளே, இவள் மட்டும் எப்படியாம்? திருமணமான புதிதில் இவளை நாம் விருந்துக்கு அழைத்தோமே? அப்போது என்ன சொன்னாள்? அவருடன் அங்கு போக வேண்டும்....இங்கு போக வேண்டும்...இன்றைக்கு இந்த பிளான்... அந்த பிளான் இப்படியே சொல்லிவிட்டு கழண்டு கொள்ளவில்லை?" மதுவும் முறையிட்டாள்.

    திரையன் நக்கலாய் சொன்னான்...."விடு மது, திருமணத்துக்கு பின்பாவது நாக்குக்கு ருசியாய் சாப்பிடலாம் என்று நினைத்திருப்பாள்."

    இப்போது மது கணவனை முறைத்தாள்..."மது....நீ உன் கையால் செய்யும் கஞ்சியும் எனக்கு கற்கண்டு சுவையாய் இனிக்கிறது என்று நேற்று சொன்னது யாராம்?"

    நிரஞ்சன் அவளை மடக்கினான்..."அப்படி சொன்னால் தானே அந்த கஞ்சியாவது தினமும் கிடைக்கும் என்று தான்..."

    எல்லாரும் ஒன்று சேர்ந்து நகைக்கவும் மது பொய்யாய் கோபித்துக் கொண்டாள்...."நீங்களும் இவர்கள் கட்சியில் சேர்ந்து கொண்டீர்களா? எனக்காக பேச தான் யாரும் இல்லையா?"

    செழியன் சட்டையின் கையை முறுக்கிக் கொண்டு சொன்னான்..."என்னம்மா இப்படி சொல்கிறாய்? ஏன் இல்லை...நான் இருக்கிறேன்... என்ன இளன்...என் தங்கையின் சமையலை சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கொண்டே இங்கே வந்து கிண்டலடிக்கிறீர்களா?"

    அவந்தி அவனை அதட்டினாள்.."ஹலோ...என்ன சவுண்ட் எல்லாம் பலமா இருக்கு?"

    அவள் கண்ணை உருட்டியதில் இவன் பின் வாங்கினான்..."ஐயோ....அதெல்லாம் ஒண்ணுமில்லமா...நான் இனி உன் உத்தரவு இல்லாமல் வாயை திறக்கவே மாட்டேன்..."

    "ஆ...அது..." இல்லாத காலரைத் தூக்கிவிட்டு கொண்டாள் அவந்தி.

    இந்த பக்கம் மது கணவனின் மீது பாய்ந்தாள்..."பார்த்தீர்களா? ஊரில் எல்லாரும் அவரவர் மனைவிக்கு அடங்கி தான் இருக்கிறார்கள். என் தலையெழுத்து நீங்கள் மட்டும் இப்படி விதிவிலக்காய் இருக்கிறீர்கள்" சொல்லிவிட்டு வராத கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டாள்.

    உடனே தங்கமான கணவனாய் திரையனும் அவள் பக்கத்தில் அமர்ந்து தோளைத் தட்டி கொடுத்தான்...."ஹே செல்லம்...இனி பாரு ஐயாவை...உன் சமையலை சாப்பிட மட்டும் தான் வாயை இனி திறக்கவே போகிறேன்..." பெருமையாய் சொல்லிக்கொண்டான்.

    நிரஞ்சனும் அருவியும் இந்த கூத்தை வெகுவாக ரசித்து சிரித்தனர். இப்போது இரண்டு ஜோடியின் பார்வையும் அவர்களைக் குறி வைத்தது.

    "ஹலோ... என்ன சிரிப்பு? நாங்கள் திண்டாடுவது உங்கள் இருவருக்கும் கொண்டாட்டமாய் இருக்கிறதா?" செழியன் குதித்தான்.

    "அது தானே....என்ன அண்ணா அப்படி சிரிக்கிறீர்கள்? எங்களைப் பார்த்தால் கேலியாக இருக்கிறதா?" மதுவும் கூட சேர்ந்து கொண்டாள்.

