Words of Sathguru SaiBaba!

Discussion in 'Pujas Prayers & Slokas' started by itsmebhagi, Nov 22, 2012.

  1. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.


    [​IMG]

    1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

    1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்).
     
    Anaadhi and vaidehi71 like this.
  2. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    கவலைகள் அனைத்தும் தீரும்


    [​IMG]

    [​IMG]

    உங்களுடைய கவலைகள் அனைத்தும் தீரும். பாபாவிடம் ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார். நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள். பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே. பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஓம் சாய்ராம்.
     
    Thyagarajan, Anaadhi and vaidehi71 like this.
  3. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    நூறு மடங்கு திருப்பியளிப்பேன்


    [​IMG]

    "என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனைவிட அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவருக்கு, அவர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா




    [​IMG]
     
    sangrag, sangeethakripa and Anaadhi like this.
  4. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    பாபா நேரிடையாகத் தோன்றினார்

    [​IMG]


    பாலாராம் மாங்கர் என்ற பக்தர் தம் மனைவி இறந்துவிடவே மனம் நொந்து ஷீரடி வந்தடைந்து பாபாவின் நிழலிலே தங்கலானார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த பாபா, அவரிடம் பன்னிரண்டு ரூபாய்களைக் கொடுத்து சதாரா ஜில்லாவிலுள்ள மச்சீந்திரகாத் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார். பாபாவை விட்டுப் பிரிந்து செல்ல முதலில் பிரியப்படாவிடினும், பாபா அவ்வூருக்குச் சென்று தியானம் செய்வது அவருடைய நன்மைக்கே என்று கூறவே மாங்கர் மச்சீந்திரகாத் சென்றார். அங்கே நல்ல இயற்க்கைச் சூழ்நிலையிலே தியானம் செய்து வந்தபோது அவர் ஒரு காட்சியை கண்டார். பாபா அவர் முன்பு நேரிடையாகத் தோன்றினார். தான் ஏன் இவ்வூருக்கு அனுப்பப்பட்டார் என மாங்கர் கேட்க, பாபா, "ஷீரடியில் உன் மனதில் பல எண்ணங்களும் கவலைகளும் எழுந்து மனம் நிலையற்றிருந்தது. நான் மூன்றரை முழு உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருப்பதாக நீ எண்ணியிருந்தாய். நான் ஷீரடியில் மட்டும் தான் இருக்கிறேனா, அல்லது பக்தர்கள் நினைத்த விடங்களிலெல்லாம் இருக்கிறேனா, என்பதைக் கண்டுகொள். இதற்காகவே இவ்வூருக்கு உன்னை அனுப்பினேன்" என்று கூறியருளி மறைந்தார்.

    [​IMG]
     
    sangeethakripa and Anaadhi like this.
  5. sharmi10

    sharmi10 Gold IL'ite

    Messages:
    386
    Likes Received:
    642
    Trophy Points:
    173
    Gender:
    Female
    Om sairam
    Baba your words r true..
    omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam
    omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam
    omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam
    omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam
     
  6. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    பாபாவிடம் சரணடையுங்கள்

    [​IMG]

    எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிரேமை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

    [​IMG]
     
    sangeethakripa and Anaadhi like this.
  7. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    துன்பம் ஒரு முடிவை அடைகிறது

    [​IMG]

    ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி படிகளின் மேல் காலடி எடுத்து வைத்த மறு நிமிடமே அவர்கள் துன்பம் ஒரு முடிவை அடைகிறது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


    [​IMG]
     
    sangeethakripa and Anaadhi like this.
  8. sharmi10

    sharmi10 Gold IL'ite

    Messages:
    386
    Likes Received:
    642
    Trophy Points:
    173
    Gender:
    Female
    Om sairam.. Thank u baba..
     
    sangeethakripa likes this.
  9. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    ஸ்ரீ சாய்பாபாவின் கிருபை

    [​IMG]


    கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்திர பாராயணம் மற்றும் பல செயல்களும் ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை அடைகின்றன. ஸ்ரீ சாயியிடமிருந்து புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் சென்றைடைகின்றன.

    [​IMG]
     
    sangeethakripa, sharmi10 and Anaadhi like this.
  10. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார்

    [​IMG]


    சாய் சத்சரித்திரத்தின் பாதை எளிமையானது; நேர்மையானது. இது படிக்கப்படும் இடம் எல்லாம் துவாரகாமாயி! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம் செய்வார். எங்கு சாய் சத்சரித்திரம் படிக்கபடுகிறதோ, அங்கு சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடன் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(BHA)வங்களுடனும் அங்கு வாசம் செய்வார். ஆத்மானந்தத்தில் திளைக்கும் சாயியை மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதியைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். நம்பிக்கையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் பாபாவிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள். இங்கு காரணவாதமும் தர்க்கமும் செல்லாது; புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது. உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது. சுத்தமான பக்தி உடையவரே பலன் பெறுவர்.

    [​IMG]
     
    Anaadhi likes this.

Share This Page