1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இ(ரு)தயம்-11:

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Apr 28, 2013.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Previous episodes

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/192513-1.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/192514-2.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/192591-3.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/192892-4.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/193245-5.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/193490-6.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/195269-7.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/196252-8.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/215911-9.html

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/215939-10.html


    Today episode



    அடுத்த நாள் காலையில் எழுந்ததில் இருந்து வேதா பேயாட்டம் ஆடி கொண்டிருந்தாள்.

    "என்ன வானதி இது? விடியகாலைல விஷ்வா கால் பண்ணியிருக்கான்..நீ அட்டெண்ட் பண்ணியிருக்க என்னை கொஞ்சம் எழுப்பி இருக்க கூடாதா?"

    "என்னது நான் எழுப்பலையா? சொன்னதுக்கு நீ தானே அப்பறம் பேசிக்கிறேன்னு சொன்ன?"

    "நான்...நான்..நான் ஏதோ தூக்க கலக்கத்துல சொல்லி இருப்பேன்...அதுக்கு அப்படியே விட்டுடறதா? என்ன அவசரமோ? என்னமோ?" என்று தலையை அவசர அவசரமாய் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கொண்டு ஓடிய தோழியை பார்க்க புன்னகை தான் எழும்பியது வானதிக்கு.

    கல்லூரி தொடங்கியதில் இருந்து அவள் சீக்கிரம் செல்வது இன்றாய் தான் இருக்கும். அதுவும் விஷ்வாக்காக...இதற்கு பெயர் வெறும் நட்பு தானா? என்ற ஐயம் எழுந்தாலும் வேதாவை பற்றி நன்கு அறிந்திருந்ததால் தவறாகவும் நினைக்க தோன்றவில்லை வானதிக்கு.

    காரணம் வெள்ளந்தியான அவளது மனமும், கலகலப்பான அவளது பேசும் உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியே வேறொன்று பேசும் ரகமாய் அவளை காட்டியதில்லை.
    எனவே அந்த யோசனையை அதோடு மறந்து தோழியை தொடர்ந்து அவளும் கல்லூரிக்கு அவசரமாய் கிளம்பினாள்.

    தேர்வுகள் வேறு நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் படிக்க புத்தங்கங்கள் தேவை பட்டது. அதற்கான பணம் வேண்டும் என்றால் வெற்றியிடம் பேசி தான் தீர வேண்டியதாய் இருக்கும்.
    இதோ இங்கே வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஓடி விட்டது.
    அவன் பேச முயற்சித்த போதெல்லாம் எப்படியோ தட்டி கழித்தாகி விட்டது. அவனும் ஏதோ வேலையாய் இருக்க போக இதனை பெரியதாய் எடுத்தது கொள்ளவில்லை. ஆனால் இந்த மாததிற்குள் அவளை பார்க்க வருவதாக செய்தி மட்டும் அவளை எட்டியது.இத்தனை மாதங்கள் கழித்து அவனை சந்திப்பது என்பது ஒரு பக்கம் சந்தோஷம் தான் என்றாலும் மற்றொரு பக்கம் ஏதோ அவன் அன்னியமாகி விட்டது போல ஒரு உணர்வு. அது எதனால் என்று எவ்வளவு யோசித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    அந்த யோசனைகள் எல்லாவற்றையும் தற்சமயம் ஒதிக்கி விட்டு படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணியவள் விரைந்து கல்லூரியின் லைப்ரரியை அடைந்தாள் .
    தோழி ஒருவளிடம் கார்ட்டை தனக்கு இந்த செமஸ்டர் மட்டும் கடன் தருமாறு கேட்டு இருந்தவள் அவளையும் தனக்கு புத்தகம் எடுத்து கொடுக்க லைப்ரரி வர சொல்லி இருக்கவே அதிக நேரம் காக்க வைக்காமல் சீக்கிரமே லைப்ரரியை அடைந்தாள் .
    சொன்னது போலவே தோழியும் அவளுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து தர
    நன்றியுரைத்து வெளிவந்தவளால் அத்தனை பெரிய புத்தங்களை கையில் சுமக்க முடியவில்லை. பெரிய புத்தங்கள் என்பதால் அவளது சின்ன பையினுள்ளும் அது உள்ளே செல்லாது எனவே வேறு வழி இன்றி அதனை கஷ்பட்டு சுமந்தபடி நடந்தாள் .

