1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடம் மற்றுமொரு அமோகமான வருடமாக எனக்கு அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. Good (2019) > Better (2020) > Best (2021). எனக்கு Hat-trick வெற்றி வருடங்கள். இந்த வருடத்தில் தான் ஆல் ரவுண்டர் ஆக அனைத்து ரோலிலும் அமோகமான வெற்றி பெற்று இருக்கிறேன் என்று சொல்வேன்.

    நான் கற்றுக்கொண்டது/கடைப்பிடிப்பது:

    யாருக்கு தான் பிரச்னை இல்லை? தீர்க்க முடிந்த பிரச்னை என்றால் முயன்றவரை போராடலாம். தீர்க்கவே முடியாதது என்றால் வாங்கி வந்த வரம் அவ்ளோ தான் என்று ஏற்றுக்கொண்டு பிரச்னையோடு சேர்ந்து வாழ முயற்சிக்கலாம். உத்வேகம் தரும் இந்த பாடல் வரிகள் கேட்டு என்னை நானே உற்சாக படுத்தி கொள்வேன்:

    YT - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - Autograph

    சில கதவுகள் பூட்டப்பட்டு தான் இருக்கும். ஒன்னு கதவை ஒடைச்சிட்டு போற தில்லு வேணும். இல்லைனா வேற ஏதாவது திறந்த கதவுக்குள் நுழைந்திடனும். இதை விட்டுட்டு மூடிய கதவையே பார்த்திட்டு வருத்தப்பட்டுட்டே இருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. வாழ் நாள் முழுதும் பைத்தியமா சுத்தறதில எந்த அர்த்தமும் இல்லை.

    ஹோட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிடும்போது நான் வாங்கியதை தான் ரசித்து சாப்பிடணும். அடுத்தவர் ஆர்டர் பண்ணதை பராக்கா பார்த்து என்னுடையதை குறைவா மதிப்பிட கூடாது.

    என்னை பத்தி அடுத்தவங்க என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை. அடுத்தவங்க என்ன வெல்லாம் நினைக்கிறாங்க/பண்றங்க னு நினைத்து என் பொன்னான நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

    என் மைண்ட் ஓட ரிமோட் கண்ட்ரோல் என்கிட்டே மட்டும் தான் இருக்கணும். அடுத்தவர் என்னை இயக்க முடியாது. அடுத்தவர் ஆட்டுவிக்கும் பொம்மை நான் இல்லை.


    ****************************

    ஆங்கில புது வருடம் இன்னும் ஒரு நாளில் பிறக்க போகிறது. 2022 இனிதே நகர கரங்கள் தட்டி வரவேற்போமா?

    SPB பாடின இந்த பாடல் இல்லாம ஆங்கில புது வருடமா?

    YT - Happy New Year

    ****************************
     
    vidhyalakshmid likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடத்தின் முதல் போஸ்ட். ஒரு புத்தம்புது ரொமான்டிக் மெலோடியோடு ஆரம்பிக்கலாம்.

    தற்செயலாக நேற்று இரவு கேட்ட பாடல். என்னவோ பிடித்தது. சிநேகிதன்/சேவகன் னு வரிகள் என்னென்னென்னவோ.....சொல்லுது. :wink::wink:

