1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கர்ணன் என் காதலன் : 39

Discussion in 'Stories in Regional Languages' started by veni_mohan75, Mar 17, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கர்ணன் என் காதலன் : 39

    பகுதி முப்பத்தி ஒன்பது : அஸ்திரங்கள் :

    வில் வித்தையின் தலை சிறந்த வீரர்கள் இருவரும் மோதப்போகின்றனர். அஸ்திரங்களின் ஆளுமை. அதை அறிய நமக்கு வேண்டும் அதை பற்றின புலமை, அதற்காய் இங்கே பகிர்கிறேன் விவரங்களை. அஸ்திரங்கள் என்பவை மிகவும் வலிமை வாய்ந்தவை. அனைவருக்கும் அவை கிட்டிவிடாது. முறையான பயிற்சியும், குருவின் துணையும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும்.

    பல அஸ்திரங்கள் இருந்தாலும், நான் அறிந்த அஸ்திரங்களைப் பற்றிய விவரங்களை (என் தந்தை சொன்னவையும், இணையத்தின் வழி நான் அறிந்தவையும்) இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.


    பிரம்மாஸ்திரம் : இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. அஸ்திரத்துக்கு அதிபதி பிரம்ம தேவன்.

    பிரம்மஸ்ரிஷா : இதுவும் பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கு வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.

    இந்திராஸ்திரம் : இந்திரனின் அம்சமானது. ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.

    வஜ்ராயுதம் : இதுவும் இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.

    பாசுபதாஸ்திரம் : சிவனிடம் இருந்து பெறப்பட வேண்டிய அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும், அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.

    ஆக்னேயாஸ்ச்திரம் : அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்

    வருணாஸ்திரம் : வருணனின் அஸ்திரம். எல்லைஇல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. பொதுவாக ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்

    வாய்வாஸ்திரம் : கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம். வாயுவின் அஸ்திரம்

    சூரியாஸ்திரம் : இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம். சூரியனின் அஸ்திரம்.

    நாகாஸ்திரம் : நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைத்தற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான/எதிரான அஸ்திரம் கிடையாது.

    நாகபாசானம் : விஷம் கொண்ட நாகங்கள், இலக்கை கட்டுண்டு கிடக்கச் செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.

    மோகினி அஸ்திரம் : விஷ்ணுவின் அஸ்திரம். எய்யப்படும் இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது

    சம்மோஹனம் : எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது

    பிரம்மோஹனம் : இதுவும் சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது

    நாராயனாஸ்திரம் : எண்ணற்ற அம்புகளையும், சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால், நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்

    வைஷ்ணவாஸ்திரம் : இதுவும் விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை, அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.

    பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல், வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.

    (இன்னும் ஒரு அஸ்திரம் இருக்கிறது, ஆனால் பெயர் நினைவில் இல்லை. அந்த அஸ்திரம் எய்யப்படும் போது, எதிரிகள் அவர்களுக்குள்ளாகவே போரிடும்படி ஒரு மாயை உருவாகும். இந்த அஸ்திரத்தின் பெயர் விவரம் அறிந்தவர்கள் அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி)


    இனி யுத்த பூமிக்கு...... அடுத்த பகுதி இறுதிப் பகுதி. சற்றே நீளம் அதிகம். எனவே இந்தப் பகுதி வெகு சுருக்கமாய்.
     
    Last edited: Mar 17, 2011
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ??????????????
    வஸ்திரங்கள் போல் இத்தனை அஸ்திரங்கள் இருப்பதே நீங்க சொல்லித்தான் தெரிகிறது
    இதில் தெரியா அந்த ஒன்றைக் கேட்டால் எப்படி....
    வந்த வரைக்கும்(தந்த வரைக்கும் )லாபம்னு படிச்சு பதில் கொடுக்குறேன்
    நன்றி
     
    Last edited: Mar 17, 2011
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அஸ்திரங்களை பற்றி அஸ்திரமாக வந்தது அக்கா உன் வரிகள்.
    இத்தனை அஸ்த்திரங்கள் உள்ளதா..அடேயப்பா

    இறுதி பகுதி..கர்ணா உன் இழப்பா
    காத்திருக்கிறோம் உனது வான் தொட்ட வீரத்தினை, முடிவினை அறிய
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Veni,engamma pona nee....

    nan therinjukanunu nenacha vivarangal indha partla neraya irundhuchu...romba thanks veni....
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி அஸ்திரங்களின் அணிவகுப்பு அருமை.

    இதென்ன சின்னபுள்ளத் தனமா இருக்கு?

    அந்த அஸ்திரம் தான் - பொண்டாட்டி அஸ்திரம். :)

    அந்த அஸ்திரத்த பயன்படுத்தி தான நிறைய கணவர்கள்,
    அவர்களின் மனைவியால் நித்தம் நித்தம் தாக்கப் படுகிறார்கள். :)
     

Share This Page