1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Shri Rama Manthram

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 11, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உண்மை நிகழ்ச்சி
    பூரியில் ஜகன்னாத கவியின் இல்லம்.இரவு நேரம்.காஞ்சி மடத்தின் 59 வது பீடாதிபதியான போதேந்திரர் ஜகன்னாத கவியைக் காண வந்தார்.
    அப்போது அந்த வீட்டுக்கு நடுத்தர வயதுள்ள மனிதனும் பர்தா அணிந்த ஒரு பெண்ணும் வந்தனர்.ஜகன்னாத கவி விசாரித்ததில் அவன் கூறினான்.
    "நாங்கள் இருவரும் கணவன் ,மனைவி. ஹிந்து மதம்.யாத்திரையாக வந்தபோது ஒரு வெறிக் கும்பலிடம் சிக்கினோம்.அவர்கள் எங்களிடம் இருந்த பணம்,நகை யாவற்றையும் பிடுங்கிக் கொண்டு என்னையும் தாக்கிவிட்டு என் மனைவியை பலாத்காரமாக இழுத்துச் சென்று விட்டார்கள்.மறு நாள் என் மனைவி அவர்களை ஏமாற்றிவிட்டு இந்த மாற்று உடையுடன் ஓடி வந்து விட்டாள்.
    நான் இவளை ஏற்றுக் கொள்ளலாமா?ஏற்றுக் கொண்டால் ஆச்சாரமான என் குடும்பத்தினரும் ஊர் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஏற்றுக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக என் மனைவி கூறுகிறாள். நான் என்ன செய்யட்டும்?
    ஜகன்னாத கவி கூறினார்:தூய்மையான உள்ளத்தோடு உங்கள் மனையை மூன்று முறை 'ராம் ராம் 'என்ற ஸ்ரீராம மந்திரத்தை சொல்லச் சொல்லுங்கள்.அதை விடப் புனிதமானது வேறு எதுவும் இல்லை என்றார்.
    அந்த மனிதனுக்கு ஐயம் தீரவில்லை.அவர் மறுபடி போதேந்திரரிடம் கேட்டான் :"ராம நாமம் சொன்னால் பாவம் அகலுமா? ஜனங்கள் ஏற்றுக் கொள்வார்களா?'
    போதேந்திரர் சொன்னார்: சீதையையே சந்தேஹப்பட்டது இவ்வுலகம்.உன் பயம் நியாயமானதுதான். ராம நாம மகிமையை ஊரார் முன் நாளை நிரூபித்துக் காட்டுவோம் "
    நெற்றியில் பொட்டும் இன்றி மங்கள நாணும் இன்றி உள்ள நீ இந்த கருப்பு நிற பர்தாவுடன் ராம மந்திரத்தை ஜபித்து நாராயண தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து உன் பரிசுத்தத்தை நிரூபிப்பாய்"என்று திருவாய் மலர்ந்து அருளினார் சுவாமிகள்.
    இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது.
    மறுநாள் ஊர் மக்கள் நதிக் கரையில் திரண்டனர்.அந்தப் பெண் பூ பொட்டு ஏதும் இல்லாமல் கருப்பு அங்கியுடன், போதேந்திரரையும் தன கணவனையும் நமஸ்கரித்து ராமரை தியானித்து 'ராம் ராம் ' என்று உரக்கக் கூறித் தண்ணீரில் மூழ்கினாள்.எல்லோரும் அதிசயிக்க மங்கள அணிகளுடன் ,மங்கள ஆடையுடன் ஹிந்துப் பெண்ணாக எழுந்தாள். மக்கள் ஆரவாரம் செய்தனர்.அந்தப் பெண்ணும் அவள் கணவனும் போதேந்திரரின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.அன்று சுவாமிகள் அந்தப் பெண்ணை உணவு தயாரிக்கச்சொல்லி பிக்ஷையை ஏற்றுக் கொண்டார்.
    "நன்மையையும் செல்வமும்
    நாளும் நல்குமே
    திண்மையும் பாவமும்
    சிதைந்து தேயுமே
    சென்மமும் மரணமும்
    இன்றித் தீருமே
    இம்மையே ராம என்று
    இரண்டு எழுத்தினால் '
    கம்பர்

    Jayasala 42
     
    sindmani, tljsk and vaidehi71 like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    மாமி,

    தங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    வைதேஹி
     
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அருமையான பகிர்வு. ராம நாமத்திற்கு ஈடு இணை எது. எனக்கு இந்த பதிவை படிக்கும் பொழுது போன வருடம் நான் பார்த்த மேடை நாடகம் என் ஞாபகத்திற்கு வருகிறது. திருமதி பாம்பே ஞானம் அவர்களின் ''போதேந்திராள் // டிராமா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓர் சபாவில் பார்க்க நேர்ந்தது. இந்த பதிவின் சீன் மிகவும் தத்ரூபமாக இருக்கும். பார்த்து மெய் சிலிர்த்தேன் .. இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை அந்த டிராமா
    ராம் ராம் ராம்
    லோகா சமஸ்தா சுகினோ பவந்து
    நன்றி :clap2:
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    nice info, thanks for sharing
     
  5. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    ராமா என்ற இரண்டெழுத்து மந்திரம் சொல்வோருக்கு எல்லாம் நலமே.

    சரவண குமார்
     

Share This Page