1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆடி பெருக்கு - அன்னையின் சிறப்பு

Discussion in 'Regional Poetry' started by sowmyasri0209, Aug 3, 2011.

  1. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    தலைகாவிரியில் தவழ்ந்து
    குடகு தன்னில் குமரியென வளர்ந்து
    கன்னடத்தை விட்டு கன்னியாய் வந்து
    தமிழ்நாடு தன்னை தழுவி நிற்பவளே

    ஹேமாவதியை ஏற்றணைத்து
    அர்கவடி தன்னை ஆரத்தழுவி
    ஹோண்னுஹோலேவை உன்னுள் இழுத்து
    லக்ஷ்மண தீர்தாவை லாவகமாய் சேர்த்து
    கபினியை கனிவுடன் கலந்தனைத்து
    பவானியை பரிவுடன் குமிர்த்து
    லோகபாவனியை லயமுடன் சேர்த்து
    நொய்யலை நுரையோடு அழைத்து
    அமராவதி ஆசையாய் கலந்து

    தர்மபுரியை தழைத்து
    மேட்டுரை மணக்க செய்து
    ஸ்ரீரங்கத்தை சேர்த்தணைத்து
    திருச்சியை திறம்பட செய்து
    புகாரில் புகுபவளே

    தங்க தமிழகத்தின்
    தலை மகளாய் திகழ்பவளே
    தஞ்சை தாரணி
    தனம் கொழிக்க வந்தவளே
    தருணியாய் மாறி
    கிடங்கரில் கலப்பவளே

    அலையோடு ஆடி வரும்
    அழகு தனை நான் காண
    ஆடி பெருக்கு நாள் போதுமோ
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அற்புதம்...அற்புதம்...
     
  3. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Thanks deva... for the first fb...
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக அருமையான கவிதை........

    ஆடி பெருக்கு போல இருந்தது உங்கள் கவி....
     
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    நன்றி ராம்... அன்னையை நினைத்ததும்... அதுவாய் வந்தது...
     
    1 person likes this.
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உங்க கவிதைலயாவது
    தண்ணி நல்லா வருதுன்றப்ப
    மனசுக்கு இதமா இருக்கு சௌம்யா
     
  7. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    எல்லாம் சிலர்
    சாக்கடை கலப்பதால்
    சந்தணம் சகதி ஆயிற்று

    கூவம் கூரற்றுவிட்டது
    பாலாறு பாழாகிவிட்டது
    பொன்னி புழுங்கி போச்சு
    தாமிரை துவண்டு போச்சு
    வைகை வத்தி போச்சு
    நொய்யல் நொந்து noodles ஆச்ச...
     
  8. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    வசனப் படுவதை விட்டு
    வான் மழை காத்தால்
    வசந்தம் மீண்டு வரும்
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    kavithai arumai...adiperukku nalla kondadineergalaa..sowmya..
     
  10. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Thanks sai... இல்ல டா மா... ஊர்க்கு போகல... இங்க சென்னை வந்ததால.. பாட்டுலயாவது காவேரிய பாக்கலாம்னுதான்....
     

Share This Page