1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- 7. ஞானவிஞ்ஞான யோகம்

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Nov 10, 2011.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female


    வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுன!
    விஷ்யாணி ச பூதாநி மாம் து வே ந கஸ்சந!! 26


    அர்ஜுனா! முன் நிகழ்ந்தவற்றையும் இப்போது நிகழ்வனவற்றையும் இனி நிகழ்ப்போகின்றவற்றையும் ஆகிய எல்லாவற்றையும் நான் அறிவேன். ஆனால் சிரத்தையும் பக்தியும் இல்லாத எவரும் என்னை அறியமாட்டார்.

    உண்மையில் பகவான் எங்கும் எக்காலத்திலும் எவ்விடத்திலும் வியாபித்திருப்பதால் அவருக்கு கடந்தகாலம், நிகழ்காலம், வரும் காலம் என்ற காலவறையறை கிடையாது. உலகங்களையும் அவற்றிலுள்ள சகல ஜீவராசிகளையும் பொருட்களையும் அவரே படைப்பதால் அவர் எல்லாவற்றையும் அறிவார். ஆனால் சிரத்தையும் பக்தியும் உள்ளவர்கள் மட்டுமே அவ்ரை அறிவார் என்று கூறுகிறார்.

    இச்சா த்வேஷ ஸமுத்தேந த்வந்த்வ மோஹேந பாரத!

    ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப!! 27

    பரதகுலத்துதித்த அர்ஜுனா! விருப்பு, வெறுப்பு என்கின்ற இரட்டையினால் உண்டாகும் மோகத்தினால் எல்லாப் பிராணிகளும் மயக்கத்தை அடைகின்றன.

    ராகத்வேஷம் என்று கூறப்படும் விருப்பு, வெறுப்பு என்கிற இரட்டையினால் உயிர்கள் யாவும் சுகம், துக்கம் என்கிற மாயையில் மூழ்கிவிடுகின்றன.

    யேஷாம் த்வந்ததம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்!

    தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா ஜந்தே மாம் த்ருவ்ரதா!! 28

    ஆனால் புண்ணிய கர்மாவைச் செய்த எந்த மனிதர்களுக்குத் தீவினை அழிவுற்றதோ அவர்கள் அந்த இரட்டை வடிவான மோகத்தினின்றும் விடுபட்டு உறுதியான மனமுடையவர்களாய் என்னைப் பூஜிப்பார்கள்.

    புண்ணிய கர்மாக்களைச் செய்யும் மனிதர்கள் தீவினையிலிருந்து விடுபட்டு அவர்களுடைய ராகத்வேஷ இரட்டையிலிருந்தும் விடுபடுகிறர்கள். எனவே அவர்கள் திடசித்தத்துடன் எப்போதும் பகவானை வழிபடுகிறார்கள்.

    ஜரா மரண மோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே!

    தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்ம சாகிலம்!! 29

    மூப்பு, இறப்பு இவற்றினின்றும் விடுபடுவதற்காக என்னைச் சரணடைந்து எவர்கள் முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் தத்பரமான பிரம்மத்தையும் , அத்தியாத்வ தத்துவம் முழுவதையும், கர்மங்கள் யாவற்றையும் அறிந்தவராவர்.

    மீண்டும் மீண்டும் பிறவாமல் இருப்பதைத் தவிர்த்தால் தான் மூப்பு, இறப்பு இவற்றினினைத் தவிர்க்க இயலும்.அதற்கு ஒரே வழி மேலே கூறியபடி ராகத்வேஷங்களைத் துறந்து அவரைச் சரணடைந்து உறுதியானமனதுடன் முயற்சியில் ஈடுபடுவதே ஆகும்.

    ஸாதிபூதாதி தைவம் மாம் ஸாதியஜ்ஞம் யே விது:!

    ப்ரயாணகாலேsபி ச மாம் தே விதுர் யுக்தசேதஸ: 30

    மேலும் எவர்கள் என்னை அதிபூதம் அதிதைவம், அதியஜ்ஞம் என்னும் வடிவினனாக அறிகிறார்களோ, அவர்கள் நிலைத்த மனத்தினராய் மரணகாலத்திலும் கூட என்னை அறிவர்.

    அழியும் ஜட வஸ்துக்கள், ஹிரண்யகர்பனாகவுள்ள அதிதைவம், அந்தர்யாமியாகவுள்ள அதி யஜ்ஞம் ஆகிய யாவற்றிலும் உள்ளது பகவான் தான் என்ற உண்மையை அறிந்தவர்கள், உயிர் பிரியும் தருணத்திலும் அவரை அறிந்து அவருடன் ஒன்றிவிடுகிறார்கள்.

    ஓம் தத்ஸதிதி ஸ்ரீத் த்கீதாஸுநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோஸாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம்வாதே ஜ்ஞாநவிஜ்ஞாநயோகோ நாம ஸப்தமோத்யாய:

    இத்துடன் ஸ்ரீமத் பகவத் கீதையில்ஜ்ஞாநவிஜ்ஞாநயோகம்என்னும் ஏழாவது அத்தியாயம் நிறைவு பெற்றது.



    கீதை தொடரும்
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    God dwells in all living and non-living things.
    To put this thought into practice needs more patience too..

    sriniketan
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    Realising this truth itself is very difficult. Then putting it into practice do need patience.
    Love,
    PS
     

Share This Page