1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks dear Aarthi!!
     
  2. meepre

    meepre Gold IL'ite

    Messages:
    549
    Likes Received:
    974
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Sure dear will bare with you for getting such wonderful episodes. Was just so into your story and couldn't wait to know what happens next as you give no room for any guesses.
     
    Rajeni likes this.
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    22. மித்ர மாளிகை – கடந்தகாலம்!

    இராமசந்திரன் பேச பேச அங்கு அமர்ந்திருந்த மூவரும் அவர் விவரித்துக்கொண்டிருக்கும் கதையில் அதிர்ந்து மூழ்கியிருந்தனர். இராமசந்திரன் அவர்கள் அதிர்ச்சியை காணவில்லை. அவர் கண்கள் கடந்தகாலத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பது போல் கனவில் சஞ்சரித்தன. அவர் தொடர்ந்தார்,

    “அருளும் விஜயும் முதல்ல வாகன உதிரி பாகங்கள் இடைத்தரகு பண்றதுல தொட ங்கி அப்போதான் சொந்தமா மேனுஃபாக்சரிங் யூனிட் செட் பண்ணாங்க. தொழிலோட சேந்து அருளோட கனவுகளும் வளந்துச்சு. இன்னும் பல தொழில்ல இறங்கனும். ஒரு பிஸினஸ் சாம்ராஜ்ஜியத்தயே உருவாக்கனும்னு ஆசப்பட்டான். அதுக்கு எம்.பி.ஏ படிப்பு இன்னும் உதவும் அதோட அந்த பட்டமும் சேந்தா பிஸினஸ் சர்க்கிள்ல மரியாதை ஜாஸ்தியாகுனு படிக்கனும்னு முடிவு பண்ணான்.

    தொழில் சீரான நிலைல போயிட்டிருந்ததனால விஜய் பொறுப்புல விட்டுட்டு அருள் ஜார்கண்ட் போனான். ஆமா, அவனுக்கு XLRI ஜாம்ஷெட்பூர்ல சீட் கெடச்சுது. பெரிய மாற்றம் எதுவுமில்லாம இரெண்டு வருஷம் ஓட, அருள் படிப்ப முடிச்சுட்டு திரும்பி வந்தான்.”

    ஒரு நொடி நிறுத்தியவர் கண்களை இறுக மூடியவர் அவ்வாறே தொடர்ந்தார். மூடிய அவர் விழிகளுக்குள் அந்த நாள் திரைப்படமாய் ஓடியது.

    அன்று சனிக்கிழமை. ஏ.பி. படிப்பு முடிந்ததைக்கொண்டாட நண்பர்கள் நால்வரும் இரவு வெளியே செல்வதாக இருந்தது. இராமஸ்ந்திரனும் அசோக்குமாரும் ஏ.பி. அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.


    ஏ.பி.யும் விஜய்யும் வேலையை முடித்துக்கொண்டிருக்க ஏ.பி. கேட்டார், “விஜி.. அந்த லதா க்ரூப்ஸ் கேஸ் குடுத்தாங்களா?”


    “ஆமாடா.. என்னோட பீரோல தான் இருக்கு.. இரு எடுத்துட்டு வரேன்..” என்று எழுந்தார் விஜய்


    “புக்ல உடனே என்டர் பண்ணமாட்டியா டா..” என்றார் ஏ.பி. சற்று கண்டிப்புடன்


    பணமெடுக்க போன விஜய் திரும்பாமல் போகவே, ஏ.பி. விஜய்யின் அறை நோக்கி செல்ல இராமும் அசோக்கும் பின் தொடர்ந்தனர்.


    பீரோ கதவு திறந்திருக்க அதிலிருந்து மேஜைக்கு மாற்றப்பட்ட பணத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் விஜய்.


    “என்னடா..” என்றனர் மூவரும்.


    “பணம் குறையுதுடா” என்றார் விஜய் அப்பாவியாக.