    நான் பிழை - காத்துவாக்குல ரெண்டு காதல்

    அவளோடிருக்கும்
    ஒரு வித சிநேகிதன் ஆனேன்
    அவளுக்கு பிடித்த
    ஒரு வகை சேவகன் ஆனேன்
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    புது வருஷத்தில் புதுசா தத்துப்பித்துவம் கிறுக்காம என்னால போக முடியுமா?
    • என்னோட வாழ்க்கைக்கு தான் நான் ஸ்கிரிப்ட் கிறுக்க முடியும். என்னோட வாழ்வில் வருபவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்/ என்னவெல்லாம் நடக்கணும் என்பதற்கு என் ஸ்கிரிப்ட் ல இடம் இருக்க கூடாது.
    • நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். நான் கிறுக்கிய ஸ்கிரிப்ட் மாதிரியே வாழ்க்கை அரங்கேறலாம் அரேங்கேறாமல் போகலாம்.
    • நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு னு இருக்காம அரங்கேறும் சம்பவங்களுக்கு ஏற்றபடி ஸ்கிரிப்ட் மாத்தி எழுதணும்.
    • வாழ்க்கையில் நல்லவங்க கெட்டவங்க வருவாங்க. நல்லவர்களிடம் இருந்து நற்பண்புகளை கற்று அதை பின்பற்ற ஸ்கிரிப்ட் ல குறித்து கொள்ளலாம். கெட்டவர்களிடம் இருந்து எப்படி நடந்து கொள்ள கூடாது என்ற குறிப்பை குறித்து கொள்ளலாம். கெட்டவர்கள் அளவிற்கு இறங்கி/தாழ்ந்து போக கூடாது.
    • ஸ்கிரிப்ட் ல கடைசி பக்கத்தை கடவுள் தான் கிறுக்குவார். கடைசி தருணத்தில் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது பெருமிதமாக நினைத்து கண்மூடனும். நானா இப்படி செஞ்சேன் னு ஒரு துளி துக்கம் கூட தொண்டையை அடைக்க கூடாது.
    நல்ல விதமாக நினைப்போம். நேர்மையாக நியாயமாக சந்தோசமாக ரசனையாக ஆரோக்கியமாக வாழ ஸ்கிரிப்ட் எழுத்துவோமாக!!

    வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாக
    ஆசை இருந்தால் நீந்தி வா
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ரொமான்டிக் மெலடி போட்டாச்சு. தத்துவம் கிறுக்கியாச்சு. ப்ராக்டிகலா கொஞ்சம் உருப்படியா எழுதவா? காலம் முழுதும் கடைசி வரைக்கும் வாழ்வதற்கு பணம் வேண்டாமா? இந்த வருட என்னோட தீம்: Stockaholic.

    உபயோகமா இருக்கட்டுமே என்பதற்கு மட்டுமே இதை எழுதுகிறேன். யாரவது ஒருவர் நான் சொல்வதை பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற முயற்சி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தான். நான் எழுதியதில் சந்தேகம் இருந்தால் என்னிடம் இங்கயே கேட்கலாம்.

    பங்கு சந்தையில் நம்மை போல சாதாரண மக்களால் சுய முயற்சியால் $1,000,000 சம்பாதிக்க முடியுமா? முடியும் என்று முதலில் நம்புங்கள். உங்களது முதலீடு பணம் கால் பங்கு தான் ($250K). கால் பங்கு முதலீட்டிற்கு பிறகு பொறுமையாக பொறுத்து இருக்கும் காலம் 12 to 14 வருடங்கள்.

    இது எப்படி சாத்தியம்? The rule of 72 புரிந்து கொள்ளுங்கள். இது பணம் இரட்டிப்பு ஆக எத்தனை வருடங்கள் ஆகும் என்பதை சொல்லும் . Examples: வருடம் தோறும் முதலீட்டால் சராசரியாக 12% return என்றால் 72/12=6 ஆறு வருடங்கள். 10% return என்றால் 72/10=7.2 வருடங்கள்.

    Stock market return history வைத்து பார்த்தால் குறைந்த பட்சம் சராசரியாக வருடத்திற்கு 10% return எதிர்க்காலத்தில் கிடைக்கலாம். ஒரு வருடம் 10% க்கு அதிகமாக இருக்கலாம். மற்றொரு வருடம் 10% க்கு குறைவாக இருக்கலாம். இன்னொரு வருடம் மைனஸ் ல இருக்கலாம். 10 வருடங்கள் average return 10% இருக்க சாத்தியம் அதிகம்.

