1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

*அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !*

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 4, 2019.

 1. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  4,727
  Likes Received:
  9,456
  Trophy Points:
  408
  Gender:
  Female
  *அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !*

  *டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேளதாள இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தை சீர்குலைத்து கெடுத்துவிடும்.*

  *இதனால் அபசகுனமான நிகழ்ச்சிகளின் காட்சிகள் TVக்குள் நடந்தாலும் அதன் ஒளிஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.*

  *இதனால் பலநோய்கள் வரலாம். வீட்டில் பணம் தங்காமல் போகலாம், வீண்செலவுகள் ஏற்படலாம், தொழில் நஷ்டம் ஏற்படலாம், என்று இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..*

  *அதே சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுமுடிவுகள் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.*

  *ஆம்...!!!*

  *உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்...*

  *இதனால் கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம், மன அழுத்தம், மன நோய் வந்து... உடல் எடை அதிகரித்து.....*

  *இதன் தொடர்ச்சியாக...*

  *சர்க்கரை வியாதி, மாரடைப்பு, இருதய கோளாறு, ரத்த அழுத்தம், கழுத்து எலும்பு தேய்மானம், தலைசுற்றல், தலைவலி, மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...*

  *இதற்கு எல்லாம் முக்கியமான காரணம்....*

  *பிறரை எப்படி கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கள்ளக்காதல் தொடர்பு எப்படி என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது....*

  *குடும்பத்தினருக்குள் மாமியார்-மருமகள் சண்டை, அண்ணன் தம்பி சண்டை சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது, எல்லாம் கற்றுக்கொள்ளலாம்.*

  *எப்படி லஞ்சம் பெறுவது!!! கற்றுக்கொள்ளலாம்.*

  *அதோடு...!!*

  *நேர்மையான அரசு அதிகாரிகளை எப்படி லஞ்சம் வாங்கியது போல் திட்டமிட்டு மாட்டி விடுவது என்றும் கற்றுக் கொடுக்க படுகிறது.*

  *பிறர் தொழிலை எப்படி கெடுப்பது? எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது என்பது எல்லாம் காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.*

  *இவையெல்லாம் விட பெரிய பேரிழப்பு*

  *உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...*

  *இத்தனை பாதிப்புகள் தெரிந்தும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட சுயலாபத்துக்காக இப்படி பட்ட மக்களைச் சீரழிக்கும் டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..*

  *தயவுசெய்து மக்களே*,

  *இது போன்ற கேவலமான நாடகங்களை புறக்கணியுங்கள்.. நாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்தால் தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்.*

  *நமது செயல் மட்டும் இல்லை, எண்ணங்களும் நமது கர்மா தான்.*

  *எனவே உங்கள் விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்.*

  *குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். மற்ற நேரங்களில் நல்ல புத்தகங்களை படியுங்கள்... கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்லகாரியங்களிலும் ஈடுபடுங்கள்*

  *இல்லையேல் வரும் பலன்களை நல்லதோ கெட்டதோ நீங்கள் தான் அவற்றை TV பார்த்து உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அணுபவிக்க தயாராகுங்கள்.....*

  *அல்லதை விடுத்து நண்பர்களே...!!*
  நல்லதை பாருங்கள்;* *கேளுங்கள்*
  *பேசுங்கள்*
  *சிந்தியுங்கள்*
  *வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும் ........*

  *வாழ்க வளமுடன் & நலமுடன்*

  *தீதும் நன்றும் பிறர் தர வாரா நம்மைச்சுற்றி நடப்பனவற்றுக்கு நாமே பொறுப்பு........*

  jayasala42
   
  dhivyacc and sweetsmiley like this.
  Loading...

Share This Page