    “என்னது?!” அதிர்ந்தது ஏ.பி.யின் குரல்


    “டேய்.. இருங்கடா இங்க தான் இருக்கும் உன் ரூமுக்கு யாரு வரப்போரா..” என்று சமாதானம் செய்ய முயன்ற அசோக் பீரோவை ஆராய, யோசனையில் ஆழ்ந்தனர் ஏ.பி.யும் இராமசந்திரனும்.


    “சாவி எங்கடா வச்சிருந்த?”


    “இந்த ட்ராவ்ல..”


    “ஏன் அதுக்கு பீரோலயே வைக்க வேண்டிதானே..” கோபம் ஏறிக்கொண்டிருந்தது ஏ.பி.க்கு


    “விட்றா ஆகறத பாப்போம்.... இப்போலாம் பாங்க்ல பெரிய ஆபிஸ்ல எல்லாம் வைக்கற மாதிரி கண்காணிப்பு காமிரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்றார் அசோக், ஏ.பி.யின் கோபம் மறுபடியும் விஜய்யின் மேல் பாயாமல் தடுக்க.


    “இருக்கு!” என்று ஏ.பி.யிடமிருந்து வந்த பதிலில் நாங்கள் மூவரும் அச்சரியம் அடந்தோம்.


    நான் கிளம்பறதுக்கும் முன்னாடியே ஃபிக்ஸ் பண்ணிட்டேன்” என்றார் ஏ.பி. பெருமையுடன்


    “ஏண்டா எங்கிட்ட சொல்லல?” விஜய் குறைபட


    “ஆமா... சும்மாவே நீ கேர்லெஸ்.. இதுல இதுவும் சொன்னா அவ்ளோதான்.. அதான் சொல்லல..” என்று சொன்னவர், “சரி சரி வாங்க நம்ப ப்ளான் கெட வேண்டாம்.. திங்கட்கிழமை செக்யூரிட்டி வரட்டும் அந்த வீடியோ டேப் ரெக்கார்ர கவனிப்போம்.. உன் ரூம்குள்ளயே நுழையற துணிச்சல் யாருக்கு வந்திருக்குனு பாத்திடுவோம்..” என்று கூற, நால்வரும் கிளம்பினர். அன்று இரவு தான் தாங்கள் நால்வரும் சேர்ந்து சந்தோஷமாக கழிக்கப்போகும் கடைசி நாள் என்று அறியாமல்.


    மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இராமசந்திரனின் தொலைப்பேசி அலறியது. அசோக் தான் அழைத்திருந்தார்.


    “சொல்லு டா.. “


    “டேய் ராம்... டென்னிஸ் விளையாடலாமா?”


    “என்னடா.. திடீர்ன்னு”


    “நேத்து அடிச்ச சரக்குல ஃப்ளாடாகி டேரக்டா லஞ்சுக்கு தான் எந்திரிச்சேன்.. அதான் விளையாண்டா கொஞ்சம் ப்ரிஸ்க்கா இருக்கும்னு.. யூ நோ அடிச்ச சரக்குக்கு கொஞ்சம் ஃபிஷிக்கல் ஆக்டிவிட்டி வேணும்டா”


    “சரிங்க டாக்டரே... இரு இவனுங்க இரெண்டுபேரும் வரானுங்களானு கேக்கறேன்”


    “அதெல்லாம் வேணாம்.. நான் அங்க வரேன் நம்ப இரெண்டு பேரும் போறவழியில அவனுங்கள அள்ளிப்போட்டுட்டு பொயிடலாம்..” என்று தன் வழக்கமான உற்சாகத்தோடு முடித்தார் அசோக்.


    முதலில் ஏ.பி. வீட்டில் நுழைந்தனர்.


    “நான் ரெடிப்பா.. ஆனா சண்டே கூட உங்க ஃபெரன்ட்ஸோட சுத்துறிங்கனு இவதான் சொல்லுவா.. ஸோ மேகலா சொன்னா நான் ரெடி..” என்று தன் மனைவியை இழுக்க,


    “மேகலா மேடம்... இந்த அடிமைய நாங்க ஒரு இரெண்டு மணி நேரம் ஜாமின் எடுத்துட்டுப்போலாமா?” என்று பவ்யமாய் அசோக் கேட்டார்.


