1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவன், அவள்,அது !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 26, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அவன் :

    கண்கள் என்னக் கருவண்டோ ?
    கன்னல் மொழிக் கற்கண்டோ ?
    மின்னல் ஒளிப் புன்னகையோ ?
    பெண் முகம் பௌர்ணமியோ ?

    காந்தள் மலர்க் கைவிரலோ ?
    மொந்தைக் கள் கனியிதழோ?
    பூந்தளிர் தான் பொன்னுடலோ?
    விந்தைகளில் முதல் இவளோ ?

    மேகம் பொங்கும் குழலழகோ ?
    இராகம் கொஞ்சும் குரலழகோ ?
    மோகம் கொள்ளத் தூண்டுகின்ற
    தேகம் இவள் தனியழகோ ?

    சங்கை ஒத்தக் கழுத்தழகோ ?
    மங்கை தோள்கள் மென்னழகோ ?
    கொங்கை தாங்கும் இடையழகோ ?
    நங்கை கால்கள் நடையழகோ ?

    தோடு தங்கும் செவியழகோ ?
    ஈடே இல்லாச் சொல்லழகோ?
    ஓடும் மானைப் பின்தொடர்ந்து
    நாடிச் செல்லுமென் மனதோ ?

    அவள் :

    தேர்வெழுதும் மாணவன் போல்
    வார்த்தை நன்று வடிக்கின்றீர் !
    பார்வை அம்பால் துளைக்கின்றீர் !
    சேர்த் தணைக்கத் துடிக்கின்றீர் !

    எல்லை கொஞ்சம் மீறினாலும்
    தொல்லை என்றுக் கருதவில்லை !
    கல்லிதயம் கனியச் செய்தீர்,
    இல்லை என்றும் சொல்லவில்லை !

    நானும் உம்மை விரும்புகின்றேன் !
    தானாய்க் காதல் அரும்புகின்றேன் !
    ஆனபோதும் நாணம் கொண்டேன் !
    தேனைத் தர யோசிக்கிறேன் !

    காதல் சொல்லும் என்னவரே !
    பேதை என்னை வர்ணித்துப்
    பாதத்தோடு கேசம் வரை
    ஓதி விட்டீர் கம்பரஸம் !

    தேதியொன்றை நாம் குறித்துப்
    பாதியென்று ஆகும் நாளில்,
    காதல் பாடம் சொல்வதற்கே
    மீதி கொஞ்சம் வைத்திருங்கள் ! ( ;) :grimacing: :smile:)

    Regards,

    Pavithra
     
    Suja9, periamma, jskls and 2 others like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Lol. Very funny and beautiful poem. I was wondering wow, how expressive the guy had described the girl and was in awe. Then came the fantastic reply by the girl.
    Good poem.
    Thanks for sharing.
    Vaidehi
     
    PavithraS likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,890
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அவனின் வர்ணனை அழகு ..அவளின் யதார்த்தமும் அழகு! பவியின் கவியும் அழகு!
     
    PavithraS and Suja9 like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நல்லா அனுபவித்து எழுதிய கவிதை போல் தெரிகிறது.பவித்ராவின் புலமை மீண்டும் ஜொலிக்கிறது
     
    PavithraS likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @vaidehi71, @kaniths , @jskls , @periamma , @Suja9 -

    விருப்பம் தெரிவித்தமைக்கும் , பின்னூட்டம் அளித்தமைக்கும் மிக்க நன்றி ! :)
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆமாம் பெரியம்மா ! அனுபவித்தே எழுதினேன் ! என் சொந்த அனுபவமல்ல ! (அதற்குக் கொடுத்து வைக்கவில்லை ! :sleepy::smile: ) சில இந்தக் காலக் 'காதல் காவியங்களைப்' பார்த்து எழுதினேன் ! :hearteyes: தீபாவளிக்குத் தயாராகி விட்டீர்களா? ஒரு வாரமாக ,என் சமையலறையில் தினம் தினம் தீபாவளி தான் ! :smile:
     
    kaniths and periamma like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆஹா லக்ஷ்மி , மூன்று முறை என்னை அழகு என்று சொன்னதற்கு நன்றி ! நன்றி ! நன்றி ! :sunglasses:( அடிப்ப(பா)வி நான் எப்போ இவளை அழகுன்னு சொன்னேன்னு நீங்க நினைக்கற 'மைண்ட் வாய்ஸ் ' எனக்குக் கேட்டுருச்சு ! ஹா..ஹா..ஹா.. :smiley::smiley:)

    Jokes apart, Thank you dear ! :) உங்களோட தீபாவளி ஸ்பெஷல் என்னவோ ?
     
    jskls likes this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Me too LOL, Vaidehi ! Some guys (definitely not my guy ;)) really become poets when in Love. Thank you for the appreciation. Happy Deepaavali !
     
    vaidehi71 likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா தீபாவளி ஸ்பெஷல் ஒன்னும் கிடையாது .காலையில் எழுந்து உளுந்து வடை,பருப்பு வடை ,அதிரசம் ,சுகியன் செய்வேன் .இந்த வருஷம் நாங்க ரெண்டு பேர் மட்டும் . .சுவாமிக்கு படைப்பதற்கு வடையும் அதிரசமும் செய்ய வேண்டும் .மாய்ஞ்சு மாய்ஞ்சு பலகாரம் செய்த காலம் எல்லாம் போய் விட்டது .உங்களுக்கு என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, பெரியம்மா ! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !
     

Share This Page