    நிரஞ்சன் காதலாய் அருவியைப் பார்த்துக்கொண்டே சொன்னான்...."அதென்னம்மா அப்படி கேட்டுவிட்டாய்? என் மனைவி என்னை ஏற்கனவே மிரட்டி தான் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள்....அவள் சிரித்தாள், என்ன ஏதென்று ஆராயாமல் நானும் சிரிக்க வேண்டுமாம். மனைவி சொல்லே மந்திரம் இல்லையா? அது தான், அவள் வாயை திறக்கும் முன் நான் சிரித்தே விட்டேன்."

    அருவி சங்கடத்தில் நெளிந்தாள்....'அன்னியோனியமான தம்பதிகளாய் இருந்திருந்தால், அவந்தியைப் போல கணவனை முறைத்திருக்கலாம்...அல்லது மதுவைப் போல அழுதாவது இருக்கலாம்...இவள் என்ன செய்ய முடியும் நெளிவதைத் தவிர?'

    "அது சரி....உங்கள் மனைவி எப்படி சமையலில்? எங்கள் அளவுக்கு திறமையாக சமைப்பாளா?" அவந்தி சவாலாய் கேட்டாள்.

    "ஹ்ம்ம்.... அந்த விஷயத்தில் தான் நான் கொஞ்சம் கொடுத்து வைக்கவில்லை.." சோகமாய் சொன்னவனை ஆவலாய் நச்சரித்தனர்...."ஏன்...ஏன்....அவளுக்கு சமைக்க தெரியாதா?"

    அருவியே மனதுக்குள் பயந்துவிட்டாள்...'ஐயோ...இத்தனை நாள் குறை சொல்லாமல் சாப்பிட்டானே? நன்றாக இல்லை என்று சொல்ல சங்கடப்பட்டு சகித்து சாப்பிட்டானோ?'

    நிரஞ்சன் மறுபடியும் அருவியை ஒரு ஓர பார்வைப் பார்த்துவிட்டு சொன்னான்...."அவள் சமைத்து முடித்த வாசனையே ஆளைத் தூக்குதே...பிறகு ருசியை அறிவது எப்படி? அதில் மயங்கியவன் தான்....இன்னும் அந்த மயக்கம் தெளியவே இல்லை எனக்கு." அருவி ஒரு நிமிடம் கண் மலர்த்தி அவனை நோக்கினாள்.

    செழியன் திரையனின் தோளில் இடித்தான்...."இவனைப் பார்த்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் போல..."

    "அட நீங்க சும்மா இருங்க....நான் இனி என் மச்சானிடம் ஒரு மாதம் வகுப்புக்கு போக போகிறேன்..." என்றான் இளந்திரை.

    "எதற்கு? மயங்குவது எப்படின்னு தெரிந்துக் கொள்ளவா?"

    "இல்லை..... மனைவியை மயக்குவது எப்படி ன்னு தெரிந்துக்கொள்ள..."

    அன்று முழுவதும் பேச்சும் சிரிப்புமாய் அடுத்தவரின் காலை வாரிவிட்டுக்கொண்டு, அவ்வபோது மனைவிக்கும் ஜால்ரா அடித்துக்கொண்டு.....பொழுது மகிழ்ச்சியாய் பறந்தது.

    சாப்பிடும் போதும் இதே போல சிரிப்பு தான். எல்லாருக்கும் பரிமாறிக் கொண்டிருந்த அவந்தியை கைப்பிடித்து தன்னருகே அமர வைத்தான் செழியன். அவள் மறுத்தாள் ஆனால் அவன் விடவில்லை.

    "அது தான் எல்லாருக்கும் பரிமாறி விட்டாயே..பிறகென்ன? நீயும் எங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடு."

    "ஐயோ...தினமும் அப்படி தானே சாப்பிடுகிறேன்.இன்று ஒரு நாள் தானே? உங்களுக்கெல்லாம் பரிமாறிவிட்டே சாப்பிடுகிறேன்..ப்ளீஸ்..." கெஞ்சலாய் கேட்டாள்.

    "சொன்னால் கேள் அவந்தி...தனியாக சாப்பிட்டால் நீ சரியாக சாப்பிட மாட்டாய். உன்னை பற்றி எனக்கு தெரியாதா? ஒழுங்காக எங்களுடன் சேர்ந்து உட்கார்...இல்லாவிட்டால் சொல்லு, நானும் எழுந்து விடுகிறேன். இருவரும் பிறகு சாப்பிடலாம்." அவன் எழ போக, அவள் சட்டென்று உட்கார்ந்துவிட்டாள்.