    “அய்யோ அண்ணா... கைதிகளுக்கு தான் ஜாமினுண்டு அடிமைகளுக்கு கிடையாதே” என்று கைவிரித்து சிரித்த மேகலா, “கூட்டிட்டு வந்து பத்திரமா விட்டுறதா இருந்த போனாபோதுனு அனுப்பறேன்” என்றாள் அலட்டலாக. நால்வரும் சேர்ந்து சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.


    விஜய்யின் வீட்டை இவர்கள் வாகனம் நெருங்க, இவர்கள் கேட்டுக்குள் நுழைய திரும்பிய அதே வினாடி உள்ளிருந்து ஒரு பெண் வேகமாக வெளியே வந்து எதிர்பாராத இவர்கள் காரை கண்டு திடுக்கிட்டு நின்று பின் சட்டென தலைகுனிந்துகொண்டு சற்று தள்ளி நின்ற ஆட்டோவை நோக்கி விரைந்தாள்.


    இவை அனைத்தும் சில நொடிகளில் முடிந்துவிட சுதாரித்த மூவரில் முதலில் மீண்ட ஏ.பி. கேட்டார், “யாரு டா அது?”


    “தெரியலடா.. அவங்க சொந்தக்காரங்கயாராவதா இருக்குமோ?” யோசனையாய் இழுத்தார் அசோக்


    “இல்லயே.. நம்பல பாத்து ஷாக் ஆன மாதிரி இருந்துதே.. “ என்ற ராம் தொடர்ந்து, “ஆளபாத்தா பரிச்சயமான முகமா வேற இருக்கு” என்றார்.


    “இருங்கடா... உள்ள போயி அவனக்கேட்டுட்டா போகுது..” சாதாரணமாய் அசோக் முடிக்க கார் உள்ளே நுழைந்தது.


    தாங்கள் வந்த விஷயத்தை சொல்லிவிட்டு, “ஆமா கொஞ்சமுன்னாடி வந்துட்டுப்போடது யாருடா?” என்றார் ஏ.பி.


    “யாரு வந்தா? எங்க?” நிதானமாய் கேட்டார் விஜய்


    “நாங்க வர ஒரு இரேண்டு நிமிஷத்துக்கு முன்னாடி போனாளே அந்த பொண்ணு”


    “என்னது.. பொண்ணா..” என்று பெரிதாக சிரித்த விஜய், “இங்க யாருமே வரலடா” என்றார்


    “நாங்க மூணுப்பேரும் பாத்தோம்டா..”


    “நான் இங்கதான்டா ஹால்ல டி.வி. பாத்துட்டிருக்கேன்.. யாரும் வரலயே.. ஒரு வேள திருடியோ..” என்று பரபரப்பாய் எழ, அந்த பெண்ணின் அலங்காரமும் தோரணையும் திருடிப்போல இல்லாவிடிலும் மற்ற மூவரும் விஜய்யை பின் தொடர்ந்து வீட்டின் பின்புறத்தை அடைந்தனர்.


    பாரதி விட்டில் இல்லை. விக்ரம் பிறந்தபின் அவளது உடல் நிலை பின்தங்க.. விக்ரம் அவள் அம்மாவீட்டில் வளர்ந்தான். ஆக இவளும் பெரும்பாலும் அங்கே சென்றுவிடுவாள். தன் காதல் திருமணத்தால் பிரிந்திருந்த அம்மாவீடு, விக்ரமால் சேர்ந்துவிட அந்த சாக்கிட்டு அவள் அங்கு ஓடுவது அனைவரும் அறிந்ததே.


    வீட்டின் பின்புறம் பூட்டியது பூட்டியவாறு இருந்தது!


    அதற்க்குமேல் விளையாடும் எண்ணம் யாருக்கும் தோன்றாமல் போகவே “ஜாக்கிரதையா இருடா” என்ற அறிவுரையோடு அங்கிருந்து கிளம்பினர்.


