1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி யிருக்கிறார்?

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Oct 11, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி

    யிருக்கிறார்? :hello:


    அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
    2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
    3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.
    4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..
    5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
    6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை.
    இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.
    7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.
    8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார். குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
    9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
    அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?
    அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும் காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.
    இருந்தாலும் அப்பா
    ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
    தெரியவில்லை...,...
    தந்தையைப் போற்றுங்கள்.
    படித்ததில் வலித்தது.

    ஒரு வாட்ஸ் ஃப் என் பகிர்வு
     
    Loading...

  2. indubalram

    indubalram IL Hall of Fame

    Messages:
    2,852
    Likes Received:
    3,409
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Yen enderru naan ninaithuparthandundu. I feel Bc mother and father are the same. Children will react the way they are brought up. Children had always had their mother when they were hungry . Mother is always kind to their children. Mother will not be upset if their children didn’t perform well. They are more caring. That doesn’t mean father doesn’t care. But father’s do not show their love. They do not express. Children know that if they want something and if they ask through mother their demands will be fulfilled. But as a father u should not feel sad Bc you are the part of ur wife. It’s shiva and shakthi. Inseparable! Whether good or bad both are responsible and is meant to both.
     
    Thyagarajan likes this.
  3. indubalram

    indubalram IL Hall of Fame

    Messages:
    2,852
    Likes Received:
    3,409
    Trophy Points:
    308
    Gender:
    Female
    And the last part that children seek mother’s help when u grow old is Bc they feel male members are only to get money that’s all.
     
    Thyagarajan likes this.

Share This Page