1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் மனம் அறிவாயோ?-8

Discussion in 'Stories in Regional Languages' started by devikamurugan, Jun 18, 2012.

  1. devikamurugan

    devikamurugan Silver IL'ite

    Messages:
    25
    Likes Received:
    61
    Trophy Points:
    58
    Gender:
    Female
    காலையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்தாள்.

    வெளியே தேவியின் அத்தை லீலா நின்று கொண்டிருந்தார்.

    தேவி, மணி ஆறு ஆச்சு போய் குளிச்சிட்டு வாம்மா.

    சரி அத்தை
    ராம் எழுந்திருச்சுட்டானா தேவி?

    இரவு அவள் ராமிடம் பேசியவுடன் அவன் வேகமாக வெளியே சென்றது தான் அவளுக்கு தெரியும்.
    லீலா திடிரென்று கேட்டவுடன் தேவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    அத்தை அவர் உள்ளே தூங்கிட்டு இருக்கார் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

    அவள் குளித்துவிட்டு பால்கனிக்கு வந்தாள். அங்கே ராம் சேரில் தூங்கி கொண்டிருந்தான்.

    அங்கே நிற்க விரும்பாமல் கிச்சனுக்கு வந்து லீலாவிற்கு ஹெல்ப் செய்து கொண்டிருந்தாள்.

    லீலா தேவியிடம் காபியை நீட்டி இந்தாம்மா ராமை எழுப்பி இந்த காப்பியை கொடு என்று அவள் கையில் திணித்தார்.


    எப்படியும் ராம் எழுந்திருப்பான் அவன் எதிரில் கப்பை வைத்திவிட்டு வந்துவிடலாம் என்று எண்ணி உள்ளே சென்றாள்.

    ஆனால் அவன் இன்னும் தூங்கி கொண்டிருந்தான்.
    சரி எழுப்பாமால் போய்விடலாம் என்றால் அத்தை என்ன ஏது என்று கேட்பார்கள்.எப்படி இவனை எழுப்புவது என்று யோசனையுடன் நின்று கொண்டிருந்தவளின் கண்களில் அருகில் இருந்த தண்ணீர் படவே மூடியை திறந்து அவன் தலையில் ஊற்ற தொடங்கினாள்.

    அவன் அலறிஅடித்துக் கொண்டு எழுந்தான்.
    எதிரில் இருந்தவளை பார்த்தவன் அவள் கைகளில் இருந்த கப்பை பார்த்தான்.

    வாய திறந்து கூப்பிட்டா உங்க சொத்து குறைஞ்சிடுமோ? என்று தேவியை நோக்கி கோபப் பார்வை பார்த்தான்.

    ஆனால் அவளோ எதுவும் தெரியாதது போல் காபியை வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

    என்னடா ராம் இப்படி தலையெல்லாம் ஈரமா இருக்கு?என்று வினாவினார் லீலா.

    அது ஒன்னும் இல்ல அத்தை கரண்ட் கட் ஆகியிருக்கும் என்றாள் தேவி வம்பாக.

    இல்லையே கிச்சன்ல கரண்ட் இருக்கே மாடியில மட்டும் எப்படி கரண்ட் போகும்?என்றார் லீலா எதுவும் அறியாமல்.

    ஆனால் ராமோ இருடி உன்னை என்ன பண்றேன் பாரு என்று கோபப் பார்வையை வீசினான்.

    ராம் காலை ஒன்பது மணிக்கு வேளைக்கு சென்றுவிட்டு இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பினான்.

    இரவு உணவின் போது தேவி அனைவருக்கும் பரிமாறினாள்.

    சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஐயோ அம்மா,தண்ணீ தண்ணீ.

    காரமா இருக்கு இன்னைக்கு யார் சமையல் செஞ்சா?என்று கத்தினான் ராம்.

    தண்ணீரை கொடுத்த லீலா ரசம் எப்படிடா காராமா இருக்கும்?

