1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகிய அரக்கியோ அமெரிக்காவில்?

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Oct 30, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    உயிர்களையும் பொருட்களையும் சேதம் செய்து,
    உலக மக்களை அச்சுறுத்தும் சூறாவளிகளுக்கும்,

    அழகிய பெயர்களைச் சூட்டுவது தொடர்கின்றது!
    அழகிய பெயர் 'காத்ரீனா' அன்று; 'ஸான்டீ' இன்று!

    காற்றில் பறக்கும் பொருட்கள் அனைத்தும், நன்கு
    காப்பாற்ற உள்ளே வைத்து மூடுவார்கள், மக்கள்.

    தண்ணீர் முதல் மெழுகுவர்த்திகள் வரை, வாங்கி,
    த்ம் வீட்டில் அடுக்கிடுவார், முன் ஜாக்கிரதையாக!

    மின்சாரத்தைக் கடத்திடும் கம்பிகள் இந் நாட்டில்,
    மின்சாரத்தைக் கடத்திடும் தலைக்கு மேலாகவே!

    மரங்களால் ஆன தூண்களே உள்ளதால், காற்றில்
    சரிந்து விழுந்திடும் அபாயம் என்றுமே உள்ளதே!

    மின்சாரம் இன்றேல் வாழ்வே ஸ்தம்பிக்கும்! இந்த
    மின்சாரத் தடையும் இரண்டு நாள் வரை நீடிக்கும்!

    மின்வெட்டை எண்ணி வருந்திடும் நம்மவர்களும்,
    மின்வெட்டு எங்குமே வருமென்று அறிந்திடலாம்!

    :hiya
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அழகிலே என்றும் ஆபத்து இருக்கிறது தானே இராஜிராம் மேடம்?
    இப்புயல் பெருஞ்சேதங்கள் விளைவிக்காது கடந்திட அவனை வேண்டுவோம்!
    நன்றி!
     

Share This Page