1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிப்பு!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 1, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஒற்றைக் குழலின் நாதத்தில்
    சற்றைக்கெல்லாம் மனம் கரைய
    பற்றை விடுத்தார் பெறும் அமைதி
    அற்றைப்பொழுதில் துலங்கியதே!

    கற்றை வார்சடையாரவர் குறித்தே
    அற்றைநாள் சுந்தரர் பாடியதாம்
    ஒற்றைத் திருமுறை முழுதும் கேட்டே
    பற்றை அவர் தாளில் வைத்திடலாம்.

    காற்றாய் நமை வருடிச் செல்வதுவும்,
    நேற்றா என மருளச் செய்வதுவும்
    மாற்றாய் பிறிதொன்றும் அற்றதுவும்
    கீற்றணிந்தார் குறித்த அப்பாவாகும்.

    ஒன்றாய் உமை சேர்ந்தே நின்றாரை
    நன்றாய் சொன்ன இவ்வரி நாளும்
    சொன்னால், நினைந்தால் நம் வாணாளும்
    உவப்பாய், இனிப்பாகத் தானிருக்கும்!
     
    6 people like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    @rgs கவிதை வரிகள் அனைத்தும் இனிமை ஆக உள்ளன.
    கற்றைவார்சடை என்ற வரிகள் படிக்கும் பொழுது, சுந்தரரரின் ஆலம்தான் உகந்து அமுது செய்தானை என்ற பாடல் எனக்கு நினைவு க்கு வருகிறது . அந்த பாடலில் தான் கற்றைவார்சடை வரி கள் வரும். சுந்தரரை நினைவு படுத்தியதற்கு நன்றி
     
    2 people like this.
  3. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    nice one.
    Thanks,
    Vaidehi
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Vaidehi71, for your appreciation. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Uma1966, for your appreciation and a nice feedback. I mentioned Sundarar in line 6 of this post and indicated the 7th ThirumuRai which fully consists of poems from Sundarar. And with reference to "KaRRai vaar sadaiyaar", I can never forget this wonderful song from TiruviLaiyaadal puraaNam Tharumikku poRkizhi aLiththa padalam:
    கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே
    காட்டப்
    பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல்
    ஆகம்
    முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
    குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்.
     
    3 people like this.
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஆலந்தான் உகந்து என்ற பாடல் கண் பார்வை தெரிவதற்காக சுந்தரர் எழுதிய அற்புதமான பாடல் சார் , நன்றி
     
    2 people like this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் மற்றுமொரு பின்னூட்டத்துக்கு நன்றி Uma1966.
    நீங்கள் என்னை அல்லது ஸ்ரீ என்றே அழைக்கலாம்.
    கற்றை வார்சடையும் அண்ணல்" எனும் வரி வந்த மற்றொரு பாட்டு நினைவில் வருகிறது இப்போது:
    "புற்றில் வாழரவும் அஞ்சேன்" பாடலின் மூன்றாம் வரி அது - மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல் ஒன்று [இளையராஜாவின் திருவாசகத்திலும் வருகிறது].
     
    1 person likes this.
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    @rgsrnivasan,
    நீங்கள் குறிப்பிடும் பாடல் தில்லையில் அருளியது 35 வது பாடலான அச்சப் பத்து என்ற தலைப்பில் வருகிறது. என் கையில் எப்பொழுதும் திருவாசகம் புக் வைத்து இருப்பேன். .. மிக்க நன்றி தங்கள் பின்னூடத்திற்கு, நீங்கள் பின்னோட்டம் இட்டால் @uma1966 என்று போடுங்கள். அப்பொழுது தான் notification எனக்கு வரும்
     
    1 person likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Will do that @uma1966. Thanks for sharing more details about this lovely verse. -rgs
     
    1 person likes this.
  10. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    welcome ...........:welcome
     

Share This Page