1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் கண்ணில் நீர் வ..ழி...ந்..தா..ல் ........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 13, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பதார்த்தம் வெட்ட பட்டை தீட்டிய
    பட்டாக் கத்தி என் பட்டு விரலைப் பதம் பார்க்க
    பட்டென ரத்தம் பார்த்து பதறி நான் கத்த
    அடித்துப் பிடித்து அலறிப்புடைத்து அவர் ஓடிவர
    ரத்தம் சொட்ட நின்ற என் கோலம் காண
    “கவிதை கற்பனை அப்புறம் : காரியத்தில் கவனம் தேவை இக்கணம் ” சிவபுராணமாய்
    முகம் சிவக்க கோபத்தில் அவர் வார்த்தைகள் உஷ்ணிக்க
    “இதோ வந்திட்டேன்” என என் விழி வெள்ளம் கிலுக்கென உடைபட
    முதல் துளி முகர்ந்தவுடன் முற்றிலும் குளிர்நிலவாய் அவர் மாற
    முதலுதவியாய்
    பதமாய் என் கரம் எடுத்து பந்தக்கால் என் விரலில் போட….
    இத்தனையும் என் விழி பார்த்தபடியே!!!!


    திட்டுக்களில் மருகுவதா?
    தீண்டலின் சுகத்தில் தியங்குவதா?
    நூலிழை நெருக்கத்தில் நெக்குருகுவதா?
    கிடுக்கிப்பிடி இமைவலையில் கிறுகிறுப்பதா?
    பூவாணமாய் பொங்கி வரும் பாசத்தில் பரபரப்பதா?
    திண்டாடும் தியானத்தில் நானும்
    அவர் விழி நோக்கியபடி!!!!!!


    வரட்டுமா?வேண்டாமா?
    மறைவிடத்தில் இருந்து
    எட்ட நின்று
    எட்டிப் பார்த்தது
    திறந்திருந்த சமுத்திரத்தில்
    ஒரு வெண் முத்து….
    அவர் விழியில்
    கண்ணீர்……..
    என் விரல்வழி(வலி) செந்நிறம் பார்த்து உதிரம் சிந்தும் அவர் விழி(வலி)
    உணர்ந்த என் உயிர் நரம்புகள்
    அறுந்த என் ரத்த நாளங்கள் …..


    கிண்ணரக் கரங்களில் என் மருண்ட முகம் எடுத்து
    “வலிக்கிறதா” என் வாஞ்சையாய் வினவ
    இல்லாத வலியை (ஆ)ம்ம்ம் என்று அழுந்தச் சொல்லி ஆமோதிக்க
    சகாயம் செய்ய ஆகாசமாய் வந்து விழுந்து
    எனை துவம்சம் செய்தது
    கம்சனின் காதல் ஆயுதம்…முத்தம் !!!!!


    என் மஞ்சள் மதிவதனம்
    சிவந்தது செம்மண் மேடாய்
    பித்தம் தலைக்கேற
    சித்தமானேன் அடுத்த (பொய்)புரட்டலுக்கு.
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் கன்னத்தில் முத்தம் மும்மாரி பெய்யுமடா …….
     
    Loading...

  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Idhu ennama indraya kaalai incidenta...........thathroobama ezhudhi irukkenga ........
    Saroj, I am imagining the scene while reading the kavithai pa........!!!
     
    Last edited: Jul 13, 2010
  3. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Wow! excellent!!

    Tried couple of comments to post, but nothing is equal to express (i mean, i dont know to put my thoughts into words... ) my pleasure on reading it. So left it with these two words.
     
    Last edited: Jul 13, 2010
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nalla technique solli kuduthurukeenga saroj..... good poem...:)
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பதார்த்தம் சாப்பிட யதார்த்தமாய் இல்லாத காரணத்தால்,
    கத்தி, கை விரலை பதம் பார்க்க, மேடை ஏறியது காதல் நாடகம்.

    முத்தத்திற்கு அப்பால் எதுவும் நடக்கவில்லை என்பதை நம்பிவிட்டேன்.
    உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் எடிட்டரின் திறமையும் அருமை.

    இலை மறை காயாக - காதல் மும்மாரி - எம்மாடி - ஆத்தாடி......

    பட்டாக் கத்தி ஏன் எடுத்தீர்கள்?
    பட்டால் தான் கத்தி என நினைத்துவிட்டது கத்தி.
    படாக் கத்தி எடுக்க புத்திக்கு எட்டியதா?

    சரோஜ் பொய்யும் பிரட்டலும், திகட்டல் இல்லை - அடிக்கடி பதார்த்தம் செய்யுங்கள்.
    உங்களுக்கு கிடைப்பது கிடைக்கும், எங்களுக்கு அருமையான கவிதை கிடைக்கும்.
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    I second sudha madam... could not help but imagine... so beautifully written.... oru kaadhal sannivesham arangetram....
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Lovely poem abt a sweet love...
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    I go with Sandhya & Sudha.. Enneleyum imagine panna mudiyudhu.. Super romance..

    :thumbsup
    enaku ippdiyum pannalaamnu sollikuduthathukku en :bowdown.. idhu theriyama ivlo naal avar valikudha nu ketapo loosukutty maathri che che illanga nu sollitene.. ivlo romantic momentsa miss pannitene.. better late than never thaan.. :rotfl
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    wow...enna oru romantic scene.....ennalayum imagine panna mudiyuthu....
    inime intha paata ketta enakku unga story thaan gyabagam varum ....

    super saroj....and also nalla idea koduthu irukkeenga....:thumbsup
     
  10. sujanags

    sujanags Gold IL'ite

    Messages:
    1,205
    Likes Received:
    80
    Trophy Points:
    105
    Gender:
    Female
    ellarum solradha pola dhaan naanum imagine pannen....ethanai peroda imaginationkku neenga kaaranam aayiteenga...

    chinna pasanga ellam thoongina madhiri dhaan inikku.
     

Share This Page