1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அம்மாவின் கடைசி வார்த்தை...

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 14, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்று தான் தோட்டத்தில் ரோஜா மலர்ந்தது !
    மட்டற்ற மகிழ்ச்சியில் உன் முகமும் மலர்ந்தது !
    சென்று வா பள்ளிக்கு , சாயுங்காலத்தில்
    சூட்டுவேன் கூந்தலில் என்று நீ கூறினாய் !

    ஆலயம் செல்லலாம் மாலையில் அனைவரும்
    பள்ளியில் நன்றாய்ப் பாடம் படித்து வா
    குவலயம் போற்றவே குழந்தாய் ! என்று நீ சொல்லவும் ,
    துள்ளி ஓடினேன் அன்று நான் காலையில் !

    உணவிடை வேளையில் வேகமாய் வந்தனர்
    தந்தையின் நண்பர் , நானறியா இருவர் ,
    மாணவி என்னைக் கூட்டிச் செல்லவே ஆசிரியர்
    வந்து ஒப்புக் கொடுத்தார் அவரிடம் !

    எதற்காக செல்கிறோம் , என்ன நடந்தது ?
    என்றேதும் அறியாமல் அவரோடு வந்தேன் ,
    எதற்கும் கலங்காத தந்தை அழக் கண்டேன் !
    என்னை ஒட்டி நின்ற தம்பியை அணைத்தேன் !

    தீ விபத்தென்றனர் , உன் தாய் இறந்தாள் என்றனர் !
    பரிதவித்துப் போய் அழத் தெரியாமல் நின்றேன் !
    ஆபத்தை உணராமல் அநியாயமாக உன்
    ஆருயிர் போனதாய் அறிந்தவர் கூறினார் !

    பூப்போன்ற உன் முகத்தை இறுதியாய்க் காணவும்
    வழியின்றி வெண் துகிலில் போர்த்தியே கிடந்தாய் !
    அப்போதும் உன் குழந்தை எம்மை அன்போடு
    விழி மூடியே பார்த்தபடி இருந்தாய் !

    ஆண்டுகள் இருபதும் அதன் மேலும் போனாலும்
    மாண்டது நேற்றுத்தான் என்பதாய் உணர்கிறேன் !
    வீணிலே உன்னுயிர் போன அதிர்ச்சியினின்று நான்
    மீண்டதே என்னுயிர்க் குழந்தையைக் கண்டுதான் !

    உன் கையால் சாப்பிட்டக் கடைசி கவளமும் ,
    என்னிடம் நீ சொன்ன கடைசி வார்த்தையும்
    மண்ணோடு நீ போன பின்னும் அழியாமல்
    என் நெஞ்சோடு இருக்குதம்மா ! அது எனக்குப் போதுமம்மா !

    அழவில்லை, அரற்றவில்லை, கலங்கவுமில்லை !
    விழவில்லைப், பிறரை வீழ்த்தவுமில்லை , மனதால் ,
    எழுந்தேன் நான் துணிவோடு, நீ சொன்ன அற
    வழியில் நடந்திடவே எண்ணம் கொண்டு !

    Regards,

    Pavithra



    பி.கு.

    இது கழிவிரக்கக் கவிதையல்ல.. என் தாய்க்கு நான் தரும் கவிதாஞ்சலி ..


    ஆலயம் செல்லுவோம் என்று அன்றவள் சொன்னதே என்னிடம் கடைசி வார்த்தை...

    மாலை வரையில் அவள் வரவைப் பொறுக்க முடியா அந்தக் 'கோ' ,

    தன் 'இல்லுக்கு' ,காலை வேளையே என்னை ஏமாற்றி அவளைக்

    கொண்டு சென்றனன் போலும்...
     
    7 people like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My god.... It's totally devastating to read this. I wonder how extremely hard it would have been for a young child to see this. Sincere prayers with you Pavithra. May your mom's soul rest in peace. I am sure your mother is showering her blessings wherever she is.

    I still remember my last day with my mom as I was the one giving her water the whole time she was in bed. Couldn't forget it even after these many years. wondering still is memory boon or bane?
     
    2 people like this.
  3. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Ennai romba azhavechiteenga pavi..
    I am sorry . Your Mom will always be with you and your brother.
     
  4. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    I am sorry LS. This week has already been tough for you.
    Sometimes I don't know why God is so cruel and unkind.
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    jskls, definitely it is a boon, since memories are what we are left with.. consolations for our life time...I never cry for my mother.. Her death taught me the most valuable lesson of all, that nothing is permanent and this too shall pass. console1

    Regards,

    Pavithra

    P.S I am sorry if this poem gave you painful memories about your mother...sorrysmiley
     
    1 person likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female

    Aiyyo Vanitha naan dhaan pin kurippu pottirukken illa ? :notthatway:Naan azhalainga.. ippo ungalai ellam azha vachuchuttamonnu feel pandren...thinkingsmiley

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  7. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    I know you are strong. Sometimes life gives difficulties in such a way that the person turns more stronger.
    I can't help but let my tears out. My hugs to you.
     
    4 people like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    This too shall pass....
     
    3 people like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    No worries Pavithra. Don't say sorry. You have expressed pain too beautifully. Not painful but just memories. I have crossed all that. sometimes memories becomes a big burden.
     
    2 people like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா உங்கள் கவிதை அன்றைய சம்பவத்தை கண் முன்னே நிறுத்தி விட்டது .வலியை உணர்ந்தேன் .என்றும் உங்கள் தாய் உங்களுடன் இருப்பார்கள் .
     
    2 people like this.

Share This Page