1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அளவுக்கு மீறினால் அன்பும் விஷம் தானே?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 17, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அளவுக்கு மீறினால் அன்பும் விஷம் தானே?

    அன்பைப் பொழியப் பொழிய அன்பு கூடுகிறது,
    அந்த அன்பை அவர்கள் ஏற்றுக் கொண்டவுடன்,
    ஏற்றுக் கொண்டவரே தனக்கு மட்டும் தான் என,
    நினைத்தவுடன் தானே, தானே அன்பு தடம் பிறளுகிறது?

    தனக்கு மட்டுமென நினையா மனம் ஒன்று உண்டோ?
    எல்லா உறவுகளுக்குள்ளும் இது தானே நடக்கிறது?
    இது தவறா? கொண்டு வந்தது என்ன?
    கொண்டு போவது என்ன?

    அன்பைக் கொண்டு, அன்பை பெற,
    அந்த அன்பிர்க்குரியவரின் அன்பே அன்னியமாவதேன்?
    தனக்கு மட்டுமென நினையா மனம் ஒன்று இருந்திட்டால்?

    அகன்ற சொர்க்க வாசல் வைகுண்ட ஏகா தேசியன்று - இன்று,
    மட்டும் தானா திறந்திருக்கிறது? அந்த தூய அன்பினை கொடுத்து,
    பெற்று அளவுக்கு மீறாமல் இருந்தால் என்றும் சொர்கமே இப்புவியில்.

    அன்பே கிடைக்காத ஒரு உயிருக்கு அந்த அன்பு கிடைக்கையில்,
    ஏனந்த உயிர், உயிர் கொடுத்த உயிரின் உயிரை எடுக்கிறது?
    உயிர் எடுக்கா உயிராய், உயிரை உயர்வாய் நினைத்தால்,
    உயர்வன்றோ இரு உயிர்களுக்கும் என்றும்?
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பிற்கோ இல்லை அடைக்குந்தாழ்
    எந்த அன்பிற்கும் இல்லை அளவு கோல்

    அன்பெனும் சிறகிருக்க, அன்பரும் அருகிருக்க
    உயர உயரப் பறந்த உயிரை

    என் அன்பெனும் சிறையிலே, அடைந்திரு
    என்பது சிறப்பானது இல்லை

    உயிர்ப்பாய் இருந்த உணர்வும் அது
    உவர்ப்பாய் போனது என்பதும்
    உயர்வாய் இல்லை.

    உயிர் எடுக்கும் உயிருக்கு, உயிர் கொடுத்த
    உயிரது, உயிரானது என்றாலும், உயிர் கொடுத்த
    உயிரும், தன் அன்பிலே பயிரானது எனும்
    நினைவு, இப்போது உயிர் எடுக்கும் உறவுக்கு
    மறந்து தான் போனது போலும்...

    மறவாது அதை நினைவில் வைக்க, உறவானது இறவாது.. அந்த உறவுக்கு இல்லை இரவு.

    அனைத்து வரிகளும் அமர்க்களம். அதிலும் உங்கள் கடைசி பத்தி.... :bowdown:bowdown:bowdownஅதை படித்ததும் என்னுள்ளும் வரிகள் பொங்கி விட்டன. ஆயினும் அதிகமாய் போக வில்லை என எண்ணுகிறேன்.
     
    Last edited: Dec 17, 2010
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    அருமையா சொன்னீங்க நட்ஸ், உண்மை தான் , அது எல்லாருக்கும் புரியணும்
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நண்பரே
    சில நேரங்களில் அன்பு என்பது ஒரு அமிழ்த விஷம்
    அதிகமா கடைந்தால்(கொடுத்தால்/எடுத்தால்))
    விஷமாய் விஷமமாய் முடியும்.
    மன முறிவு ..அதற்கு இல்லை ஒரு மாற்று வழி???

    பண்பை,அன்பை தேட மறந்த அன்பர்களுக்கு
    ஆயிரம் தரம் சொன்னாலும் அகத்தில் ஏறாது
    "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகிறார் ...."

    நானும் இப்போ இந்த கல்லடி (அன்படி) பட்டு
    வலியோட உங்க வரிகளை படிச்சிட்டு இருக்கேன்
    ஒவ்வொரு வரிகளும் உண்மையின் உரைகற்கள்
    ரொம்ப அருமை நண்பரே

    வேணி
    நா எழுதுறதுக்கு வார்த்தைகளே கெடைக்கல.எல்லாத்தையும் நீங்களே போட்டாச்சு.
    எதோ நீங்களா பார்த்து பின்னால் வரவங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்க.
     
  5. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Natus
    மனித நேயமும் அன்பும் வேறு வேறா விளக்கம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்
    kantha
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அழகு கவிதை வேணி.
    என்னிதை விட நல்லாவே இருக்கு.
    பொங்கினாலும், அதிகமானாலும் உங்கள்,
    வரிகள் என்றுமே விஷமாவதில்லை, நல்ல விஷயமாகவே இருக்கும்.
     
  7. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    nats romba feel pani yezhuthirukinga pola, romba nalla iruku , ana athu than manitha iyalpu, thanaku kidaikira anbu engu kidaikamal poividumo allathu thodarnthu kidaikavendumey endra yenathil anaithu manitha manamum ithey pol ninaipathu iyalpu than ,
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கிட்டாத வரையில் தான் வானவில்லை பார்த்து வாய் பிளப்பர்.கிட்டிவிட்டால், அதை கயிறாக திரித்து விட மாட்டார்களா என்ன?[​IMG][​IMG]
    நட்ஸ் ஒவ்வொரு வரிகளும் பிரமாதம்!!!!!
    நட்ஸ் நான் நினைக்கிறேன்... இந்த கவிதை சம்மந்தப்பட்ட வரையில், நீங்கள் அந்த அளவுக்கு மீறிய அன்பினை யாராவது ஒருவரிடத்தில் பெற்றவராய் இருப்பீர்கள்..உங்கள் கருத்து அதன்படி மிக சரி.
    என்னை பொறுத்த வரையில், நான் அந்த அன்பை கொடுத்தவள் இடத்தில் இருக்கிறேன்.. எனக்கும் இந்த கருத்து ஒத்து வர தான் செய்கிறது.

    ஆனால் வேணியின் பின்னூட்டம் பார்த்த பின்பு, அது இன்னும் சரியோ என்று தோன்றுகிறது...சில சமயம், அளவுக்கு மீறிய அந்த அன்பே தவறை மன்னிக்கவும் மறக்கவும் செய்கிறது.அளவோடு நிறுத்தி கொள்ளலாம் என்ற நிலை எதற்கு வந்தாலும், அன்புக்கு மட்டும் வர கூடாது என்று இப்போது நினைக்கிறேன்.(ஒருவேளை நேற்று இதை படித்திருந்தால் கூட இப்படி நினைத்திருக்க மாட்டேன்) வந்துவிட்டால், கூடவே உறவுகளின் பிணைப்பும் உணர்வுகளின் மதிப்பும் அற்றுப்போகும் என்று தோன்றுகிறது.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஹைய்யா லதாவுக்கு புரிஞ்சிடிச்சு... :)

    லதா கோச்சுக்காதீங்க இப்படி சொன்னதுக்கு. :)
     
  10. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    illa illa, enjoy panren, enaku purinjadhu enakum sandhosham dhan, possessiveness pathi enaku puriyara madhiri neenga ezhudhinadhu ninachum romba sandhosham. unga comment adha vida sandhosham, nadathunga nadathunga,
     
    Last edited: Dec 18, 2010

Share This Page