    $1M target க்கு வருவோம். 250K முதலீடு என்றால் 7.2 வருடத்தில் இரட்டிப்பு (500K) ஆகலாம். இதே பணம் (500K) அடுத்த 7.2 வருடத்தில் இரட்டிப்பு (1000K = 1M) ஆகலாம். மொத்த வருடங்கள் காத்திருப்பு: 14.4 பொறுமை கடலினும் பெரிது என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்? இன்னும் 7.2 வருடங்கள் பொறுத்து இருந்தால் 1M corpus 2M ஆகலாம். இது தான் compounding magic. Compound interest is the eighth wonder of the world. ~ Albert Einstein. இதற்கு தான் இளம் வயதிலேயே இன்வெஸ்ட் பண்ணனும் என்று சொல்றது. Inflation இருந்தாலும் இன்னும் 14 வருடத்தில் 1M க்கு மதிப்பே இல்லாமல் போய்டுமா என்னா? பணத்தின் மதிப்பு பணம் இல்லாது இருந்தால் தான் தெரியும். ஒண்ணுமே இல்லாம இருக்கறதுக்கு கொஞ்சம் மதிப்பு குறைந்த 1M எவ்ளோ பெரிசு?

    $1M தான் target னு இல்லை. நீங்களே target நிர்ணயித்து கொள்ளலாம். அதற்கு ஏற்றபடி invest பண்றது உங்கள் கையில். மொத்தமா (lump sum) முதலீடு போட வேண்டாம். Stock market la மழையோ வெயிலோ இடியோ புயலோ எது வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக invest பண்றத நிறுத்த வேண்டாம்.

    ரிஸ்க் இல்லையா என்று கேக்கறீங்களா? சொந்த அனுபவத்தை சொல்கிறேன். இந்த thread ஆரம்பித்த வருடத்திற்கு முன்பே தாயகத்தில் பங்கு சந்தையில் (stock+mutual funds) சில வருடங்கள் தொடர்ந்து பணம் போட்டு முதலீடு எட்டிவிட்டேன். முதலீடு போட்டாச்சு. கால் கிணறு கடந்து விட்டேன். பணம் அரை கிணற்றை கடந்தது விட்டது கொரோனாவிற்கு முன்னால். கொரோனா காலத்தில் அது கால் கிணறு ஆகி விட்டது. போட்ட முதலீடு தான் மிச்சம். முதலீட்டிற்கு இணையான லாபம் அத்தனையும் காலி. கொஞ்சம் கூட அசரவில்லை. பதட்டப்படவில்லை. இன்னும் எவ்ளோ தூரம் இறங்குதுனு பார்த்துடலாம் னு துணிந்து நின்றேன். இன்று அது முக்கால் கிணறை தொடும் வரைக்கும் வளர்ந்து விட்டது.

    பணம் பாதியா காணாம போனா கதி கலங்கும் நபர்கள் என்றால் ரிஸ்க் எடுக்கவே எடுக்காதீங்க.

    Tax: பணத்தை வெளியில் எடுக்கும்போது tax கட்டணும். இவ்ளோ சம்பாதிச்சா கொஞ்சம் tax கட்டினா குறைந்தா போய்டுவோம்?

    Target அடைந்தவுடன் மொத்தமா பணத்தை வெளிய எடுக்காதீங்க. 4% rule follow பண்ணலாம். $1M la வருடத்திற்கு 4% withdraw பண்ணலாம். மீதி இருக்கும் பணம் வளர்ந்திட்டே இருக்கும் (Average 10% growth). பண மரம். சாகும் வரைக்கும் பணம் பூத்து குலுங்கும். ஆனால் The Great Depression மாதிரி ஒரு எமன் வந்தால் எல்லாமே/எல்லோரும் காலி.

    Stock market பத்தி தெரியாது. Stocks பத்தி அலசல் தெரியாது. ரிசர்ச் பண்ண தெரியாது. எப்படி invest பண்றது? இதெல்லாம் தெரியணும் னு அவசியமில்லை. தாயகத்திலும் அந்நிய தேசத்திலும் பங்கு சந்தையில் நுழைந்து முதலீடு செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அடுத்த முறை எழுதுகிறேன்.

