1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Religion and Spiritualism-Bhagavad Gita in Tamil- 7. ஞானவிஞ்ஞான யோகம்

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Nov 7, 2011.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female

    யா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராந மீஹதே!


    தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந்!! 22

    அந்த மனிதன் சிரத்தையுடையன் கூடியவனாக அந்த தேவதையின் வழிபாட்டை விரும்பிச் செய்கிறான். மேலும் அந்த தேவதையிடமிருந்து என்னாலேயே அளிக்கப்பட்ட அந்த விரும்பிய போகங்களை நிச்சயமாக அடைகிறான்.

    முற்கூறியது போல போகப் பொருட்களில் ஆசை வைத்து அதை அடையவேண்டி அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய தேவதையை ஆராதிப்பவனுக்கு சிரத்தையைக் கொடுப்பதோடு, அவ்வாறு சிரத்தையோடு ஆராதிப்பவனின் விருப்பத்தை அந்த தேவதையின் மூலம் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறுகிறார்.


    அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத் யல்பமேஸாம்!

    தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி!! 23

    ஆனால் அற்ப புத்தியுடைய அவர்களுக்கு அந்தப் பயன் அழிவுடையதாகும். தேவதகளைப் பூஜிப்பவர்கள் அந்த தேவதைகளை அடைகிறார்க்ள். என்னுடைய பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்.

    சிற்றறிவு படைத்தவர்களே போகப்பொருட்களில் ஆசை வைத்து அதற்குரிய தேவதையைப் பூஜித்து அழியக்கூடிய பயனைப் பெறுவதாகக் கூறுகிறார். ஆனால் என்னிடம் பக்திபூண்டவர்கள் என்னையே அடைந்து என்னைவிட்டுப் பிரியாத நித்யானந்தத்தைப் பெறுகிறார்களென்று கூறுகிறார்.

    அவ்யக்தம் வ்யக்தி மாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:

    பரம் பாவமஜாநந்தோ மமாவ்யய மநுத்தமம்!! 24

    அறிவிலிகள் மாறுபாடில்லாததும் மேம்பட்ட வேறொன்றில்லாததும் ஆன என்னுடைய பரமாத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்களாய் பரமாத்மாவான என்னை மனிதர்களைப்போல் தோற்றத்தை உடையவனாக எண்ணுகிறார்கள்.

    விவேகஞானமில்லாத மனிதர்கள் பரமாத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தை அறியமாட்டாதவர்களாய் தான் அவ்வப்போது பூமியில் அவதாரமெடுப்பதனால் மனிதர்களைப்போல் அவரும் பிறந்திறப்பதாக எண்ணுவதாகக் கூறுகிறார்.


    நாஹம் ப்ரகாஸ: ஸர்வஸ்ய யோமாயா ஸமாவ்ருத:

    மூடோsயம் நாபிஜாநாதி லோகோ மாமஜ மவ்யயம்!! 25

    நான் யோகமாயையால் மூடப்பட்டு எல்லோருக்கும் விளங்குவதில்லை. அறிவில் குறைந்த மானிட சமுதாயம் பிறப்பற்றவனும் மாறுபாடற்றவனுமான என்னை அறிவதில்லை.

    பகவான் உலகிலுள்ள எல்லாப்பொருட்களிலும் உயிர்களிலும் வியாபித்திருந்தாலும் யோகமாயையினால் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார்.சூரியனை மேகம் மறைப்பதைப்போல அஞ்ஞானத்தினால் சூழப்பட்டுள்ள மனிதர்களுக்கு அவர் புலப்படுவதில்லை.

    கீதை தொடரும்
     
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கருத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி புஷ்பா....
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    This leads to the answers for questions like "Why yagnas?". Very nice to read Madam. Thanks. -rgs
     
  4. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள அகிலா,
    தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!
    அன்புள்ள,
    புஷ்பவல்லி


     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear rgs,
    Thank you for dropping in and posting your fb.
    Love,
    PS
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Getting to understand, this Chapter..:)

    sriniketan
     
  7. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    Thank you.
    Love,
    PS
     

Share This Page