1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்புள்ள மான்விழியே...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jan 24, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பின்றி, நட்பின்றி,
    அதை தேடும் வலுவும் இன்றி
    ஆற்றுவாரோ தேற்றுவாரோ இன்றி,
    ஆற்றின் போக்கில் மிதக்கும் இலையாய்,
    ஆலோலம் பாடிய என்னை கோலாகலமாய்
    கொண்டாடிய உயிரே.. என் அன்புக்கு இனியவளே..
    பொண்ணை விரும்பும் பூமியில் என்னை விரும்பிய,
    என் ரோஜா மலரே...

    வேண்டும் தகவலை,
    வேண்டுமே என சொல்லக் கூட
    வேண்டியதில்லையடி உன்னிடம்.

    வேண்டுவோருக்கு, வேண்டியதை விட
    அதிகமாய், ஆழமாய், நீளமாய், வாரி வழங்கும்
    கொடை வள்ளலே, என் கொடி வள்ளலே... :)

    உயரங்கள் உனக்கு ஒரு பொருட்டல்ல, உன் வளர்ச்சியிலே
    துயரங்களும் உனக்கு ஒரு பொருட்டல்ல, உன் மகிழ்ச்சியிலே
    மகிழ்ச்சியை, பிறர் மனங்களில் பரப்ப, இன்னும் உயர உயர
    பறக்கும் என் மனதுக்கு இனியவளே...

    உனது பயணத்தில் இது ஒரு மைல்கல்.
    மேலும் மேலும் பல உயரங்கள் நீ அடைய,
    சிகரங்கள், சீக்கிரம் உன் பாதம் வந்தடைய,
    என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

    உன் வாழ்வில் அனைத்திலும், வெற்றி உனக்கே உரித்தாகட்டும்.
    நிறைகள் நிறைந்து, குறைகள் குறைந்து, குறைவில்ல நிறையே உனக்கு குறையாகட்டும்.
    உன் வாழ்வு வளரும் பிறையாகட்டும்.
    உன் வாழ்வு பிறருக்கு பின்பற்றும் உரையாகட்டும்.
    என் அன்பு, உன்னை நாடும் துயரங்களுக்கு உறையாகட்டும்.


    என் வாழ்வின் ஒரு அங்கமாய் ஆன என் தங்கமே,
    எனை நட்பின் மழையில் நனைக்கும் என் வங்கமே,
    என்றும் நம் அன்புக்கு வராதிருக்கட்டும் பங்கமே..
    என் பங்கயமே...


    என் அன்பான மான்விழியே...
    அன்பால் உலகை நான் காண இருக்கும் விழியே...
    இனி வெற்றிகள் இருக்கட்டும் உன் வழியே...
     
    Last edited: Jan 24, 2011
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வேண்டுவோர் இன்புற்றிருக்க
    வேறொன்றும் யாம் அறியோம்
    ...இந்த ஐயல்லிலே
    கொடுப்பது இன்பம் என்ற கொள்கை பிடித்துப் போய்
    பித்தாகி..பற்றாகி...அது பதிவாகி...
    விதி வசத்தால் அது கை கூடி
    வங்கியில் இன்று பதினைந்தாயிரம் போல் ஆகி...
    மலைத்து நிற்கிறேன் நான் இங்கே.

    விதைத்து நான் என்றாலும்
    விளைய வைத்தது நீங்கள் தானே .
    களைக்கும் போதெல்லாம்,பிழை பொறுத்து
    என்னோடு கதைத்து ,களை எடுத்து -என்
    விளைச்சலை வெளியே கொண்டு வந்த
    வித்தகர்கள் நீங்களே.....

    என் இன்றைய உயர்ச்சியின் அளவு
    உங்கள் ஊக்கத்தின் உயர்வே !!
    நன்றிகள் பலவே.[​IMG]


    தோழி
    என்னைத் திருடிய நிந்தன் வரிகள்
    வருடியது என் இதயத்தின் தமனிகளை..தென்றலாய்.
    பழைய படப் பாடல்களுக்கு வரி நான் தந்திட
    புதிதாய்
    எனக்கு வரிகளை வாரி இறைத்திருக்கும் வனிதையே.


