1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கன்யாகுமரி!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Nov 30, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உன் மூக்குத்தி ஒளிக்குத் தான் வெட்கித் தானோ
    ஆதவனும் முகம் சிவந்து போகின்றான் நிதமும்?
    பன்முறை முயன்றும் தொட முடியாததும் ஏனோ?
    எனும் ஏக்கத்துடன் மீண்டும் வருகுதோ அலையும்?

    பன்னெடுங் காலமாய் வழிகாட்டியாய் நின்றும்
    இன்னும் உன் கால் வலிக்கவில்லையோ தேவி?
    உன் அருள் துளியாலே இன்றும் என்றென்றும்
    எங்களனைவரையும் காத்து வரும் தாயே! போற்றி!

    ஈசனார் வருகைக்கு இன்னும் நீ நின்றனையோ?
    தாயுள்ளம் கொண்டவரும் எங்களுக்கு இரங்கி,
    உன்னை மணக்காது போனாலும், அம்பிகையே,
    தென்முனையில் உதித்தவளே! இது காறும் வழங்கி

    வரும் பெருமைகளைக் கடந்தவளே! எங்கள் உமையே!
    உன் எழிலுக்கோர் உவமையும் உண்டோ அம்மா?
    எப்போதும் போல் நீ அருளிடுவாய் தாயே!
    அது போதும்! வேறென்ன வேண்டும் அம்மா?
     
    3 people like this.
  2. abi445

    abi445 Silver IL'ite

    Messages:
    679
    Likes Received:
    83
    Trophy Points:
    85
    Gender:
    Female
    super rgs, after a long time i'm reading ur kavithai.................
     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Wow! That was too fast Abi445. Thanks a lot for your appreciation. -rgs
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    இமயத்தில் முதல் குமரியின் முன் வரை ,
    எல்லா தலத்திலும் இறைவியின் கரம்,
    பற்றி இணைந்திட்ட இறைவனார்
    பாராமுகம் கொண்ட காரணத்தால்.
    இன்றளவும் குமரியாய் குத்திட்டால் ,
    வடக்கை வாழ்வித்து,
    தெற்கை தேய்விக்கும் கலையை ,
    இறைவனாரும் பயின்றார் போலும்.
     
    3 people like this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Good question Deepa. Just felt writing this:
    அம்பிகை தனைச் சேர்வதை விடவும்
    அசுரனை அழித்திடல் தான் முதலென்றும்
    அதனால் தான் நன்மையும் வருமென்றும்
    அரனார் எண்ணம் கொண்டார் போலும்!

    அதன் விளைவென்ன என நாமறிவோம்!
    அன்னையின் புகழும் அதிகரித்தது!
    அவன் இடத்தில் அவள் இருப்பதை அறிவோம்!
    அப்புறம் அவளைப் பிரிப்பதாவது?
     
    1 person likes this.
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Very beautifully described Kanyakumari 's perumai...adhuvum andha mudhal 4 varigal manadhai kavarandhadhu, Rgs.! :)

    sriniketan
     
    1 person likes this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot Sriniketan, for your appreciation. -rgs
     
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நீலத் திரைக்கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அம்மன் பற்றிய அழகிய கவிதையை படித்து மகிழ்ந்தேன். இலக்கிய இனிமையும் ஆன்மீக அருஞ்சுவையும் இணைந்த இதயம் தொடும் கவிதை!

    கவி வாழ்க!

    கவிதைகள் வளர்க!
     
    1 person likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks so much for your appreciation, Suryakala. Very happy to receive it. -rgs
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Kannithaan Asuranai azhikkavendum endrirukka
    Umayaal easanai chervathai thadukka
    Indiran kozhiyaai koovi cheitha chathiyal
    Thudangiya thavamallavo mukkadaloram!!
     
    1 person likes this.

Share This Page