    அம்மா நீ வேணும்னா சாப்பிட்டு பாரு என்று தட்டை நீட்டினான்.

    அமாடா நாங்க எல்லோரும் அதே சாப்பாடு தானே சாப்பிடுரோம்.

    கல்யாணாம் ஆகிட்டோன அம்மா சமையல் அழுத்து போயிடுச்சா? என்று செல்ல கோபம் காட்டிவிட்டு உள்ளே சென்றார்.

    பக்கத்த்ல் நின்றிருந்த தேவியோ சிரிப்பை அடக்கமுடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

    அதை பார்த்த ராம் இதெல்லாம் உன்னோட வேளையா?

    இன்னும் எத்தனை நாளைக்குனு பார்க்கிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு சென்றான்.

    சென்றதோடு நில்லாமல் ஒரு மாதத்தில் செய்தும் காட்டினான்.
    அவன் செய்த செய்கையில் தேவியின் நிலைமை தான் பரிதாபத்திற்குரியதாய் ஆனது.

    அதை அறியாமல் அவளும் ராமிடம் வம்பை வளர்த்து வந்தாள். அன்றும் அதே போல் ராமிடம் வம்பு செய்வதற்காக தேவி காத்துக்கொண்டிருந்தாள்.

    வெளியே சென்றவளின் காதில் ராமும்,லீலாவும் பேசிக்கொண்டுருந்தது காதில் விழுந்தது. அதை கேட்டு சிலையாய் நின்றாள் தேவி.

    அவர்கள் வருவது தெரியவும் தேவி உள்ளே சென்றாள்.

    இரவு சாப்பிடும்போது லீலா,

    தேவி நீயும் உட்காருமா.
    இல்ல அத்தை பரவாயில்லை.நா அப்புறமா சாப்பிடுறேன்.

    லீலா விடாப்பிடியாய் கூறவும் தேவியும் சாப்பிட அமர்ந்தாள்.

    ராமின் பக்கத்தில் இடம் காலியாக இருந்தது.தேவியும் வேறு வழியில்லாமல் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

    பக்கத்தில் அமர்ந்தவளின் காதருகில் என்ன தேவி இன்னைக்கு உன்னோட பிலான் என்னச்சு?

    தேவி அவனை முறைக்கவும் சரி பராவாயில்லைவிடு.நீ நாளைக்கு ட்ரை பண்ணு.

    ஏற்கனவே எரிச்சலில் இருந்தவளை சீண்ட நினைத்து அவளை ஒட்டி அமர்ந்தான் ராம்.
    ஆனால் தேவியோ அத்தை எனக்கு போதும் என்று எழுந்து சென்றுவிட்டாள்.

    அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ராம் போ போ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓட போற?இன்னும் மூன்று நாள் தானே?என்று எண்ணினான்.
     
    2 people like this.
    Loading...

  2. yshnavi

    yshnavi Silver IL'ite

    Messages:
    159
    Likes Received:
    50
    Trophy Points:
    68
    Gender:
    Female
    The story is going with suspense :).... it can be a littel longer devika ...
     
  3. veenashankar15

    veenashankar15 Junior IL'ite

    Messages:
    45
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    nice Devika.. you have stopped at interesting place.. eagerly waiting to see what happens next
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi devika...
    devi silent nu ninachen...
    aana ram kitta nalla vambu panra... thalaila thanni oothradhu,sappadula kaaram sethuradhunu kalakra...
    ram um oru plan yosichurukran ah!!!!!!!!!!
    very intersting ma...
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    devi semma settai kaari pola... ram ena pana poran...???
     
  6. IndhuRamesh

    IndhuRamesh Platinum IL'ite

    Messages:
    1,624
    Likes Received:
    767
    Trophy Points:
    208
    Gender:
    Female
    ennanga ipdi yemathiteenga.. adutha episode ready a iruke nu summa iruken.. illana nerla vanthu kathai ketirupen..
     

Share This Page