1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நட்புடனுக்கு!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Oct 25, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள நட்புடனுக்கு,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)

    நட்பென்ற சொல்லுக்கு நானோ
    வரையறை வகுத்து வைத்திருந்தேன்
    அதற்கு எல்லைகள் என்பதே இல்லை
    என்று எனக்கு விளங்க வைத்தவர் நீங்கள்!

    பூக்கள் மட்டுமே பரிசாக கருதி
    அதை மற்றவர்களுக்கும் கொடுத்திருந்தேன்
    புன்னகை அப்பூக்களை விட சிறந்தது
    என கற்றுக்கொடுத்தவர் நீங்கள்!

    உங்களுக்காக ஒரு வாழ்த்து!
    எழுதும் வயதில்லை எனக்கு!

    எழுத நினைத்தும் முடியவில்லை;
    வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்
    நீங்கள்...என்றதற்கு பொருளில்லை!
    வார்த்தை கிடைக்கவில்லை
    என்பதே நிஜம்!:rotfl

    முழுமதி போல வளர்கவென்று
    உங்களை வாழ்த்த வழியில்லை
    நீங்கள் ஆல்ரெடி ஆறடி!
    போதும் இந்த வளர்ச்சி!

    குறையாது இருக்கவேண்டும்
    உங்கள் மகிழ்ச்சி!
    அதுவே என்றும் நான்
    வேண்டுவதும் விரும்புவதும்!

    (நட்ஸ்....உங்களுக்கு பத்து வரியில் கவிதை எழுதவும் பக்கம் பக்கமாய் எழுதவும் பல பேர் இங்குண்டு! ஆனாலும் முதல் வாழ்த்து என்னுடையதாய் இருக்க வேண்டும் என்பதனால் தான் குருட்டு தைரியத்தில் விருட்டென எழுதிவிட்டேன்! இதை படித்துவிட்டு நீங்கள் ஆனந்த கண்ணீர் சிந்த வேண்டாம்....ஆனந்த பவன் மைசூர்ப்பா மட்டும் வாங்கி கொடுங்கள் போதும்! :):) நோ...நோ....அப்படி நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள் என்பதற்காக நான் கவிதை எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளும் கடமையும் எனக்குண்டு! :coffee)
     
    Anu86, morni, pgraman and 2 others like this.
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உள்ளது உள்ளபடி,உள்ளத்தில் பட்டதை நல்லபடி
    உரைக்கும் அரிய உணர்வாளன் நீர்.

    பிழைகள் பெருகினாலும் பிரளயமே வந்தாலும்
    பிழை இல்லாமல் களை எடுக்கும் கணவான் நீர்.

    எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனைக்கும்
    எத்துணையும் அசராமல் கைகுலுக்கும் அஞ்சா நெஞ்சன் நீர்.

    மலங்க விழித்தாலும் கலங்க அடிக்கும் தமிழ்
    துலங்க வடிக்கும் கவிஞர் நீர்.

    தமிழாலே ஒன்றானோம்
    தமிழர்கள் என்றானோம்
    அந்தத் தமிழாலே வாழ்த்துகிறேன்
    நெடிதுயரும் புகலோடும்,நிலையான செல்வத்தோடும்
    நீங்காத நட்போடும்,நிறைவான அன்போடும்
    நூற்றாண்டு வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன் !!!!!!!

    நட்பை விசுவாசிக்கும் நண்பருக்கு
    நட்புலகம் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    :thumbsup
     
    3 people like this.
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நட்ஸ்........

    நட்புடன் வந்து நலம்பலத் தந்துடன்
    தட்டிக் கொடுத்திடு வீர்

    நல்ல கவிதை ப்ரியா...
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒன்றுமே இல்லாமல் கதை எழுதுபவள் நீ
    இன்று ஒரு கவிதை எழுதி இருக்கிறாய்.
    பண்புடன் நட்புக்கு
    பாங்குடன் ஒரு வாழ்த்து.
    உண்மையாய் அருமை.[​IMG]

    அதானே
    எங்க திங்குற பங்கு கேக்க இன்னும் வரலையேன்னு நெனச்சேன்
    வந்துட்டியே ..
    டாலடிக்குற உன் கடமை உணர்ச்சி படிக்க புல்லரிக்குது. [​IMG]
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஐயோ ப்ரியா நீ வேற யாரையோ சொல்றேன்னு நினைக்கிறேன்
    இல்லேன்னா உனக்கு ஏதோ ஆயிடிச்சு - தலைல அடி கிடி
    பட்டதா? இல்ல ரொம்ப படிச்சு பித்தம் தலைக்கு
    ஏறிடிச்சா?

    ஆனா மைசூர் பா வாங்கித் தர சொன்னத படிச்ச உடன
    புரிந்து விட்டது - நீ நல்லாத்தான் இருக்கேன்னு
    உனது வாழ்த்துகளுக்கு எனது அன்பு -
    அந்த அன்பு அதற்கு ஈடே அல்ல...
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உன்னுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் ப்ரியா .அதென்ன இடை செருகல் .உனக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக் பிடிக்காதா .நல்லா இருக்கு உனது கவிதை.தீபாவளி வாழ்த்துக்கள் ப்ரியா.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.இன்று போல் என்றும் நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து எங்களையும் ஆனந்தக்கடலில் மூழ்கடிக்கவும்.தீபாவளி வாழ்த்துக்கள்.
     
  8. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    சொல்லுவது சொல்லும் காலத்தில் சொலல் வேண்டும்
    காலம் தாழின் சொல்லாமை நன்று.

    தோஹா வின் ஆஹா வே
    குணவதி சித்ரா வின் இதய துடிப்பே
    யாழினி , எழிலின் பாச பறவையே
    il தமிழ் கவிதையின் இனிய தொகுப்பே
    சொல்லின் செல்வரே வாழ்க வளமுடன் !
     
  9. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    HAPPY BIRTHDAY NATPUDAN :thumbsup

    எவ்ளோ கஷ்டப்பட்டு நீ இதை சொன்னாலும் அவர் எப்படியும் நம்பமாட்டார் தேவா:rotfl
     
  10. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    நட்புடன் வெங்கட் சார்,

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... இன்று போல் என்றும், குன்றா புகழுடனும், நிறையும் மகிழ்வுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்..

    சரி உங்க பிறந்தநாள் பரிசா நான் ஒரு சிசர்ஸ் கதை சொல்லவா...

    அனு
     

Share This Page