1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thangame Thangam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 8, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அக்ஷய த்ருதீயை வந்தாலும் வந்தது.ஊரெங்கும் தங்கம் பற்றியே பேச்சு.ஒரு மாதம் முன்பிருந்தே நகைக் கடை விளம்பரங்கள். மாமியார், மருமகள் கூட தங்கள்
    மனக் கசப்பெல்லாம் மறந்து ஒன்றாக நகைக் கடையில் ஆஜர்.
    இப்படியெல்லாம் தங்கத்தின் மஹிமையைப் போற்றுகிறார்கள். தங்கம் பெருமையில் கூத்தாடத் தானே வேண்டும்! தனக்கு மிஞ்சி உலகில் யாரும் இல்லை என்று கர்வத்தின் உச்சிக்குச் செல்ல வேண்டாமா?
    தங்கத்தின் நிலையைப் பாருங்கள் !

    தரம் தாழ்ந்த தங்கம் !
    --------------------------
    ஒரு முறை தங்கம் பிரம்மாவிடம் சென்று அழுது முறையிட்டது .
    பிரம்மா :உலகில் அனைவரும் உன்னை
    மதிக்கிறார்கள் .நீ எதனால் அழுகிறாய்?தட்டார் உன்னை
    சுத்தியால் தட்டுகிறார்கள் .அதனால்
    வருத்தமா ?
    தங்கம் :இல்லை.சுத்தியால் தட்டும்போது நான் தகடாக மாறுகிறேன். தகடு இறைவனுக்கு
    கவசமாக அளிக்கப்படுகிறது .நானே
    கடவுளாகத் துதிக்கப்படுகிறேன் .
    பிரம்மா :உன்னை உருக்குகிறார்களே
    அதனால் வருத்தமா ?
    தங்கம் :உருக்குவதனால் அதிகமாகப்
    பிரகாசிக்கிறேன் .அதனாலும் வருத்தமில்லை
    பிரம்மா:உன்னை மெல்லிய கம்பியாக
    இழுக்கிறார்களே.அதனால் அழுகிறாயா?
    தங்கம் :இல்லை.ருத்ராக்ஷம் துளசி மணி ,பவளம் ,முத்து முதலியவற்றை மாலையாகக் கட்டுவதற்கு கம்பி தானே
    வேண்டும் ?மேலும் நல்ல குணம் உடையவர்களைத் 'தங்கக் கம்பி' என்றுதானே பாராட்டுகிறார்கள்?கம்பியாக மாறுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன்.
    பிரம்மா :உனக்கு வேறு என்னதான் குறை?
    தங்கம்:என்னை ஒரு தாழ்ந்த பொருளுடன் ஒப்பிடுகிறார்களே.
    நல்ல நீருடன் சாக்கடை நீரை ஒப்பிடலாமா?வைரமும் கண்ணாடிக்
    கல்லும் சமமாகுமா?தட்டார் என்னை ஒரு தராசுத் தட்டிலும் ,மட்டமான
    குந்துமணியை இன்னொரு தட்டிலும்
    வைத்து எடை போடுகிறார்களே .அந்த அவமானத்தைத்தான் என்னால் தாங்கவே முடிய வில்லை .

    பிரம்மா அசந்து போய் விட்டார்.

    நாம் படைத்த மக்களுக்குத்தான் சாதி
    வேற்றுமை என்று எண்ணியிருந்தேன்
    உலகிலேயே உயர்ந்த ஸ்தானத்தை
    வகிக்கும் தங்கத்துக்குக் கூடவா இந்த
    சாதி வெறி?என்ன கொடுமையடா ?
    If you are interested in the ancient history of gold, here are some interesting facts about its measurement. In ancient India, gold was weighed with the help of Gunja or Ratti seed because the seed is fairly constant in weight.

    Hallmarking in simple terms is a quality assurance certification that guarantees the purity of gold or silver.
    In India the system is BIS Hallmark which certifies that the piece of jewellery adheres to a set of standards laid by the Bureau of Indian Standards (BIS). The hallmarking is done at the BIS Authorized Labs where the gold or silver in every piece is individually tested for its purity and if found correct, a mark is put on it by laser machine.

    The measure Ratti is equal to one seed.(Kunrimani)
    The other standardizations are as follows

    • 1 tola = 12 masha or 11.67 gram
    • 1 masha = 8 ratti or 0.97 gram
    • 1 tank = 4 mashas or 3.88 gram
    The botanical name of this seed is Abrus Precatorious and it is from the Fabaceae i.e pea family. It is called Coral bead vine, Rosary pea in English, Ratigedi in Nepali, Gunchi in Hindi, Gunjaa in Sanskrit, Gulugunji in Kannada, Gunch in Bengali, Ratti in Gujarati, Kundu mani in Tamil, Gunja in Marathi and Kaincha in Oriya.
    Gunja seeds are 6 to 7 mm long scarlet seeds with black bases. There are 4 to 6 seeds in a pod. Because of their vibrant colour combination and attractive look they are used in the native jewellery, too.

    Jayasala 42
     
    kkrish, Thyagarajan and periamma like this.
    Loading...

Share This Page