1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழியாத கோலங்கள்

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jul 4, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    அழியாத கோலங்கள்


    மீண்டும் வந்திடுமோ வசந்த காலம்
    மனதில் மிளிரும் அழியாத கோலம்
    ஆண்டுகள் பலவும் உருண் டோடியும்
    இன்றும் கவர்ந்திடும் இளமை ஜாலம்


    அறியா வயதில் எதிர்வீட்டு நட்புடன்
    அலுக்காது விளையாடி அடித்த லூட்டி
    எரிகுழம்பு தயிர்சோறு கதைகள் சொல்லி
    ஊட்டி விட்டவென் அன்பான பாட்டி


    நாலணா டிக்கட்டில் நட்புடன் சேர்ந்து
    நான்கண்டு மகிழ்ந்த எம்ஜியார் படங்கள்
    காலாற நடந்து காந்திபுரம் பொட்டானிக்கல்
    கார்டன் என்றுநான் சுற்றிய இடங்கள்


    காதல் தெரியாத குழந்தை நாட்கள்
    கேசவன் மோகனின் இனிய நட்பு
    கீதாலயா திரையில் கண்ட படங்கள்
    கல்வெட்டில் பொறித்த காலக் கவிதை


    பருவம் வந்ததும் குடிபுகுந்த சென்னை
    பெண்களின் அழகால் வீழ்த்திய தென்னை
    புரியாத உணர்வோடு கழிந்த பொழுதுகள்
    பார்த்த பெண்களில் படித்த கவிதைகள்


    காலில் சக்கரம் கட்டிக் கொண்டு
    காற்றெனப் பறந்தது காலச் சக்கரம்
    நூலிழை இளமை அத்தியாயம் முடிந்து
    நாற்பதின் முடிவில் நிறுத்திச் சென்றது


    நினைத்துப் பார்த்தால் முடிந்த நாட்கள்
    நனவாக் கனவா என்றுநான் அறியேன்
    எனக்கென ஒருவரம் இறைவன் தந்தால்
    அந்த நாட்களை மீண்டும் கேட்பேன்


    வீயார்
     
    4 people like this.
    Loading...

  2. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Mega arumaiyanna Kavidhai, kuzhandhai Kalam Matrum paruva Kalathai azhagaha varnithu irrukkindreer.
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @crv kana kaanum kaalangal .miga arumai
     
    1 person likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நினைத்துப் பார்த்தால் முடிந்த நாட்கள்
    நனவாக் கனவா என்றுநான் அறியேன்
    எனக்கென ஒருவரம் இறைவன் தந்தால்
    அந்த நாட்களை மீண்டும் கேட்பேன் - beautiful. I am sure many of us will have this wish.
     
    2 people like this.

Share This Page