    இங்கே வேலையில் தன்னறையில் இருந்த வெற்றிக்கு வேலை சற்றும் ஓடவே இல்லை.
    இன்று என்ன நாள் என்று தெரிந்து தான் வானதி பேசாமல் இருக்கிறாளா? இல்லை உண்மையாகவே மறந்து விட்டளா? ஒவ்வொரு வருடமும் இந்த நாள் அவளை கைகளுக்குள்ளேயே தாங்கியபடி அமர்ந்திருப்பவனுக்கு இந்த வருடமும் இருப்பு கொள்ளவில்லை.
    அவள் என்ன நிலையில் இருக்கிறாள்? என்று மனம் முழுவதும் அவளையே சுற்றி வந்தது.

    இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று தொலைபேசியில் அவளது எண்களை அவன் சுழற்ற அடுத்த பக்கம் மணி அடித்தது.

    தாள முடியாத பாரத்தை சுமந்தபடி நடந்து கொண்டிருந்தவளுக்கு செல் பேசி வேறு அடிக்கவும் கடுப்பாய் போனது.

    யாராக இருக்கும்? என்று யோசித்தபடி புத்தகங்களை நெஞ்சோடு அனைத்து தன் பையில் இருந்த செல்பேசியை எடுத்ததும் திரையில் தெரிந்த வெற்றியின் பெயரை பார்த்து ஒரு நிமிடம் அவளது இதயம் நின்று துடித்தது.

    எதற்காக இவர் இப்போது அழைக்கிறார்? தான் படிக்க வேண்டும் காதல் அதற்கு ஓர் இடையூறாக இருக்க கூடாது எனவே மாதத்திற்கு ஒரு முறை தான் பேசி கொள்வது என்று இருவரும் முடிவெடுத்தது தான். இன்று எதற்கு திடீர் என்று அழைக்க வேண்டும் என்று யோசித்தபடி இருந்தவள் செல்பேசியின் திரையில் அப்போது தான் அன்றைய தேதியை கவனித்தாள்.

    அப்படியே அவளது முகம் நிறம் இழந்தது.
    கைகள் நடுங்கின!
    வியர்வை துளிகள் நெற்றியில் எட்டி பார்க்க ஆரம்பித்தது.
    அந்த நடுக்கத்தில் கையில் இருந்த புத்தங்கள் தவறி கீழே விழ தடுமாரியவளின் தோளை இரண்டு இரும்பு கரங்கள் தடுத்து நிறுத்தியது.

    "ஹலோ...மிஸ் வானதி...ஆர் யு அல்ரைட்?" என்றவனுக்கு அவள் நிலை சரி இல்லை என்று தெளிவாகவே தெரிந்தது.
    மழையில் நனைந்த கோழி குஞ்சை போல் நடுங்கி கொண்டிருந்தது அவளது தேகம்.
    அவள் கையில் இருந்த செல் பேசியின் திரையில் "வெற்றி....." என்ற எழுத்துக்கள் ஒளிர கண்டவன் அவளை உள்ளுக்கினான்.

    "வானதி..உங்களுக்கு போன் வருது...பேச முடியுமா?" என்றவனது முகத்தை பார்த்தாளே ஒழிய அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
    அதரங்கள் துடிக்க காற்றுக்காய் யாசித்தவளின் நிலையை உணர்ந்தவன் அதற்கு மேல் அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் ஒரு குழந்தை போல் சுமந்தபடி மருத்துவமனைக்கு விரைந்தான்.

    இங்கே பல முறை மணியடித்ததும் அவள் எடுக்கவில்லையே என்ற பரிதவிப்பில் இருந்த இன்னொரு இதயம் அதற்கு மேல் அந்த தவிப்பினை பொறுக்க முடியாமல் டெல்லிக்கு செல்லும் அடுத்த விமானத்திலேயே அவளை காண புறப்பட்டது.
     
    2 people like this.
  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi yams..
    nice update..

    enna naal inikku?
    vanathy ku nadukkam eh vandhruchu..
    vetriyum flight la kilambittan..
     
    1 person likes this.
  3. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi yamini.. welcome back!!!!!!!!!!!
    so good to read your stories again..

    vanathi ku yen ipdi nadungudhu?? enna special day adhu??
     
    1 person likes this.
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    you vl know in next update
    keep waiting...
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    suspence..

    padichu paaththaa ungalukke theriyum :p

    Happy to see u back as well.........keep reading sabari
     

Share This Page