1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கு பிடித்த தமிழ் திரைப்பட பாடல்கள் நிறைய இருக்கின்றன .
    இது ஒரு பாடல்.


    thangaththilE oru kuRai irunthaalum tharaththil kuRaivadhuNNdO
    ungaL angaththilE oru kuRai irunthaalum anbu kuRaivadhuNNdO

    singaththin kaalgal paLudhu pattaalum seetram kuRaivadhuNNdO(2)
    sinthaiyum seyalum ontrupattaalE maatram kaaNbadhuNNdO
    maatram kaaNbadhuNNdO

    kaalgaLillaamal veNNmadhi vaanil thavazhnthu varavillaiyaa(2)
    iru kaigaLillaamal malargaLai aNNaiththu kaadhal tharavillaiyaa
    kaadhal tharavillaiyaa

    kaalam pagaiththaalum kaNavar paNi seidhu kaadhal uRavaaduvEn(2)
    uyar maanam perithendru vaazhum kulamaadhar vaazhvin suvai kooRuvEn
    vaazhvin suvai kooRuvEn
     
    Last edited: Sep 5, 2017
    jskls, kaniths and PavithraS like this.
  2. gkkumar

    gkkumar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Nice topic !!
    I like the lyrics of a song. Lyricist is Vairamuthu
    Film: En suvasa katre Song: Theendai mei theendai thaandai padi thandai
    I dont know who sang the first few lines in this song but they are awesome

    Kondrum unnaadhu kalaththinum padaadhu
    Nalla aan theembaal nilaththu ukkaangho
    Yenakkum aagaadhu yen aikkum udhavaadhu
    Pasalai uneeiyar vendum


    Theendaay mey theendaay
    Thaandaay padi thaandaay
     
    PavithraS likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இத்திரிக்கு உங்களை (வேதா @singapalsmile சார்பில்?!)வரவேற்கிறேன் :). நல்ல தமிழ்த்திரையிசைப் பாடல்களை,அதில் உங்கள் மனங்கவர்ந்த வரிகளை இவ்விடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் பதிவு தொடர்பாக சில செய்திகளைத் தமிழார்வத்தின் காரணமாகப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களென்றும் நம்புகிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளத் திரைப்பாடல் வைரமுத்துவின் அழகிய தமிழாயினும், "கன்றும் உண்ணாது கலத்திலும் படாது" என்று தொடங்கும் அதன் முன் வரிகள் 'குறுந்தொகை' (விக்கிபீடியா) என்னும் சங்ககால நூலில் 'வெள்ளிவீதியார்' என்றப் பெண்பால் கவிஞர் எழுதிய பாலைநிலப் பாடலாகும்.

    சங்க இலக்கியத்தின் ஐவகைத் திணைகளுள் பாலையாவது காதலரிருவரின் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமான செய்திகளைப் பாடுவதாகும்.அதாவது பொருள் ஈட்டும் நோக்கோடு தலைவன் தலைவியைப் பிரிந்து வேற்றூர் செல்லும்போது,அவனது பிரிவாற்றாமையால் 'பசலை' எனும் நோய் பீடித்தத் தலைவி பாடுவது போன்ற அமைப்பு. இந்தப்புலவர் இந்தப் பாடலுடன் சேர்த்து மொத்தம் 13 பாடல்கள் இயற்றியிருக்கிறார். அவை அகநானூறிலும், குறுந்தொகையிலும்,நற்றினையிலும் இடம்பெற்றிருக்கின்றன. விக்கிப்பீடியாவில் தெரிந்து கொள்ளலாம்.

    பசுவின் காம்பிலிருந்து வெளிவந்தப் பாலானது கன்றுக்கும் கிடைக்காமல் ,கீழே வேறொரு கலம் ,அதாவது பாத்திரத்திலும் பிடித்து வைக்காமல்,மண்ணிலே வீணாக உக்குவது போல்,அதாவது சிந்துவது போல்- தலைவனது பிரிவாற்றாமையில் பசலை கொண்டு வாடும் தலைவியின் அழகிய இளமையும்,மாந்தளிர் மேனியழகும்,சிற்றிடையும்(அல்குல்) அவளுக்கும் பயன் தராது,அவளது காதல் தலைவனுக்கும் பயன் தராது வீணாகிறதாம் ! நுணுக்கமான மெல்லுணர்வுகளை விரசமின்றி எழுதிய பெண் புலவர் இந்த வெள்ளிவீதியார் !
     