    குறிப்பு: இது ஒரு வகையான முதலீடு. எனக்கு தெரிந்ததை எழுதி விட்டேன். எல்லா பணத்தையும் பங்கு சந்தையில் மட்டுமே முதலீடு செய்யாதீங்க. Don't put all your eggs in one basket!!
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    முதலில் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    இந்த புது வருடத்தில் என்னை வசப்படுத்திய ஒரு செம ரொமான்டிக் பாடல் இன்று போஸ்ட் பண்றேன். இந்த பாடல் முதல் முதலாக கேட்டபோது அப்படியே மனசெல்லாம் மல்லிகைப்பூ வாசம். பத்து தடவை இதுவரைக்கும் பார்த்து பார்த்து ரசித்தும் கேட்டும் இருக்கிறேன். துளியும் கிக் குறையவில்லை. பாடல் பாடிய ஆணின் குரலில் செம கிக், பெண் குரலும் சூப்பர், காட்சி அமைப்பு சுண்டி இழுக்கும், டூத் பேஸ்ட் விளம்பரம் போல அழகாக பல்வரிசை காட்டி ஹீரோ மற்றும் ஹீரோயின் சிரிக்கும் அழகு மனசை அள்ளும், இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி மனசை கொள்ளை கொள்ளும், பாடல் வரிகள்/பல காட்சிகளில் வரும் குண்டுமல்லி கிறங்கடிக்கும், ஹீரோவின் கன்னத்து குழியில் ஒரு குண்டு மல்லியை வைத்து ஹீரோயின் அடைத்து இருப்பதை போல ஒரு காட்சி வைத்து இருக்கலாம் :wink::wink: (என்னோட ரொமான்டிக் கற்பனை ஓவர் டைம் வேலை பார்க்குது. இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.)

    காலத்துக்கும் இந்த பாடல் என்னோட most fav romantic playlist ல இருக்கும். எல்லாமே வசமா அமைந்து வசப்படுத்தும் ஒரு வசீகரமான பாடல்.

    YT - குண்டுமல்லி - Album - மனசெல்லாம் மல்லிகைப்பூ பந்தல் வாசம்
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அந்த பாடலின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்து இப்போ நான் சொல்ல வேண்டியதை சரியா சொல்றதுக்கு கஷ்டப்பட்டு முயற்சிக்கிறேன். பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

    Basket ல முடிச்சேன். Basket ல இப்போ தொடருகிறேன்.

    பல தரப்பட்ட sectors (Technology, Finance, Healthcare, Oil & Gas, Consumer Goods - இன்னும் லிஸ்ட் போகும்) ல இருந்து தேர்ந்து எடுத்த செழிப்பான நிறுவனங்களின் பங்குகள் (Technology – Apple, Microsoft; Finance – JPMC, Citibank; Healthcare – Pfizer, Johnson & Johnson; Oil & Gas – Exxon Mobile, Chevron; Consumer Goods - Procter & Gamble) ஒரு basket ல இருக்கு என்று வைத்து கொள்ளுங்கள். Basket முழுதும் diversified stocks. வருடத்திற்கு இரண்டு முறை இந்த basket ல இருந்து குறை இருந்தால் companies/stocks வெளியேற்றப்பட்டு அடுத்த தர வரிசையில் உள்ள companies/stocks உள்ளே வரும். கண்காணிப்பில் இருக்கும்.

    இந்த basket வாங்க யோசிப்பீங்களா? நீங்க பணம் போட்டு அப்படி ஒரு basket வாங்கினால் அதில் உள்ள எல்லா stocks உங்களுக்கு பங்கு உண்டு.

    இந்த basket க்கு பேரு - Index fund. இது ஒரு Passive investment strategy.
    India market எடுத்தால் Nifty 50. List of Nifty 50 stocks:
    https://www1.nseindia.com/products/content/equities/indices/nifty_50.htm

    இதை எப்படி வாங்குவது? உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து trading app download பண்ணிக்கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்க savings account இருக்கற bank ல கேட்டு அங்கேயே trading and demat account ஓபன் பண்ணிக்கொள்ளவும். (பத்து வருடங்களுக்கு முன்பு நான் bank ல தான் trading/demat account ஓபன் பண்ணேன்)

    SBI trading account இருந்தால் SBI Nifty Index 50 வாங்கலாம்.
    Performance:
    SBI Nifty Index Fund - NAV, Returns, Portfolio, Performance
    Portfolio holdings:
    SBI Nifty Index Fund - NAV, Returns, Portfolio, Performance

