1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"சலுகை".......by Krishnaamma !

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Jun 18, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒரு மாறுதலுக்காக இந்த கதையை அதன் நாயகியே சொல்வது போல எழுதி இருக்கிறேன் :)

    எங்கள் ஊரில் மாலையானால் ஒரு குறிப்பிட்ட தெருவில் காய்கறிகளும் பூ பழங்களும் விற்கப்படும். நாங்களும் தினசரி தேவைகளுக்காக நல்ல தோட்டத்து காய்கறிகளை அவை'பச் பச்' என்று இருக்கும்போதே வாங்கி உபயோகிப்பது வழக்கம்.

    அந்த மாதிரி கடைகளில் ஒரு கடை தான் சங்கரனுடையது. அவர் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் ஆத்தூரில் இருந்து தன் சொந்த தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் மற்றும் வேன்டைக்கை கொண்டு வருவார். கொஞ்சம் 'கெடுபிடி' யான ஆள், ஆனால் ரொம்ப நல்லவர். தன் கைகளின் மேல் ஒருவரையும் கைகளை வைக்க விடவே மாட்டார், தானே தான் எடுத்து போடுவார். "என் காய் எல்லாமே நல்லா தான் இருக்கும்"என்பது அவர் வாதம். மேலும், தானே முத்தல் காய்களை தனியாக பொறுக்கி வைத்துவிடுவார், வத்தல் போடவோ, குழம்பில் 'தான்' போடவோ நாங்கள் அதை கேட்டு வாங்குவோம்.

    அவர் கொண்டு வரும் பிஞ்சு கத்தரிக்காய் ரொம்ப அருமையாக இருக்கும். "ஆத்தூர் கத்தரிக்காய், நெய் கத்தரிக்காய் " என்று கூவி , கூவி விற்பார். நிஜமாகவே பச்சை கலரில் நீள நீளமாய் இருக்கும் கத்தரிக்காய்களை துளி உப்பு போட்டு வதக்கி, அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் அவர், இயற்கை உரம் போட்டு வளர்ப்பதால் சுவை கூடுதலாக இருப்பது போல எங்களுக்கு தோன்றும்.

    வெண்டைக்காயும் அப்படித்தான்; என்றாலும் தினமும் அவர் வரமாட்டார், குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே வருவார். அது காய்கறிகளின் வளர்ச்சியை பொறுத்து என்று நான் நினைத்துக் கொள்வேன் . அதனால் தினமும் மார்க்கெட் வரும்போது, அவர் குரல் கேட்கிறதா, அவர் வந்து விட்டாரா என்று பார்த்துவிட்டுத்தான் வேறு கடைகளை பார்ப்பது வழக்கம். மேலும் நான் அப்பாவுடன் மார்க்கெட் போகும் போதிலிருந்து, அவரிடம் வாங்குவதால், அவரை 'மாமா' என்று தன் அழைப்பேன்.

    தொடரும்...............
     
    Caide and uma1966 like this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இன்றும் அவர் குரல் கேட்டதால், முதல் அந்த திசை நோக்கி நடந்தேன், என்ன ஆச்சர்யம் ஒரு சின்ன பெண் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். 'அட, மாமாவும் மாறிவிட்டாரா ? இத்தனை வருடமாய் கடை பிடித்த கொள்கையை விட்டு விட்டாரா' என்று எண்ணிக்கொண்டே கடையை நெருங்கினேன். அவரிடம் நான் வாய் திறந்து கேட்படற்குள், ஒரு போன் வரவே, சைகையால் 1 கிலோ வெண்டைக்காய் போடும்படி சொன்னேன்.

    போன் பேசியபடியே நகர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டதால், மாமாவிடம் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. சரி பிறகு ஒருநாள் கேட்டால் போச்சு என்று விட்டுவிட்டேன். ஒரு 10 நாளாகிவிட்டது மீண்டும் இன்று தான் அவர் குரல் கேட்டது. நானும் எப்போதும் போல அவர் கடை நோக்கி நடந்தேன், இன்றும் அதே சிறுமி
    வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள். இன்று எப்படியும் கேட்டுவிடுவது, 'இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்' என்று , என்று நினைத்துக்கொண்டு கடையை நெருங்கினேன்.

    இன்னும் அவள் வெண்டைக்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள், நான் மாமாவிடம்,

    "என்ன மாமா, 10 நாளாய் ஆளைக்காணும்? நலம் தானே? " என்று விசாரித்தேன் முதலில்.

    அவரும் " கொஞ்சம் தள்ளலை மா" என்றார்.

    "ஒ...அதுதான் இப்போவெல்லாம், காய் மீது கை வைக்க ஒத்துக்க ரீங்கலா ? " என்று சிரித்தவாறே கேட்டேன்.

    அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார், அந்த சின்ன பெண், கொஞ்சம் பெருமையாய் ( கர்வமாய்? ) "நான் எடுத்தா இந்த மாமா எதுவும் சொல்ல மாட்டார்" என்றாள்.

    எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது............அப்போதும் மாமா வாய் திறந்தார் இல்லை. ' இவளுக்கு மட்டும் என்ன இந்த சலுகை' என்று எனக்கு மனதில் வண்டு குடைந்தது.

    அவள் போகும்வரை பொறுமை காத்த மாமா, " அந்த பொண்ணு சரியா முத்தல் எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போய்டும் கண்ணு, அது தான் அமைதியாய் இருந்தேன், அதுக்கும் சந்தோசம் எனக்கும் வேலை மிச்சம் பாரு, நீ சொல்லு எவ்வவளவு போடட்டும் ? " என்றாரே பார்க்கலாம்.

    சிரித்தவாறே காய் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். "சலுகை" என்பது சில சமையம் இப்படியும் கொடுக்கப்படும் என்று எனக்கு புரிந்தது.
     
    Barbiebala, Caide, uma1966 and 4 others like this.
  3. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    "சலுகை என்பது சில சமையம் இப்படியும் கொடுக்கப்படும்". Very Good.
     
  4. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Ippadiyum pakkanuma .. Nalla Kathaai .
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female

    ஆமாம்.............எஸ்...........:).............நன்றி !
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female

    மிக்க நன்றி !
     
  7. ahtinani

    ahtinani Silver IL'ite

    Messages:
    145
    Likes Received:
    70
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Nice short story
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you ma :)
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிறைய பேர் படித்து இருக்கீங்க, ஆனால் எதுவுமே கமெண்ட் போடலையே என்று எனக்கு வருத்தமாய் இருக்கு......பிடித்திருக்கு இல்லை என்று ஒரு வரி எழுதலாம் தானே ?.............பின்னூட்டம் ப்ளீஸ் :)


    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    1 person likes this.
  10. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Ada da.... ethu theriyatha antha ponnu pavam..... As usual excellent story.
     

Share This Page