உடல் எடை அதிகரித்து அவதியுற்ற நங்கை, உடன் பணி புரியும் நண்பி ஆலோசனை கூற, மருத்துவரிடம் சென்று ஓர் உபாயம் கேட்டிட. மருத்துவர், 'ஓர் எளிய வழி உள்ளது', என்றார்! 'இரண்டு நாட்கள் எப்போதும் போலவே உண்டு, ஒரு நாள் Skip செய்வதே அது' என உரைத்தார்! இரண்டு மாதங்கள் கழிந்த பின்பு வந்த நங்கை, சிறந்த அழகியாக மாறிட, ஆச்சரியித்து, 'இது எப்படி சாத்தியம்?' என வினவ, பதிலளித்தாள், 'எப்படி என்று கேட்கின்றீரா? இரண்டு மாதமாக நான் பட்ட பாடு உங்களுக்குத் தெரியுமா? இது நான் சொல்லித் தெரியணுமா? முதல் இரண்டு நாட்கள் நன்கு உணவு உண்ட பின்பு, மூன்றாம் நாள் முழுவதும் Skip செய்ய, உயிரே போனது!' உணவை Skip செய்யச் சொன்னார் மருத்துவர்! உண்மையாய் Skip செய்து இளைத்தாள் அவள்!! :rotfl :rotfl