    SIP (systematic investment plan) முறையில் இன்வெஸ்ட் பண்ணலாம். மாதம் தோறும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ இன்வெஸ்ட் பண்ணலாம். Target எவ்ளோ னு முடிவு பண்ணிட்டு அதற்கு ஏற்றபடி monthly SIP முறையில் இன்வெஸ்ட் பண்ணலாம்.
    SIP calculator:
    SIP Calculator - Systematic Investment Plan Calculator Online

    அந்நிய தேசத்தில் இருப்பவர்கள் Vanguard website la நேரிடையாக trading account ஓபன் பண்ணலாம் யாருடைய உதவியும் இல்லாமல். உதவி தேவைப்பட்டால் customer service number kku call பண்ணவும். Vanguard app download செய்து stocks/index funds வாங்கலாம்.

    என்னோட index fund recommendation:
    Vanguard ETF Profile | Vanguard
    Benchmark: S&P 500 index
    List of 500+ stocks:
    Vanguard ETF Profile | Vanguard
    Performance:
    Vanguard ETF Profile | Vanguard

    Happy investing!!
     
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    வேதா, ரூம் போட்டு யோசிப்பீங்களா?
    வித்தியாசமான வினாக்கள் (சாதாரண
    வினாவையே பிரித்து கேட்டதால் )
     
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Golden words ma! I will try to keep it in my memory. Some times people and circumstances are dragging me. I am pulling it back with my sadhana(meditation and pranayama)
     
  9. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    சென்ற மாதம் நடந்த வட அமெரிக்க பேச்சு போட்டியில்
    வெற்றி பெற்ற என் இறுதி சுற்றுப் பேச்சு. 3 சுற்றுக்களை
    கடந்து கடுமையான இறுதி சுற்றுப் போட்டி. சன் டிவி
    ராஜா முக்கிய நடுவர். நீங்களும் கேட்டுப் பாருங்கள்!

    ஐம்பொறி ஆட்சிகொள் (Gnanabarathi Finals speech) - YouTube
     
    singapalsmile likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    முதலில் தங்களது வெற்றிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அவ்வையார் ஆத்தி சூடி, பாரதியார் புதிய ஆத்தி சூடி, வள்ளுவம் காட்டும் பொருள், Jainism - ஐம்பொறி அடக்கம் ஐந்து, ஆறாம் அறிவு ஆட்சி, அறிவினால் நெறிப்படுத்துதல் என்று உங்களது உரையை கேட்டதும் தமிழ் இலக்கிய சொற்பொழிவிற்கு வந்த உணர்வு எனக்கு. தங்களது பேச்சாற்றல் செந்தமிழில் அருவியாக பொங்கி வழிகிறது. அதுவும் இறுதியில் கேட்கப்பட்ட rapid fire கேள்விகளுக்கு (நெஞ்சை அள்ளும் வள்ளுவம், வள்ளுவர் எந்த சமயம் சார்ந்தவர்) உங்களது சுட சுட பதில்கள் அபாரம். :clap2::clap2:ஆழ்ந்த இலக்கிய அறிவையும் தமிழ் மொழி மீது இருக்கும் பற்றும் பேச்சில் வெளிப்படுகிறது. நிறைய பேச்சுப்போட்டியில் கலந்துக் கொண்டு இன்னும் அதிகமாக நீங்கள் மிளிர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களது உரையை கேட்டதும் எனக்கு தோன்றிய மூன்று விஷயங்கள்:

    1: 3 Wise monkeys vaithu proverbial saying, "See no evil, hear no evil, speak no evil". (கண் காது வாய் - மூன்று புலன்கள்; மூன்று நற்செயல்கள்)
    2: பகவத் கீதையில் அர்ஜுனர் சொன்ன வரிகள்:
    The mind is very restless, turbulent, strong and obstinate, O Krishna. It appears to me that it is more difficult to control than the wind.
    Reference link - Chapter 6 verse 34
    3: Romantic angle - என்ன என்பதை அடுத்த மாதம் சிறப்பு பதிவாக இங்கு பதிவிடப்படும். :wink::wink:
     
    Thyagarajan and vidhyalakshmid like this.

Share This Page