    நிரஞ்சன் அருவியைப் பார்த்தான்...அவள் இவர்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். 'இப்படி அவனுக்கு தான் பார்த்து பார்த்து பரிமாறினது இல்லையே?' அவனுக்கும் உறுத்தியது...'ஒருநாள் கூட அவளிடம் நான் சாப்பிட்டாயா என்று கேட்டதில்லையே?'

    எல்லாரும் அவரவருக்கு தேவையானதைப் போட்டுக்கொண்டு சாப்பிடுகையில், திரையன் தனியாக சிறிது உணவை ஒதுக்கி அதை மதுவின் இலையில் வைத்தான். மதுவும் அதை தான் முதலில், என்னவோ அமுதத்தை கொடுத்தது போல ருசித்து சாப்பிட்டாள்.

    அவந்தி ஏன் என்று கிண்டல் பார்வை பார்த்தாள்....மது சொன்னாள்...."அவர் எப்போதும் இப்படி தான். முன்பெல்லாம் அவர் மிச்சம் வைத்துவிட்டால் அதை நான் சாப்பிடுவேன். அதை பார்த்துவிட்டு, தன்னுடையதில் பாதியை எனக்கு கொடுத்து விடுவார். அவரும் மிச்சம் வைக்க வழியில்லை.அது என்ன...மனைவி மட்டும் கணவன் மிச்சம் வைத்த இலையில் தான் சாப்பிட வேண்டுமா..என்று இப்படி."

    அப்போது மதுவின் கண்ணில் தன் கணவனைக் குறித்த பெருமிதம் தெரிந்தது. அதை அருவியைப் போல நிரஞ்சனும் கவனித்தான்....'தன் மனைவி தன்னைக் குறித்து பெருமைப்படுமாறு நாம் என்ன செய்தோம்?'

    அருவி யோசித்தாள்....'கணவன் உணவை மிச்சம் வைக்க கூடாது என்பதில் கூட மனைவிக்கு அக்கறை இருக்க வேண்டுமோ? தனக்கு அது இருந்ததா?'

    அவர்கள் இருவரின் கண்ணிலும் தெரிந்த யோசனையைப் பார்த்து அவந்தி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.
    'சும்மா கிடைத்து விடுமா என்ன..காதல்??"

    "உன் உயிரில் நானும், என் உயிரில் நீயும்
    கலந்துவிட்டால் மட்டும் வந்துவிடுமா காதல்?
    உன் நினைவில் நானும், என் நினைவில் நீயும்
    இருந்துவிட்டால் மட்டும் வந்துவிடுமா காதல்?
    உனக்காக நான் எனக்காக நீ...
    இது மட்டுமா காதல்?
    உன்னிலும் எனைக் கண்டு, என்னிலும் உனைக் கொண்டு
    உனக்காக நான் யோசித்து, எனக்காகவும் நீ சிந்தித்து
    பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் அல்லவா காதல்?"
     
    Last edited: Feb 14, 2011
    3 people like this.
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    IE sothappiduchhcu....second time am typiing.....


    avanga sandhosham ennayum thoththikkichu....rendu perum puringukitta sari....iyalbana varigal arumai priya....
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    aekkam kalantha paarvaigal thaan athigama irukirathu varthaigalai vida iruvarukkum...
    nalla irunthathu da un kutti kavithaiyum...:)
     
  4. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    so, these people are playing cupids in their life..:thumbsupeppadiyO pullainga santhoshama honey moon pONa sari..:)
    Good episode dear..
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் தான் காதல் என்று காதலர்தின வாழ்த்துக்கள் சொல்லி இருக்கே.சூப்பர்ப்டா .இருபது உணர்ந்ததை பல அறுபதுகள் இன்னும் உணரவில்லை.
     
  6. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Azhagana kavithai Deva, Kalkkunga pa. Valentine day cardu super.:)
     
  7. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Nice episode dear :thumbsup
     
  8. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    காதலர் தினத்தில் காதல் பற்றிய உனது கவிதை வெகு அருமை..:thumbsup

    விரைவில் இருவர் மனதும் இணையட்டும். அருமையான பகுதி டா இன்னைக்கு :)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி பிரனா!:)
     

Share This Page