சுந்தர் சார்.. வீட்டுல தனியா இருக்கா? அதான் நீங்க இருக்கீங்களே? அதில்ல சார் உங்க வீட்டுல தனியா இருக்கா? யாரு தனியா இருக்கா? இல்லை சார் உங்க வீட்டுல தனியா இருக்கா? எங்க வீட்டுல யாரு தனியா இருக்கா? அது இல்லை சார் உங்க வீட்டுல தனியா.. தனியா ..இருக்கா? இல்லை சார் எங்க வீட்டுல யாரும் தனியா இல்லை. சார் உங்களுக்கு புரியல நான் கேட்டது உங்க வீட்டுல தனியா இருக்கா? ஓஹோ அதை சொல்றீகளா எங்க வீட்டுல சமூக விலகல கடைப்பிடிக்கனும்ன்னு எல்லோரும் தனி தனியா இருக்காங்க. சார் நான் அந்த தனியாவ கேட்கல.. சாப்பாட்டு தனியாவை கேட்டேன். ஓஹோ அதை சொல்றீங்களா அது இல்லை சார் உங்களுக்கு தெரியாது வீட்டம்மாவை கேளுங்க அவங்களுக்குத்தான் தெரியும் அவ மாடியில் தனியா இருக்கா அவங்க கிட்ட கேளுங்க.. கேட்டாலும் அவளுக்கு தெரியாது ஏன் சார்? இருபத்து ஐந்து நாளா நான் தான் சமைக்கறேன். அதனால சொல்றேன் தனியா இல்லை. jayasala42
தனியாக இருப்பவருக்கு ஹாஸ்ஸியமாக நன்கு சொன்னீர். இங்கும் Dhaniya தீர்த்து இன்று தேங்காய் சாதம் தான். நன்றி.