1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உறவைத் தேடும் இதயம்

Discussion in 'Stories in Regional Languages' started by pinky21, Sep 1, 2015.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    pinky அருமையான ஆரம்பம் .கதை நடப்பது கொங்குசீமை .ஆனால் ஏலே என்ற சொல் எங்கள் திருநெல்வேலியில் பேசப்படும் சொல்வழக்கு .
     
    1 person likes this.
  2. minjagan

    minjagan Gold IL'ite

    Messages:
    242
    Likes Received:
    392
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Amma,

    Avanga cbela settle ana tirunelveli karangala irukalaamm..
    ithu ennoda chumma guess...
    @Pinky,

    Superb start... athuvum unga munnurai romba pramatham....
     
    2 people like this.
  3. ammusatheesh

    ammusatheesh Gold IL'ite

    Messages:
    663
    Likes Received:
    410
    Trophy Points:
    138
    Gender:
    Female
    NIce start pinky
     
    1 person likes this.
  4. naliniravi

    naliniravi Gold IL'ite

    Messages:
    990
    Likes Received:
    492
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Hi @pinky21

    :wowanother story. Super... awaiting for each episode.
     
    1 person likes this.
  5. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Nice start............... Waiting for the next one.......
     
    1 person likes this.
  6. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @KRamyaSaravanan - thanks ma.. keep reading
     
  7. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @periamma and @minjagan - thanks ma..

    neenga mention panathuk approm than ஏலேvaiye nan note pannen. suthamana kongu madalak kaaranga than namma hero full familiyume..

    en thirunelveli friends kooda pesura slanga eluthaliyum vantuvitathau pola.. eni entha meri confusions varamal paruthuk kolla unga feedback romba useful.. thanks for ur notice and query. will ensure i give more importance to the dialect too. thanks.. keep reading
     
