1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thirukkural Vilakkam In Madras Slang

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 26, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மெட்ராஸ்கார‌னை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும்?


    கற்க கசடற கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத்தக.


    பொருள்: க‌ஸ்மால‌ம், ஒயுங்கா ப‌டி, ப‌ட்ச‌து ப‌ட்சாமாறி ந‌ட்ந்துக்க‌டா, பேமானி!


    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

    நோக்கக் குழையும் விருந்து.


    பொருள்: டேய், வூட்டுக்கு வந்த‌ விருந்தாளி கைல ந‌ல்லா‌ மூஞ்சி குட்து பேசுடா, இல்ல‌ன்னா ப‌ய‌ அனிச்ச‌ம் பூவ‌ மோந்தா மாரி வாடி வுடுவாண்டா ச‌வாரி, அட‌ எங் கேப்மாரி.


    இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று


    பொருள்: சோமாறி, கொய்யாப் ப‌ய‌த்த‌ கைல‌ வ‌ச்சிக்கினு எவ‌னாவ‌து கொய்யாக்காவ‌ துண்ணுவானாடா? ந‌ல்ல‌ வார்த்தையா நாலு பேசுவியா, அத‌ வுட்டுப்புட்டு கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையா பேசிக்கினு கீற‌? காது கொய்யின்னுதுடா, கொய்யால‌!


    புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

    அறம் கூறும் ஆக்கம் தரும்


    பொருள்: ப‌ன்னாட‌, ஒர்த்த‌ன‌ப் ப‌த்திப் பின்னால‌ போட்டுக் குட்து பொய‌க்க‌ற‌தெல்லாம் ஒரு பொய‌ப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவ‌லாம்டா, ச‌னிய‌ம் புட்ச்ச‌வ‌னே!


    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

    சொல்லிய வண்ணம் செயல்


    பொருள்: எவ‌ன் வேணா சும்மா உதார் உட‌லாம் ம‌ச்சி, ..த்தா சொன்னா மாரி செஞ்சிப்பாரு அப்ப‌ தெரியும் மேட்ட‌ரு, நெஞ்சில‌ கீற‌ ம‌ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க‌.



    Let me try one in Kongu பாஷை:

    "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்"


    கொங்கு பொருள்:


    ஒன்ற அம்மணி ரொம்ப ரவுஸ் உட்டான்னா, அடிச்சுப் போடாதே!

    பேசாம அவுகளுக்கே வெக்கம் வர்ற மாற ஏதாவது நல்லது செஞ்சு போடு!"

    Jayasala 42
     
    kkrish likes this.
    Loading...

  2. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    As long as the meaning is not distracted or diluted, explaining something difficult in a medium that is easily understood is fine.
    Good effort ma'am.
     

Share This Page