1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பறவை வேடமிட்ட புல்லுருவி

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jun 6, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    1.
    கடற்கரை மணலில்
    சிப்பிகள் பொறுக்கும் சிறுமியாக
    தோற்றமளித்து
    பின்,
    மழை ரசிக்கும் தேவதையின்
    சாயலைக்கொண்டிருந்து
    எதிர்பாரா கணத்தில்
    நெருப்பை உமிழும் டிராகனாக
    உருப்பெற்றது புல்லுருவியொன்று.
    முரண்பாடுகளை கவ்விக்கொண்டு
    தேசமெங்கும் பறந்து தீர்த்தது.
    ஆத்மார்த்தமான நட்புக்குள்
    எச்சமிட்டு உன்மத்த நிலையில்
    உயரப்பறக்கிறது இப்போது.

    2.
    எனது சந்தோஷத்தின் சாவியை
    திருடித் தொலைத்துவிட்டு
    ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
    முன் தோன்றுகிறாய்.
    கற்களாலான துர்தேவதைகளின்
    மடியில் துயில்வது
    உனக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
    எதிரிகளின் கூடாரமெங்கும்
    உன் பெயரை ஒலிக்கச்செய்கிறாய்..
    முடிவில்,
    ஒன்று மறந்தாய்..
    மழை தின்ற வெயிலுடன்
    நடக்கிறது உன் யுத்தம்.

    -நிலாரசிகன்.
     
    Loading...

  2. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Niarasigan,

    Let me take the oppurtunity to give the first fb to this beautiful poem...

    கோபம் தின்னும் உம் வரிகள் கூட அழகு தாம்...
    பறவை வேடமிட்ட புல்லுருவியாய் இருந்தாலென்ன,
    உம் வரிகள் எம்மை சிறகு விரிக்கும் பறவையாய்
    வானம் வரை கொண்டு செல்கின்றது...
    இரசனைக்குரியவனின் வரிகள் ரசிக்காமல் போகுமோ?

    Unga pen(keyboard?) ah konjam kadan kodunga pa... adha paarthaavadhu edavathu kavithai varudhaanu parkalaam... :hide:
     
  3. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    தமிழிடம் கடன் கேளுங்கள்...அள்ளித்தருவாள் தமிழ்த்தாய் :)
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nilarasigan

    mikka arumaiyaana arthamulla varigal.
    thanks dear


    ganges
     

Share This Page