  8. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
  9. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    தேடல் – 2
    பழனிச்சாமி ஐயா உள்ளே சென்ற உடனே நம் மண்ணின் மனம் மாறாத பெரியம்மா தேவியிடம் வந்து, எப்படி தாயி உன் மாமியார் உன்னை ஊருக்கு வர விட்டார். உன் அண்ணன் உங்க மாமியார் கிட்டப் பேசி, கொஞ்சம் வருஷம் முன்னால் அவன் மனைவி பண்ணத் தப்புக்கு மன்னிப்பு கேட்டுவிட்டானா என்ன? என்று பெரியம்மா கேட்டதை அடுத்து, மூன்று வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளைப் பற்றி தேவி, லக்ஷ்மி பாட்டி மற்றும் பெரியம்மா மூவரும் நினைத்துப் பார்க்கத் துவங்கினர்.
    அவர்கள் தேவி தன் சொந்த ஊருக்கு அனுப்பப்படாமல் இருந்ததற்கு காரணமான இருந்த அந்த கருப்பு நாளைப் பற்றின பழைய நினைவுகளில் மூழ்கி இருக்கும் சமயத்தில் நாம் அப்படியே கொஞ்சம் பழனிப் பக்கம் எட்டிப் பார்த்து விட்டு வருவோம்.
    மாவில் பினைந்து செய்தது போல அழகா பொன் முலாம் பூசியது போல இருந்த மூன்று வயதுப் பெண் குழந்தையைத் துரத்திக் கொண்டு ஓடினான் அவளை விட ஒன்றரை வயதான அவள் அண்ணன் சக்திவேல். நகைக் கடை விளம்பரத்திற்கு வருவது போல நெத்திச்சுட்டி, வங்கி, அந்த பிஞ்சுக்குழந்தைக்கு அளவிலான ஒட்டியாணம், காசுமாலை, காலில் கொலுசு, கைகள் நிறைய வளையல் என்று அழகாக இருந்த அந்த அழகுக் குட்டி தேவதை தன் அரக்கு நிறப் பாவடையை கையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினால்.
    அண்ணனிடம் இருந்து தப்பிப்பதற்காகப் பழனிக் கோவில் பிரகாரத்தையே சிட்டுப் போல வேகமாகச் சுற்றிக் கொண்டு ஓடிய அந்த குட்டித் தேவதை எதிரில் வந்த அவள் தாய்மாமாவிடம் மாட்டிக் கொண்டால்.
    அவள் மீண்டும் தப்பிக்காமல் இருக்க அவள் மாமன் அவளைத் தூக்கி கொண்டு வந்தார். மாமா பவித்ரா குட்டி பாவம் ப்ளீஸ் என்னை விட்டுவிடுங்க. என் தலைல இருந்த மூடி எல்லாம் முருகனுக்கு கொடுத்துட்டேன்ல நான் பாவம் என்னை விட்டுடுங்க. எனக்கு தோடு எல்லாம் வேண்டாமே ப்ளீஸ். நான் உங்களுக்கு என்னோட விளையாட்டு தலையாட்டி பொம்மையைத் தரேன். அப்புறம் அப்பா எனக்கு ஒன் மாசத்துக்கு வாங்கிதர ஐஸ்கிரீம் எல்லாம் உங்களுக்கு தரேன். எனக்கு தோடு வேண்டாம் என்று தன் மாமனிடம் பேரம் பேசிக் கொண்டு வந்தால் அந்தக் குட்டிச் சிட்டு.
    என்னோட பவித்ரா குட்டிம்மாவுக்குகாக மாமா ஜிமிக்கி எல்லாம் வாங்கி கொண்டு வந்து இருக்கேன் டா. எவ்ளோ நகை போட்டு இருக்க என் குட்டிம்மா ஜிமிக்கி போட்ட ரொம்ப அழகா இருப்பேங்க. நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஜிமிக்கியை தொட்டு நீ விளையாடியதற்கு அவுங்க நம்ம பவித்ரா குட்டியை திட்டுனாங்கள. இப்போ நம்ம பவித்ரா குட்டியே ஜிமிக்கி போட்டுகிட்டா யாரும் என் அக்கா மகளை திட்ட மாட்டங்க டா.,
    நீங்க சமத்தா மாமா மடில உட்கார்ந்துக் கொண்டு மிட்டாய் சாப்பிடுவீங்களாம். அங்க இருந்த அந்த தாத்தா உங்களுக்கு வலிக்காம ஜிமிக்கி போட்டு விடுவாங்களாம். சரியா ராசாத்தி என்று கூறியதைக் கேட்ட பவித்ரா...
    மாமா நான் பவித்ரா செந்தில். ராசாத்தி இல்லை.. என்னை அப்படிக் கூப்பிடக் கூடாது என்று தன் மாமனை அதட்டியது அந்தச் சின்ன சிட்டு. மிட்டாய், ஐஸ்கிரீம் என்று என்ன ஆசை காமித்தும் ஆசாரி காது குத்த விடாமல் திமிறிக் கொண்டு இருந்த பவித்ரா அவள் தந்தை செந்தில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு என் பவித்ரா குட்டிம்மா என் வீட்டு தேவதையாம். அப்பா சொன்ன கதைல தேவதை எல்லாம் எப்படி அழகா தோடு போட்டுகிட்டு வருவாங்க. இப்போ பவித்ரா குட்டி அவள் மாமா மடில சமத்தா உட்கார்ந்து காது குத்தி ஜிமிக்கி போட்டுகுவாங்களாம். இல்லேன்னா நம்ம வீட்டுக்கு பக்கதுல இருக்கவுங்க எல்லாம் உங்க பொண்ணு தேவதைன்னு என்கிட்ட பொய் சொன்னீங்களா. அவள் காதுல ஜிமிக்கி கூட இல்லை பாருங்க. நீங்க ஒரு பொய் சொல்றவுங்கன்னு அப்பாவை தப்பு சொல்லுவாங்க என்று தன் தந்தை கூறியதைக் கேட்ட அந்த அழகு மகள், காது குத்தும் ஆசாரியைப் பார்த்து,
    தாத்தா பவித்ராக்கு வலிக்காம ஜிமிக்கி மாட்டிவிடுங்க. பவித்ரா அப்பாவை யாரும் பொய் சொன்னன்னு சொல்லக் கூடாது என்று கூறி தன் மாமன் மடியில் அமர்ந்தால். அதைக் கண்ட பவித்ராவின் தாய் சுபா, அடிக்குட்டிக் கழுதை என் தம்பியும், என் மகனும் உன்னைத் எவ்ளோ நேரம் காது குத்த வர சொல்லி கெஞ்சினார்கள் நீ என்னடான்னா அதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் உன் அப்பா உன்னிடம் சொன்ன உடன் மடியில் உட்கார என்று செல்லமாக வைதவரைப் பார்த்து நாக்கைத் துருத்தி அழகு கமித்தால்.
    மற்றவர்கள் பேசுவது புரிய ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவளைத் திட்டினால் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் பவித்ரா அவள் தந்தையை யாராவது திட்டினால் அவளை சுபா மிரட்டும் பெரிய தடியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு சென்று மிரட்டுவாள். அதே பழக்கம் அவளுக்கு பெரிய பெண் ஆன பிறகும் தொடர்ந்து அவளுக்கு நன்மை பிறகுமா இல்லை கஷ்டத்தைக் கொடுக்குமா என்று பொறுத்துப் பாப்போம்.
    இப்பொழுது காது குத்தி பெரிய ஜிமிக்கியுடன் அழகு தேவதையாக தன் தந்தை மடியில் அமர்ந்து, அப்பா பவித்ரா இப்போ ஜிமிக்கி குத்திகிட்டா. இப்போ பவித்ரா அப்பாவை யாரும் பொய் சொல்ல மட்டாங்க தானே. சொன்ன பவித்ரா அடிச்சு ஒதைச்சுடுவா என்று கண்ணை உருட்டி மிரட்டினால்.
     
    2 people like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    pinky Tirunelveli slang paarthathil santhosham .Athanale appadiye continue pannunga.oru eluththaalarin karpanai valaththil idaiyooru vilavikka vaasagarkalukku urimai illai.athanaal neengal ungal paaniyil ungalukku enna dhonrutho athai eluthungal .meendum oru kudumpakaaviyam .
     
    1 person likes this.

Share This Page