1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அட்டைகள்

Discussion in 'Regional Poetry' started by periamma, Oct 21, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அரசியல் எனும் குட்டையில்
    ஊறியது இரண்டு மட்டை
    குட்டையை கலக்கிய மட்டையில்
    ஒட்டியது தங்க அட்டைகள்

    அட்டைகள் உறிஞ்சியது குருதியை
    மனித குருதியை
    உப்பியது பாரத்தால்
    தவித்தது நகர முடியாமல்
    பார்த்தனர் பாதசாரிகள்
    பொசுக்கினர் அட்டைகளை

    எத்தனை முறை அழித்தாலும்
    பல்கி பெருகியது அட்டைகள்
    அழிய வேண்டிய அட்டைகள்
    அழியவில்லை
    அழிக்க நினைத்த மனிதன்
    அழிந்து போனான்
    அட்டைகளை அழிக்க
    வழி ஏதும் இல்லையோ
    சொல்லுங்கள் தோழர்களே
     
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா அருமையான கருத்துள்ள கவிதை ! சிந்தனையைத் தூண்டும் பதிவு ! பகிர்ந்தமைக்கு நன்றி ! அட்டைகள் அரசியல் குட்டையில் பல்கிப் பெருகி, ஊழலில் திளைத்து,மக்கள்நலம் மறந்து,தன்னலமொன்றே தலை வைத்தாடி நாட்டைக் குட்டிச்சுவர் செய்து கொண்டிருக்கின்றன.அவற்றை அழிக்க நெருப்பினால் தான் முடியும்.

    ஆம் ! மக்களின் தார்மீகக் கோபமென்னும் நெருப்பு- ஏழைகளின் வறுமை நெருப்பு- பிஞ்சுகளின் கல்வி ஞானமென்னும் நெருப்பு- வயிற்றுப்பசியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை விடவும்,எதிர்காலத்து சந்ததிக்கு ஓர் சுத்தமான,தரமான சமுதாயத்தை விட்டுச் செல்ல வேண்டுமென்கிற எண்ணத்தின் நெருப்பு.

    பாரதி சொன்னது போல்- நெருப்பில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை- வெந்து தணியட்டும் அக்கிரமங்கள். நெருப்பிற்குண்டு அனைத்தையும் சுத்தம் செய்யும் ஆற்றல். அந்த நெருப்பு- தேர்தல் நேரத்தில் பணமும்,பொருளும் வாங்கிக் கொண்டு வாக்களிப்பின் அணைந்து விடும்- நம் கண் முன் நடக்கும் அநியாயத்தை அறிவும்,சாமர்த்தியமும் கொண்டு தடுத்து நிறுத்தாவிடில் அணைந்து விடும். தத்தமது கடமைகளைப் பொறுப்போடு பொதுமக்கள் செய்யாவிடில் அணைந்து போகும். சத்தியத்தையும்,தர்மத்தையும் மதிக்காவிடில் அணைந்து போகும். வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணாவிடில் அணைந்து போகும். நம் எல்லோருக்கும் அந்த நெருப்பு அணைந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்புண்டு. சரியான நேரத்தில் அந்த நெருப்பைப் பிரயோகிக்க வேண்டிய அவசியமுமுண்டு. அட்டைகளைக் கொளுத்த நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டிய காலமிது.
     
    jskls and periamma like this.
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பொருத்தமான கவிதை. பாராட்டுக்கள்.
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS பவித்ரா அருமையான விளக்கம் .அந்நியரிடம் இருந்து விடுதலை வாங்கி விட்டோம் .ஆனால் நம் நாட்டியே நாம் அடிமைகளாக இருக்கிறோமோ .அவன் வீசும் பணத்துக்கு ஆசைப்பட்டு நம்மை நாமே அடமானம் வைத்து விட்டோம் .நாட்டுக்கு தேவை ஒரு புதிய துடிப்புள்ள தலைமை .நடக்குமா என்று தெரியவில்லை
     
    jskls likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu நன்றி உஷா .இன்றைய சூழ்நிலை மிக கேவலமாக இருக்கிறது .பணம் கொடுத்து நீதி தேவதையை வாங்குகிறார்களே அது மிக வேதனையை தருகிறது
     
    jskls likes this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அரசியல் அட்டைகளை பற்றி பொட்டில் அறைந்தார் போல் எழுதியது அருமை.
     
    periamma likes this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    kuruthi urinjum attaikal mmaa avanga
     
    jskls and periamma like this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls மனதின் குமுறல்கள் எழுத்து வடிவில் .வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே
     
    jskls likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass kuruthiyai urinchi kolaagalamaaga alaiginrana
     
  10. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,785
    Likes Received:
    12,620
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:attayil kavithai chonna ammavirkku mikka nanree. nan puthaga attai enru ninaitheyn. poochi attai en veetu ullum velium undu. eduthu pottu moochu vangiadhudhan miccham. perugi perugi perithagi vandhu gonde irrukum ullagam ulla varai. Regards. Sorry for response in Tanglish.
     
    periamma likes this.

Share This Page