1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகிய இளவேனிற் காலம்

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 10, 2016.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கதிரவனின் முதல் கிரணங்கள்
    தொடும் முன்னே
    பறவைகளின் ரீங்காரம்
    வந்தடையும் செவிதனை
    உறக்கத்தை கெடுத்து !

    சிலுசிலுவென வீசும்
    குளிர் தென்றலில்
    உரைக்காத வெயிலில்
    சுற்றி மலர்ந்திருக்கும்
    அழகிய மலர்களில்
    மனம் மயங்கி
    காலாற நடந்திட
    இயற்கை அழகு
    தன்னாதிக்கத்தை செலுத்தும் !

    தூரத்தே இளம்பச்சை மலையும்
    பரந்து விரிந்த நீல வானமும்
    ஊரெங்கும் பச்சை போர்வை
    போர்த்தியது போல்
    கொட்டும் மகரந்த மழையும்
    சொர்க்கம் தரை இறங்கி வந்ததோ
    எனத் எண்ணத் தோன்றும் !

    நீர்நிலைகளில் கொட்டிய
    பனி கரைந்து
    அழகிய வாத்து நாரை
    அன்னம் மீன்கள் என
    அனைத்து உயிரினங்களும்
    ஒன்றாய் கூடும் காலம் !

    மூன்றே மாதங்கள்
    இச்சிற்றின்பம் எனினும்
    மூச்சு முட்ட பருகிட தோன்றும்
    இயற்கை எழில் கொஞ்சும்
    அழகிய இளவேனிற் காலம் !
     
    periamma, GoogleGlass and PavithraS like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நீங்கள் அனுபவிக்கும் இயற்கையை நாங்களும் அனுபவிக்கத் தந்தமைக்கு நன்றி ! சிறிது காலமே நீடித்தாலும், இது சிற்றின்பமன்று ! உருத்தெரியா அந்தப் பேரின்பத்தின் கருணையின் ஒரு துளி ! துளி பருகினாலும், சாகா வரமருள் இயற்கையெனும் அமுதம் ! அமுதம் காட்சியில் மட்டுமல்ல, இக்கவிதையிலும் உள்ளது ! உள்ளது உள்ளபடி மனத்துள் வாங்கி, வார்த்தை வடித்தப் பாங்கு என்னுள்ளம் கவர்கின்றது !
     
    periamma and jskls like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அருமை கவிதை காலம்.

    நமக்கு கனவுல கூட கஷ்ட காலமால வருது :)
     
    jskls likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி பவித்ரா. Glad to receive such a wonderful feedback from you.
     
    PavithraS likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி GG. கொஞ்சம் வாசல் பாருங்க... ஜக்கம்மா 'நல்ல காலம் பொறக்குது'ன்னு தானே சொல்றாங்க ...
     
    GoogleGlass likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அது உங்க தலைவிதி
     
    GoogleGlass likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எங்கள் ஊரிலும் இளவேனிற்காலம். பன்னீர் துளிகளாய் மேகம் நீர் சொரிய மேற்கு தொடர்ச்சி மலை காத்து உடலை ஊடுருவி செல்ல ,குற்றாலம் சென்று அருவியில் குளித்தால் பித்தம் தெளியும் .அது ஒரு தனி இன்பம் .லக்ஷ்மி உங்கள் கவிதை என்னை எங்கோ அழைத்து சென்று விட்டது .கேரளாவில் மழை பெய்தால் தமிழகத்தில் நீர் கொட்டும் .இயற்கை அன்னை வேறுபாடு பார்ப்பதில்லை .
     
    jskls and GoogleGlass like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உங்கள் அழகிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. குற்றாலம், மேற்கு தொடர்ச்சி மலை எல்லாம் திரைப்படங்களில் பார்த்தது தான்
     

Share This Page