    அன்று இரவு இரெண்டு நாட்களாக நடந்தவற்றையே மனம் சுற்ற கவனமின்றி தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டிருந்தார் இராமசந்திரன்.


    திரையிலேதோ விளம்பரப்படம் ஓடிக்கொண்டிருக்க சட்டென ஏதோ அவர் கவனத்தை ஈர்த்தது. தன் சிந்தையிலிருந்து மீண்டு திரையை கவனித்த அவர் அதிர்ந்துப்போனார். திரையில் குண்டு கன்னங்கள் கொண்ட ஒரு பெண் குழந்தையை கட்டிக்கொண்டு அவள் சிரித்தாள். அவர்கள் விஜய்யின் வீட்டு வாசலில் பார்த்த அந்த பெண். சட்டென அவள் முகம் பரிச்சயமாய் தோன்றியதன் காரணம் விளங்க அவசரமாய் ஏ.பி.யை அழைத்தார்!




    தன் அலுவலக அறையின் சன்னல் வழியே வெளியே தெரிந்த சாலையை வெறித்துக்கொண்டிருந்தார் ஏ.பி. முந்தைய நாளிரவு இராமசந்திரன் சொல்லிய விவரமே அவர் மனதை அரித்தது. நேற்று தான் கண்டது ஒரு சின்னத்திரை நடிகை எனில் அவள் விஜய் வீட்டிற்கு திருட வந்திருக்கவாய்ப்பில்லையே! பின் இவன் ஏன் அவள் வரவை தம்மிடம் மறைக்கவேண்டும்? சுத்தமாக தெரியாது என்றானே! அவன் பொய் சொல்ல மாட்டானே – என்று விடையறியா கேள்விகளால் அவர் மனம் குழம்ப சாலையில் விஜய்யின் கார் அலுவலகம் நோக்கி வருவது தெரிந்தது.


    அவனிடம் மறுபடியும் நேராக கேட்கலாமா வேண்டாமா என அவர் குழம்பிக்கொண்டிருக்க விஜய்யின் கார் அலுவலகத்தை அடையும் முன்னரே வேகம் குறைந்து சாலையோரம் நின்றது. புருவங்கள் நெரிய ஏ.பி. பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே விஜய்யின் காரிலிருந்து அந்த நடிகை இறங்கி அவனுக்கு கையாட்டிவிட்டு சாலையை கடந்து சென்றாள்! ஏ.பி. தான் நின்ற இடத்தில் வேறோடிவிட்டதுபோல் விறைத்து நின்றார்!


     
    Sweetynila, Deepu04 and stayblessed like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rajeni super narration .Lovely episode
     
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Dear Readers & Friends, I need your feedback here - Is the story pace ok? Or, is it dragging? Please let me know your honest feedback, as this would help me shape up the rest of the story! Waiting... (badhil sonna dhan adutha episode :p :D )
     
    meepre and stayblessed like this.
  6. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Madam
    Story going g good and sincerely waiting for next update as you give is twist at end of each episode making us to imagine a lot. Pls post next part soon dear.
     
    Rajeni likes this.
  7. priyaaanand

    priyaaanand New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hey Rajeni,
    I just finished off this story till the last episode. Story is really going very good. Was able to visualize the same. please continue. You are on the track and never ever think that you are dragging

    Thanks,
    Priyaa
     
    Rajeni likes this.
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Enna ippadi solliteenga.... Naan b'lore ke vanthuduven story continuity therinjuka solliten aparom....

    You are just doing a great work. Please do continue.....
     
    Rajeni likes this.
  9. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Haha.. Priya.. Thanks for the assurance.. Of course I will continue, just wanted to shape it based on the FBs.. Will post the next one tonight!

    And, of course, you're welcome to Bangalore :)
     
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot for your assuring FB, Priyaa! Welcome to IL and Welcome to Mithra Maligai! Glad that you read and liked the story!
     

Share This Page