    Last edited: Sep 5, 2017
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,890
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி
     
    kaniths likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உங்களது வாழ்வு தொடக்கம் சுவாரசியமாக இருக்கிறது. விருப்பம் இருந்தால் தனிப்பட்ட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும். இந்த பாடல் பார்த்து எனக்கு உங்களிடம் கேட்க தோன்றிய கேள்விகள் :wink::wink::
    • நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும்போது உங்களுக்காக ஸ்டேஜில் பாட்டு பாடி அசத்திவிட்டு உங்களை காரில் அழைத்து சென்றாரா?
    • Greeting card குடுத்து propose பண்ணாரா?
    • உங்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று அசத்தினாரா ?
    • தாஜ் மஹால் gift குடுத்து propose பண்ணாரா?
     
    PavithraS and kaniths like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Lakshmi,
    இன்றும் இந்த வாரம் முழுவதும் உங்களுக்காக தாமரை பாடல் என்னோட சார்பில். :smile:
     
    jskls likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,890
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Wow செம செம நல்ல பாடல்கள் நிறைய வரும் என எதிர்பார்க்கிறேன்
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எட்டு வருடங்களாக ஒரு நற்செயல் புரிவது சாதாரணமான விஷயம் இல்லை. அதுவும் வெற்றி பெற்றுவிட்டு வெற்றியை தலைக்கேற்றாமல் தொடர்ந்து நற்செயலில் ஈடுபடுவது இன்னும் பெரிய விஷயம். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் உயரம் கண்டு மென்மேலும் உங்களது அமைப்பு வளரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    'கல்வி' துறையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். எந்த துறையில் நற்செயல் புரிந்தீர்கள் என்று விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.

    Start-up மேல் எனக்கு இருந்த/இருக்கும் மோகம் துளியும் குறையவில்லை. அதனால் நற்செயல் ஈடுபடும் அமைப்பை பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை. எதிர் காலத்தில் ஏதாவது ஒரு வழியில் தாயகத்திற்கு திருப்பி தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் எப்படி என்ன வென்று இன்னும் தீர்மானிக்கவில்லை.
     
    PavithraS and jskls like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithra,

    Wow!! உங்களது பாடல் விளக்கம் படித்து அசந்து போய் நிற்கிறேன். பாராட்ட வார்த்தை வரவில்லை என்பதை விட வார்த்தை தெரியவில்லை என்பதால் தலை வணங்குகிறேன்!:worship2: :worship2: இனிமேல் எப்போது அந்த பாடல் கேட்டாலும் உங்களது விளக்கம் தான் எனது நினைவிற்கு முதலில் வரும். பாடல் வரிகளை விட விளக்கத்தில் கிக் அதிகம்!! :wink::wink:

    உங்களை அளவு கடந்து இங்கு எழுத தூண்டி விட்டேனோ என்ற சின்ன வருத்தம் எனக்குள் எட்டி பார்க்கிறது. அதை சரி கட்ட கேட்டு கொள்கிறேன் - நீங்கள் எனக்கும் ஒரு ragging assignment தரலாம். எந்த ragging கேள்வியாக இருந்தாலும் ஏற்று கொண்டு பதில் அளிப்பேன்.

    எல்லோர் சார்பிலும் நம்ம thread la அடி எடுத்து வைப்போரை வரவேற்கலாம்.

    நீங்கள் எழுதியதை படித்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல..இப்போ நான் எங்க இருக்கிறேன் ? IL - IndusLadies or IL - IndraLokam? :wink::wink:
     
    jskls likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,890
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆம்! உங்கள் கணிப்பு சரியே. எங்கள் அமைப்பு பல தன்னார்வ தொண்டர்களின் உதவியோடு வார இறுதியில் குழந்தைகளுக்கு தமிழ் கற்று தருகிறது. நாங்கள் ஆரம்பித்தபோது இந்த வளர்ச்சியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
     
    PavithraS, singapalsmile and kaniths like this.

Share This Page