ஆஞ்சநேயருக்கு ஏன் வெற்றிலை மாலை?

Discussion in 'Jokes' started by Ramavyasarajan, Nov 6, 2010.

  1. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    தீபா அவர்களின் ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை தலைப்பினைப் படித்த போது சுகி சிவம் அவர்களின் உரையினில் ஆஞ்சநேயருக்கு ஏன் வெற்றிலை மாலை என்பதை பற்றியும், ஆஞ்சநேயருக்கு சிந்தூரம் பூசுவதைப் பற்றியும் உரையாற்றினார்கள். அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன்.
    அசோக வனத்தில் சீதை சிறை இருந்தப் போது சீதையைத் தேடித் போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையைக் கண்டதும் ஸ்ரீ ராமனைப் பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாதிரமானதும் அனைவருக்கும் தெரிந்ததே. பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அக்ஷதைத் தூவி ஆசிர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்தபோது சீதைக்கு அக்ஷதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் கூறினார்கள்.

    ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியைக் கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் சிந்தூரம் அணிந்து இருந்ததை பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும்போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி சிந்தூரம் அணிந்ததாக கூற ஒரு சிறிதளவு சிந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை சூட முடியும் என எண்ணி உடல் முழுதும் சிந்தூர் அணிந்து கொண்டதாகவும் இதுவே அனுமனுக்கு சிந்தூர் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் கூறினார்கள்.
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சிந்தூரம் பற்றி படித்திருக்கிறேன், ஆனால் வெற்றிலை மாலை பற்றி
    உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ரமா. -ஸ்ரீ
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    rama,
    நல்ல,செய்தி,பகிர்ந்ததற்கு நன்றி.இதுவரை நான் அறியாத செய்தி.
     
  4. LLavanya

    LLavanya Gold IL'ite

    Messages:
    1,088
    Likes Received:
    143
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Thanks for sharing the information. I have seen in Ramayanam serial for this sinthur as different thing. Atlast the concept is same. Rama on seeing Hanuman with sinthur on tuesday told that whoever is doing kumkum pooja to Hanuman on tuesday , those persons will come as my persons like that.
     
  5. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Thank you RGS, Thank you Deepa

    Ramavyasarajan
     
  6. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Thank you Lavanya for further information.

    Ramavyasarajan
     
  7. ramya srini

    ramya srini New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Thanks for sharing. Really very useful...
     

Share This Page