    உன் வற்றாத குற்றாலத் தமிழ் இன்ப வாழ்த்தினாலே
    அடைந்திடுவேன் அடுத்த எட்டை இதோ ஒருநொடியிலே.[​IMG]


    தமிழினாலே எனக்கு அறிமுகம் ஆன உனக்கும்
    உன் வழியாய்
    என்னை இந்த தமிழ் தளத்திற்கு அடையாளம் காண்பித்த
    நம் தமிழுக்கும்
    ஆயிரம் நன்றிகள்.....[​IMG]
     
    Last edited: Jan 24, 2011
  3. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    எங்களுக்கு வித்தானவளே
    எழுத்துக்கு பித்தானவளே
    பண்புக்கு முத்தானவளே
    அன்புக்கு சொத்தானவளே
    ஐஎல்க்கு த த்தானவளே!!!!!!!!!!!!!!!!!!!
    உன் வெற்றிகள் தொடர
    அக்காவின் ஆசிகள்!!!!!!!!!!!!!!!!!!!
     
  4. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    கிர்த்திகா
    எங்களுக்கு வித்தானவ
    எழுத்துக்கு பித்தானவ
    பண்புக்கு முத்தானவ
    அன்புக்கு சொத்தானவ
    ஐஎல்க்கு த த்தானவ

    என்று எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டால் நாங்க தமிழ் சொல்லுக்கு சரோஜ் கிட்டே தான் போகணும்
    மிக நன்றக இருந்தது உங்கள் பின்னோட்டம்

    அன்பு வேணி
    உங்கள் கவிதையும் கிர்த்திகா கொடுத்த பின்னுடலும் அருமை
    உங்கள் நட்பு இவுலகம் உன்ளவரை தொடர என் ஆசிகள்
    காந்தா
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    எந்தையும், என் தாயுமாய் என் சிந்தையிலே நின்று
    எதுகை மோனையுடன் எட்டிப் பார்த்து
    என் கைக்கு எட்டிய என் உயர்வுக்கு
    தட்டிக் கொடுத்த வாழ்த்துக்கு மிக்க நன்றி :):):):)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female


    ஜில்லு
    தமிழ் வார்த்தை எதுக்கு.
    நீங்க தான் சிமிலி போட்டு அசத்துறீங்களே....
    ரெண்டு எடுத்து தட்டி விடுறது...(போளி மாதிரி ஏதாவது..இனிப்பா ):)
    நேர்லயே நீங்க வாழ்த்து சொன்ன மாதிரி இருக்கும் ..:rotfl
    நன்றி
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தாய் எட்டடி பாய்ந்தால்
    குட்டி பதினாறு அடி பாயும்
    பதினைந்தாயிரம் அடி தாண்டிய மகளுக்கு ஆயிரம் அடி தாண்டிய அம்மாவின் அன்பு வாழ்த்துக்கள்.சரோஜ் இன்னும் பல பெருமைகள் அடைய மீண்டும் வாழ்த்துகிறேன்.
    நட்பின் ஆழம் மிக அதிகம் என்று காட்டிய வேணிக்கு நன்றி.
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    சரோஜ் உங்கள் பயணம் சிகரத்தின் உச்சியை விரைவில் தொட வாழ்த்துக்கள் பல.......
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அன்பு கவிக்குயில் இன்று தொட்டது சிகரம்,
    இது சீக்கிரம் தொட இயலா சிகரம்,
    நானெல்லாம் சிந்தையிலும் தொட இயலா உயரம்,
    வாழ்க தோழி உன் பயணம்,
    வளர்க நின் நட்பு வட்டம்,
    உன்னையே நாம் மையில் கல்லாய் கொண்டு,
    உன் வழியில் நட்புகளை இணைக்க ,
    மென் மேலும் முயல்வோம்,
    வாழ்க தோழி நீ வாழ்க!
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அக்கா,

    உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் நல்முத்துக்கள். அழகாய் அதனை கோர்த்து இன்று அழகிய மாலையை தொடுத்து உள்ளீர்கள். மேலும் பல மாலைகளை தொடுக்க என் வாழ்த்துக்கள். :thumbsup:thumbsup:)


    வேணி அக்கா,
    உங்கள் மான்விழியாளுகான கவிதை அருமை. எத்தனை பாசமும், நேசமும் வரிகளில் தெரிகிறது :)
     

Share This Page